நாள் : 09-01-2023 முதல் 13-01-2023
மாதம் : ஜனவரி
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : 1. சட்டமேதை அம்பேத்கர்
அறிமுகம் :
Ø மனிதர்களிடையே தகராறு வந்தால் அது தீர்க்கும் இடம் எது? எப்படி தீர்வு கிடைக்கும் என்பன போன்ற வினாக்கள் கேட்டு அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி
நோக்கம் :
Ø சான்றோர்களின் வாழ்க்கையை அறிவதன் மூலம் ஆளுமைப் பண்புகளைப் பெறுதல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø சட்டம் என்றால் என்ன என்பது பற்றிக் கூறல்
Ø சட்டம் மனித வாழ்க்கைக்கு முக்கியம் என்பதனை உணர்த்துதல்
Ø சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பற்றிக் கூறல்
Ø அம்பேத்கர் வாழ்க்கை நிகழ்வுகளைக் கூறல்
Ø அம்பேத்கரின் முக்கியப் பணிகள் மற்றும் பொறுப்புகள் பற்றிக் கூறல்
கருத்து வரைபடம் :
சட்ட மேதை அம்பேத்கர்
விளக்கம் :
( தொகுத்தல் )
சட்டமேதை அம்பேத்கர்
Ø இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்
Ø பிறப்பு : 14-04-1891
Ø பெற்றோர் : ராம்ஜி சக்பால் - பீமாபாய்
Ø 1907 – பள்ளிப்படிப்பு
Ø 1912 – இளங்கலை பட்டம்
Ø 1920 – பொருளாதார பட்டம்
Ø 1924 ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை
Ø காந்தியடிகளுக்கும், அம்பேத்கருக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் பூனா ஒப்பந்தம்.
Ø சுதந்திர தொழிலாளர் கட்சி ஏழை விவசாயிகள், தொழிலாளர்களுக்காக தொடங்கினார்.
Ø சமத்துவ சமுதாயத்திற்காக சமாஜ் சமாத சங்கம் என்னும் அமைப்பைத் தொடங்கினார்.
Ø அம்பேத்கர் தலைமையில் அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்டது.
Ø புத்தரும் அவரின் தம்மமும் என்ற நூலை எழுதினார்.
Ø 1990-இல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
காணொலிகள் :
· விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்
· கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
சட்டமேதை அம்பேத்கர்
மாணவர் செயல்பாடு :
Ø புதிய வார்த்தைகளைக் காணுதல்
Ø புதிய வார்த்தைகளுக்கான பொருளை அகராதிக் கொண்டு காணுதல்
Ø அம்பேத்கரைப் பற்றி அறிதல்
Ø சட்டம் பற்றிய புரிதல் கொள்ளுதல்
Ø அம்பேத்கர் மக்களுக்கு ஆற்றியப் பணிகளை அறிதல்
Ø இந்திய நாட்டின் சட்டம் பல்வேறு நாடுகளின் சட்டங்களை ஆராய்ந்து இயற்றப்பட்டது என்பதன அறிதல்
மதிப்பீடு :
LOT :
Ø அம்பேத்கர் இயற்பெயர் யாது? ________
Ø அம்பேத்கர் எப்போது பிறந்தார்?
MOT
Ø அம்பேத்கர் தன் பெயரை ஏன் மாற்றிக் கொண்டார்?
Ø வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளும் முன் அம்பேத்கர் கூறியது யாது?
HOT
Ø பூனா ஒப்பந்தம் பற்றிக் கூறுக
Ø பாகுபாடில்லாத மக்கள் சமூகம் உருவாக நமது கடமைகளாக நீங்கள் கருதுவன யாவை?
கற்றல் விளைவுகள் :
சட்டமேதை அம்பேத்கர்
Ø T801 மாணவர்கள் பல்வேறு வகையான தலைப்புகளில் பாடப் பொருள்களின் மீது எழுதப்பட்டவற்றை படித்து கலந்துரையாட செய்தல்
Ø T808 ஒரு கட்டுரையை படித்த பின்னர் அதன் சமூக மதிப்புகள் குறித்த கலந்துரையாடல் ,சில வினாக்களுக்கு விடை காண முற்படல்
Ø T809 படித்தனவற்றை பற்றி நன்கு சிந்தித்து புரிதலை மேலும் சிறப்பாக்குதல்
தொடர் பணி :
Ø மதிப்பீடு வினாக்களுக்கு விடை எழுதி வருக
Ø சமூகச் சீர்திருத்தத்திற்கு உழைத்த பிற தலைவர்களின் பெயர்களைப் பட்டியலிடுக
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை