8TH - TAMIL - NOTES OF LESSON - JANUARY/23 - 1ST WEEK

  

நாள்               :           02-01-2023 முதல் 06-01-2023     

மாதம்                          ஜனவரி

வாரம்               :              முதல்   வாரம்                     

வகுப்பு              :           எட்டாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. உயிர்க்குணங்கள்

                                         2. இளையத் தோழனுக்கு

அறிமுகம்                 :

Ø  உன் நண்பரிடம் காணும் நற்பண்புகளைப் பட்டியலிட்டு கூறுக.

Ø  பாரா ஒலிம்பிக்கில் வென்ற தங்கவேல் மாரியப்பன் சாதனையை குறும்படம் வாயிலாக காண்பித்து அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி

நோக்கம்                                   :

Ø  பாவை நூலின் வழி மனிதர்களின் இயல்பை அறிதல்

Ø  தன்னம்பிக்கையின் இன்றியாமையைப் புதுக்கவிதை வழியாக உணர்தல்

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  பாவை நோன்பு பற்றி கூறல்

Ø  பாவை நூல்கள் பற்றிக் கூறல்

Ø  நிலைப்பெற்ற மனிதர்களிடம் காணும் பண்புகளை அறிதல்

Ø  நூலின் ஆசிரியர் பற்றிக் கூறல்

Ø  மு.மேத்தா பற்றிக் கூறல்

Ø  தன்னம்பிக்கை வளர்க்கும் பாடலைப் பற்றி விளக்கம் கூறல்.

கருத்து  வரைபடம்                   :

உயிர்க்குணங்கள்




 

இளையத் தோழனுக்கு

 

விளக்கம்  :

( தொகுத்தல் )

உயிர்க்குணங்கள்

Ø  விடியும் முன்பு பெண்கள் துயிலெழுந்து ஆற்றுக்குச் சென்று நீராடி, இறைவனை வழக்கம் உண்டு, இது பாவை நோன்பு என்பர்.

Ø  பிற பெண்களை எழுப்புவதாக ஆண்டாள் பாடியது திருப்பாவை

Ø  அறிவு,கருணை,ஆசை,அச்சம்,அன்பு,இரக்கம்….நிலைபெற்ற மனிதர்களிடம் காணப்படும் பண்பு

Ø  இறையரசன் இயற்பெயர் : சே.சேசுராசா

இளைய தோழனுக்கு

Ø  வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் மு.மேத்தா

Ø  செயல்பட தொடங்கு நாளை மட்டுமல்ல இன்றும் நமது நாள் தான்.

Ø  உன் உயர்விற்கு நீயே தூண்டுகோலாவாய்

Ø  உன்னை பாராட்ட ஒருவரும் தேவையில்லை.

Ø  நீ கிளர்ந்து எழுந்தால் அதுவே உனக்கு பாதையாகும்.

Ø  கதிரவன் உன் விரல்களில் விளக்காக ஒளி வீசும்    

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

                                இளையத் தோழனுக்கு.....


 

மாணவர் செயல்பாடு                     :

Ø  புதிய வார்த்தைகளைக் காணுதல்

Ø   புதிய வார்த்தைகளுக்கான பொருளை அகராதிக் கொண்டு காணுதல்

Ø  பாடலினைப் பற்றி புரிதல் கொள்ளுதல்

Ø  பாவை பற்றியும், பாவை நோன்பு பற்றியும் அறிதல்

Ø  மனிதர்களிடம் இருக்க வேண்டிய பண்புகளைப் பற்றி அறிதல்

Ø  தன்னம்பிக்கைப் பற்றி பாடல் வழியே அறிதல்

Ø  தன்னம்பிக்கை வாழ்வில் முக்கியம் என்பதனை உணர்தல்

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  அடுத்தவர் வாழ்வைக் கண்டு _______ கொள்ளக் கூடாது

Ø  கவலைகள் _____ அல்ல

MOT

Ø  மனிதர்களின் பொது இயல்பாகக் கன்னிப்பாவை நூல் கூறுவது யாது?

Ø  பூமி எப்போது பாதையாகும்?

HOT

Ø  மனிதர்கள் வளர்க்க வேண்டிய பண்புகளாகவும், விலக்க வேண்டிய பண்புகளாகவும் நீங்கள் கருதுவன யாவை?

Ø  வாழ்வில் உயர நம்பிக்கையைப் போன்று வேறு என்னென்ன பண்புகள் தேவை என்று நீங்கள் கருதுவீர்கள்?

கற்றல் விளைவுகள்                  :

உயிர்க்குணங்கள்

Ø  T807  கதைகள், பாடல்கள் ,கட்டுரைகள், அறிக்கைகள், நினைவுகள், நகைச்சுவை போன்ற பல்வேறு வகை பட்டவற்றை படிக்கும் போது அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட செய்திகளை கண்டறிதலிலும் ஊகித்தறிதலிலும்

Ø  T809    படித்தனவற்றை பற்றி நன்கு சிந்தித்து புரிதலை மேலும் சிறப்பாக்குதல்

Ø  T810 பல்வேறு வகை படித்தல் பொருள்களில் காணப்படும் சொற்கள், தொடர்கள், மரபுத்தொடர்கள் ஆகியவற்றை புரிந்து கொண்டு நயம் பாராட்டுதல்

                                        இளையத் தோழனுக்கு

Ø  T802   செய்தித்தாள்கள் , இதழ்கள் , கதைகள், தகவல் பகுதிகள்,இணையம் போன்றவற்றில் தமிழில் உள்ள பல்வேறு வகை எழுத்துக்களை படித்து புரிந்து கொண்டு அவற்றின் மீது கருத்துரை பகர்தல் முடிவு கூறல் மற்றும் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துதல்

Ø  T807  கதைகள், பாடல்கள் ,கட்டுரைகள், அறிக்கைகள், நினைவுகள், நகைச்சுவை போன்ற பல்வேறு வகை பட்டவற்றை படிக்கும் போது அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட செய்திகளை கண்டறிதலிலும் ஊகித்தறிதலிலும்

 

தொடர் பணி                            :

Ø   மதிப்பீடு வினாக்களுக்கு விடை எழுதி வருக

Ø   திருப்பாவைப் பாடலை எழுதி வருக

Ø   நம்பிக்கையே வெற்றி – என்பதனை உணர்த்தும் கதை ஒன்றினை எழுதி வருக

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post