6TH - TAMIL - NOTES OF LESSON - FEBRUARY/23 - 1ST WEEK

  

நாள்               :           30-01-2023 முதல் 03-02-2023     

மாதம்                          பிப்ரவரி

வாரம்               :              முதல்  வாரம்                     

வகுப்பு              :           ஆறாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்

தலைப்பு         :     பசிப்பிணி போக்கிய பாவை

அறிமுகம்                                 :

Ø  நீங்கள் உங்கள் நண்பர்கள் அல்லது இல்லாதவர்களுக்கு எவ்வகையில் உதவி உள்ளீர்கள்?

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                                   :

Ø  பிறர் பசியைப் போக்கும் உயர்சிந்தனையை வளர்த்தல்

ஆசிரியர் குறிப்பு                     :

Ø  பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø  உணவின் முக்கியத்துவம் பற்றிக் கூறல்

Ø  அறம் என்பதனைப் பற்றிக் கூறல்

Ø  நாடகப் பாங்கில் அமைந்த பாடத்தினை உணர்வுகளுக்கு ஏற்றவாறு கூறல்

Ø  மாணவர்களை பங்கேற்று கற்றல் என்பதன் மூலம் மாணவர்களை நடிக்க வைத்தல்

Ø  அறம் சார்ந்த செயல்பாடுகளை செய்ய ஊக்குவித்தல்

Ø  பாடத்தின் மூலம் நல்லொழுக்கத்தினை வளர்த்தல்.

 

கருத்துரு வரைபடம்                 :

பசிப்பிணி போக்கிய பாவை

 


விளக்கம்  :

பசிப்பிணி போக்கிய பாவை

Ø  உணவே உயிர்களுக்கு ஆதாரம்

Ø  மணி பல்லவத் தீவு

Ø  கோமுகி பொய்கை – கோ – பசு, முகி – முகம்

Ø  ஆபுத்திரன் கையிலிருந்த ‘ அமுத சுரபி ‘ அட்சய பாத்திரம்

Ø  அள்ள அள்ள குறையாமல் உணவு வரும்.

Ø  மணிமேகலை கையில் அமுத சுரபி

Ø  அமுத சுரபியில் ஆதிரை உணவு இடுகிறாள்

Ø  மணிமேகலை அமுத சுரபியைக் கொண்டு உடல் குறையுற்றோர், பிணியாளர்,ஆதரவு அற்றோர் என எல்லோருக்கும் உணவு இடுகிறாள்.

Ø  சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாற வேண்டும்.

Ø  சிறைச்சாலையில் அறநெறி கல்வியைப் போதிக்க வேண்டும்.                                          

காணொளிகள்                         :

Ø  விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø   பாடப்பகுதியினை வாசித்தல்

Ø   சீர்ப் பிரித்து  வாசித்தல்

Ø   புதிய சொற்களை அடையாளம் காணுதல்

Ø   புதிய சொற்களுக்கு பொருள் அறிதல்

Ø   பங்கேற்று நடித்தல்

Ø   அறத்தின் பயன் அறிதல்

Ø   தாமும் அறங்களை பின்பற்ற வேண்டிய செயல்களை உணர்தல்

Ø   பாடல் கருத்தை நடைமுறை வாழ்வில் செயல்படுத்துதல்

Ø   பாடலின் பொருளை உணர்தல்

மதிப்பீடு                                   :

                                                LOT :

Ø  மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு __________

Ø  அமுத சுரபியின் சிறப்பு யாது?

MOT :

Ø  கோமுகி என்பது யாது?

Ø  அறநெறிக் கல்வி என்பது யாது?

HOT

Ø  மணிபல்லவத் தீவு எவ்வாறு காட்சி அளித்தது?

Ø  அறச்செயல்கள் என்று நீங்கள் எவற்றை எல்லாம் கருதுகிறீர்கள்?

கற்றல் விளைவுகள்                  :

                                         பசிப்பிணி போக்கிய பாவை

T611 ஒலியியைவு , சந்தம் முதலான யாப்பமைதிக்  கூறுதல் மரபுத் தொடர்கள் போன்ற மொழியின் மரபு நடை நுட்பங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு கதைகள் கட்டுரைகளின் நயம் பாராட்டல்

தொடர் பணி                            :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

Ø  உங்களது நிறை குறைகளைப் பட்டியலிடுக.

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post