அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் அன்பு மாணவச்செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6 முதல் நடைபெற உள்ளது. நாம் அனைவரும் அதனை நோக்கி சென்றுக் கொண்டு இருக்கிறோம். அனைத்து மாணவர்களும் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டுமாய் தமிழ் விதை மற்றும் கல்விவிதைகள் அன்போடு வாழ்த்துகிறது. பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் மாணவர்கள் அனைவரும் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைய கல்விவிதைகள் மற்றும் தமிழ்விதை வலைதளங்கள் பல்வேறு கற்றல் வளங்களை PDF ஆகவும், காணொலிகளாகவும் வழங்கி வருகிறது. உங்களின் பேராதரவு என்றென்றும் எங்களுக்குத் தேவை. மெல்லக் கற்கும் மாணவர்களும் நல்ல முறையில் தேர்ச்சி அடைய பல்வேறு விதமான கற்றல் வளங்களை வழங்கி வருகிறோம். அதனடிப்படையில் தற்போது உங்களுக்கு 100 ஒரு மதிப்பெண் வினாக்களுக்கான வினாடி வினாப் போட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாடி வினாவில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் கலந்துக் கொள்ளலாம். ஆனால் ஒருவர் ஒரு முறை மட்டுமே கலந்துக் கொள்ள முடியும். இதில் 80% மதிப்பெண் பெறுவோருக்கு மின் சான்றிதழ் வழங்கப்படும். இது மாணவர்களுக்கு பயிற்சி வழங்க ஏதுவாக இருக்கும். ஆசிரியர்கள் இதனை தம் வகுப்பு மாணவர்களுக்கு அனுப்பி அவர்களின் கற்றல் அடைவுகளை சோதித்து அறியலாம். மாணவர்கள் இந்த வினாக்களுக்கான விடைகளை காணொலி வாயிலாக கண்டு கேட்டப்பின் கூட இதில் பங்கேற்கலாம்.
இந்த வினா விடைக் காணொலியைக்கான கீழ்காணும் இணைப்பை சொடுக்கவும்.
வினா - விடை காணொலி : CLICK HERE