7TH - TAMIL - NOTES OF LESSON - FEBRUARY/23 - 2ND WEEK

 

நாள்               :           06-02-2023 முதல் 10-02-2023     

மாதம்                          பிப்ரவரி

வாரம்               :              இரண்டாம்  வாரம்                     

வகுப்பு              :            ஏழாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. உண்மை ஒளி

அறிமுகம்                                 :

Ø  நீங்கள் மற்றவர்களை எவ்வாறு நடத்துவீர்கள்?

Ø  மற்றவர்களிடம் நீங்கள் எவ்வாறு நடந்துக் கொள்வீர்கள்

கற்பித்தல் துணைக் கருவிகள்                  :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்

நோக்கம்                                 :

Ø  படக்காட்சிகள் வழி கருத்துகளைப் புரிந்து கொள்ளுதல்

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு )

                                                உண்மை ஒளி

Ø  படக்காட்சியின் மூலம் கருத்தை கூறல்

Ø  அனைவரையும் உடன் பிறந்தவராக மதிக்கும் பண்பைக் கூறல்

Ø  ஜென் கதைகள் பிறப்பிடம் பற்றிக் கூறல்

Ø  பாடலின் மையக் கருத்தினைக் கூறல்

Ø  அனைவருக்கும் உதவும் பண்பினை வளர்த்தல்

Ø  திருடனிடம் ஏமாந்த குருவின் பெருந்தன்மையைப் போற்றுதல்

Ø  திருடனின் குணத்தால் நல்ல பண்பு கெடும் நிலையைக் கூறல்

 

நினைவு வரைபடம்                   :

                                                                                                 உண்மை ஒளி

 

விளக்கம்  :

( தொகுத்தல் )

உண்மை ஒளி

Ø ஜென் என்னும் ஜப்பானிய மொழிச் சொல்லுக்கு தியானம் செய் என்பது பொருள்

Ø புத்தமதத் துறவிகளில் ஒரு பிரிவினரே ஜென் சிந்தனையாளர்கள்

Ø உலக மக்களை உடன் பிறந்தவராக கருதுவது மனிதப் பண்பு

Ø குரு தன் சீடர்களுக்கு உண்மை ஒளி குறித்து பாடம் நடத்துகிறார்.

Ø மயங்கி விழுந்தவரிடம் கருணை

Ø மயங்கி விழுந்தவன் திருடன்

Ø திருடன் குருவின் குதிரையைத் திருடுதல்

Ø குரு தான் ஏமாந்ததை உணர்தல்

Ø குரு அவனுக்கும் கருணை காட்டுதல்

Ø திருடன் தன் செயலை எண்ணி வருந்துதல்

 

காணொளிகள்                         :

Ø  விரைவுத் துலங்கள் குறியீடு காணொளி காட்சிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொளிகள்

மாணவர் செயல்பாடு :

உண்மை ஒளி

o  ஜென் கதைகளை அறிதல்

o  ஜென் சிந்தனையாளர்கள் பற்றி அறிதல்

o  உண்மை ஒளி பற்றி அறிதல்

o  படக்காட்சிக் கதையினை நடித்தல்.

o  குரு திருடனிடம் ஏமாந்ததை அறிதல்

o  குருவின் தூய மனதை அறிந்து திருடன் வெட்கப்படும் நிலை அறிதல்

o  உலகில் அனைவரையும் தம் உடன் பிறந்தவராக எண்ணுதல்

மதிப்பீடு                                   :

                                                LOT :

Ø  ஜென் என்னும் சொல் ________ மொழிக்குரியது.

Ø  ஜென் என்னும் சொல்லுக்கானப் பொருள் _________

MOT

Ø  குரு தன் சீடர்களுக்கு எதனைப் பற்றி பாடம் எடுத்தார்?

Ø  குரு திருடனிடம் எவ்வாறு ஏமாந்தார்?

HOT:

Ø  உலகில் உள்ள மனிதர்களிடம் இருக்க வேண்டிய உயர்ந்த பண்பாக நீங்கள் கருதுவன யாவை?

Ø  இக்கதையில் வாயிலாக நீ அறிந்த பண்பு யாது?

கற்றல் விளைவுகள்  :

உண்மை ஒளி

·           T703  தாம் பார்த்த ஓவியம் அல்லது காட்சியின் அனுபவத்தை தம் சொந்த சொற்களில் /  சைகை மொழியில் வெளிப்படுத்துதல்

 

Ø  T704 தாங்கள் படித்தவற்றை பற்றி சிந்தித்து அவற்றின் மீதான வினாக்கள் எழுப்புதல் கருத்தாடலைத் தொடங்கி வைத்தல் ஆகியவற்றின் மூலம் தங்களின் புரிதலை மேம்படுத்துதல்

Ø  T710  பாடப்பொருள் ஒன்றை நுட்பமாக நன்கு ஆய்ந்து அதில் சில சிறப்பு கூறுகளைதேடிக் கண்டறிதல்.

தொடர் பணி                            :

Ø  பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்

Ø  ஜென் கதையை நடித்துக் காட்டுக.

 

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post