7TH - TAMIL - NOTES OF LESSON - FEBRUARY/23 - 1ST WEEK

 

நாள்               :           30-01-2023 முதல் 03-02-2023     

மாதம்                          பிப்ரவரி

வாரம்               :              முதல்  வாரம்                     

வகுப்பு              :            ஏழாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. அறம் என்னும் கதிர்

                                        2. ஒப்புரவு நெறி

அறிமுகம்                                 :

Ø  நீங்கள் மற்றவர்களுக்கு எவ்விதமான உதவிகளை செய்துள்ளீர்கள்? அல்லது உங்களுக்கு யாரேனும் உதவி செய்துள்ளார்களா?

Ø  உங்கள் சுற்றுப்புறத்தில் வாழும் உனது நண்பர்களைப் பற்றிக் கூறுக.

கற்பித்தல் துணைக் கருவிகள்                  :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்

நோக்கம்                                 :

Ø  அறநெறிச்சாரப் பாடலில் உள்ள உருவகத்தையும் அறக்கருத்துகளை எடுத்துரைக்கும் பாங்கினையும் படித்தறிதல்.

Ø  ஒரு கருத்தை மையப்படுத்திய கட்டுரைகளின் கருத்து வெளிப்பாட்டுத் தன்மையினை உணர்ந்து பயன்படுத்துதல்.

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு )

                                                அறம் என்னும் கதிர்

Ø  பாடலின் நூற்குறிப்பு, ஆசிரியர் குறிப்புப் பற்றிக் கூறல்

Ø  பாடலினை சீர் பிரித்து வாசித்தல்

Ø  பாடலில் புதிய சொற்களின் பொருள் கூறல்

Ø  பாடலின் மையக் கருத்தினைக் கூறல்

Ø  பாடலின் பொருளை நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிடல்.

Ø  மனப்பாடப் பாடலை இனிய இராகத்தில் வாசித்தல்

Ø  பாடலில் காணும் அறநெறிப் பண்புகளை அறிதல்

ஒப்புரவு நெறி

Ø  வாழ்க்கை குறிக்கோள் பற்றிக் கூறல்

Ø  வாழ்க்கை தொண்டினைப் பற்றிக் கூறல்

Ø  உதவி செய்வதற்குப் பதில் அவரே எடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்குதல் ஒப்புரவு பற்றிக் கூறல்

Ø  ஒப்புரவுவின் இயல்பைப் பற்றி கூறல்

Ø  பொருள் ஈட்டலும் ஒப்புரவும் பற்றிக் கூறல்

Ø  ஒப்புரவின் பயன் பற்றிக் கூறல்

Ø  ஒப்புரவும் கடமையும் பற்றிக் கூறல்

 

நினைவு வரைபடம்                   :

                                                                         அறம் என்னும் கதிர்



ஒப்புரவு நெறி

 

விளக்கம்  :

( தொகுத்தல் )

அறம் என்னும் கதிர்

Ø ஆசிரியர் : முனைப்பாடியார்

Ø நூல் : அறநெறிச்சாரம்

Ø சொல் – விளைநிலம்

Ø ஈகை பண்பு – விதை

Ø களை – வன்சொல்

Ø உண்மை – எரு

Ø அன்பு -நீர்

Ø அறம் - கதிர்

Ø திருமாலை போற்றி பாடியுள்ளார்.

ஒப்புரவு நெறி

Ø  வாழ்க்கை குறிக்கோள் உடையது.

Ø  வாழ்க்கை தொண்டினை குறிக்கோளாக உடையது.

Ø  உதவி செய்வதற்குப் பதில் அவரே எடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்குதல் ஒப்புரவு ஆகும்.

Ø  ஒப்புரவு நெறி சார்ந்த வாழ்க்கை உரிமையும் கடமையும் உடைய வாழ்வு முறையாக அமைவது கடமைகள் உரிமைகளை வழங்குகின்றன

Ø  பொருள் ஈட்டலிலும் அந்தப் பொருளை நுகர்தலிலும் அறிவியல் பாங்கு தேவை.

Ø  செல்வத்துப் பயன் ஒப்புரவு வாழ்க்கை

Ø  இரப்பார்க்கு இல்லென்று இயைவது கரத்தல்.

Ø  ஒப்புரவின் பயன் நுகர்தல்

 

காணொளிகள்                         :

Ø  விரைவுத் துலங்கள் குறியீடு காணொளி காட்சிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொளிகள்

மாணவர் செயல்பாடு :

அறம் என்னும் கதிர்

o  முனைப்பாடியார்ப் பற்றி அறிதல்

o  அறநெறிச்சாரம் பற்றி  அறிதல்

o  அறநெறியை உழவோடு தொடர்புப்படுத்தியுள்ளமையைக் கூறல்

o  அறநெறி பண்புகளை நடைவாழ்க்கையில் செயல்படுத்துதல்

o  புதிய சொற்களுக்கான பொருள் அறிதல்

o  மனப்பாடப்பகுதிகளை மனனம் செய்தல்

ஒப்புரவு நெறி

o   வாழ்வின் குறிக்கோளைப் பற்றி அறிதல்

o   வாழ்வும் ஒப்புரவும் பற்றி அறிதல்

o   ஒப்புரவின் இயல்பு பற்றி அறிதல்

o   பொருள் ஈட்டலில் ஒப்புரவு பற்றி அறிதல்

o   ஒப்புரவின் பயன் பற்றி அறிதல்

o   ஒப்புரவும் கடமையும் பற்றி அறிதல்

o   பாடப்பகுதியினை நிறுத்தற்குறி அறிந்து வாசித்தல்

மதிப்பீடு                                   :

                                                LOT :

Ø  அறநெறிச்சாரம் என்ற நூலை எழுதியவர் யார்?

Ø  ஓருவர் எல்லோருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காகவும் என்பது _______ நெறி

MOT

Ø  அறக்கதிர் விளைய எதனை எருவாக இட வேண்டும் என முனைப்பாடியார் கூறுகிறார்?

Ø  பொருளீட்டுவதை விடவும் பெரிய செயல் எது?

HOT:

Ø  இளம் வயதிலேயே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் எவை எனக் கருதுகிறீர்கள்?

Ø  ஒப்புரவுக்கும் உதவி செய்தலுக்கும் உள்ள வேறுபாடு யாது?

கற்றல் விளைவுகள்  :

அறம் என்னும் கதிர்   

Ø  T712 பல்வேறுவகை படித்தலுக்கான செயல்பாடுகளில் அமைந்துள்ள வெவ்வேறு சொற்கள் சொற்றொடர்கள் ஆகியனவற்றையும் புரிந்து கொண்டு நயம் பாரட்டுதல்

ஒப்புரவு நெறி

Ø  T704 தாங்கள் படித்தவற்றை பற்றி சிந்தித்து அவற்றின் மீதான வினாக்கள் எழுப்புதல் கருத்தாடலைத் தொடங்கி வைத்தல் ஆகியவற்றின் மூலம் தங்களின் புரிதலை மேம்படுத்துதல்

தொடர் பணி                            :

Ø  பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்

Ø  பிறருடன் பேசும் போது நீங்கள் பயன்படுத்தும் இன்சொற்களை எழுதி வருக.

Ø  பிறருக்காக உழைத்துப் புகழ்பெற்ற சான்றோர்களின் பெயர்களை எழுதி வருக.

 

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post