7TH - TAMIL - NOTES OF LESSON - JANUARY/23 - 1ST WEEK

   

நாள்               :           02-01-2023 முதல் 06-01-2023     

மாதம்                          ஜனவரி

வாரம்               :              முதல்   வாரம்                     

வகுப்பு              :           ஏழாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. விருந்தோம்பல்

                                         2. வயலும் வாழ்வும்

அறிமுகம்                                 :

Ø   உன் வீட்டிற்கு வரும் விருந்தினரை நீ எவ்விதம் உபசரிப்பாய்?

Ø  நீ வாழும் பகுதியில் உழவு தொழில் நடைபெறும் விதத்தைக் கூறுக.

கற்பித்தல் துணைக் கருவிகள்                  :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்

நோக்கம்                                 :

Ø  பதினெண்கீழ்கணக்கு நூல்கள் காட்டும் சமூக வாழ்வியலைப் புரிந்துக் கொள்ளுதல்

Ø  எளிய நாட்டுப்புறப் பாடல்களின் ஓசை நயத்தையும், அதில் பொதிந்துள்ள சமூகச் செய்திகளையும் புரிந்துக் கொள்ளுதல்.

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  பாடப்பகுதியினை அறிமுகம் செய்தல்

Ø  சீர் பிரித்து வாசித்தல்

Ø  புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்

Ø  புதிய வார்த்தைகளுக்கான பொருள் அறிதல்

Ø  பாடலின் பொருளை நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிடல்

Ø  மனப்பாடப்பாடலை இனிய இராகத்தில் பாடுதல்

Ø  நாட்டுப்புறப் பாடலை இனிய இராகத்தில் பாடுதல்

Ø  சமூக நிகழ்வுகளைப் புரிந்துக் கொள்ளுதல்

நினைவு வரைபடம்                   :

                                                                                  விருந்தோம்பல்





வயலும் வாழ்வும்

 

விளக்கம்  :

( தொகுத்தல் )

விருந்தோம்பல்

Ø   மழையின்றி வறட்சி நிலவிய காலத்தில், பாரி மகளிரான அங்கவை, சங்கவை ஆகியோரிடம் பாணர்கள் இரந்து நின்றனர்.

Ø   பாரிமகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர்.

Ø    அதனால் பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம்

வயலும் வாழ்வும்

·         மக்கள் தங்கள் உழைப்பின் களைப்புத் தெரியாமல் இருக்க வாயால் பாடும் பாட்டு நாட்டுப்புறப் பாடல்

·         வாய்மொழி இலக்கியம் எனவும் கூறுவர்

·         உழவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களின் உழைப்பின் களைப்பு தெரியாமல் இருக்கிற பாடல்

·         போரடித்தல் பற்றி அறிதல்

 

காணொளிகள்                         :

Ø  விரைவுத் துலங்கள் குறியீடு காணொளி காட்சிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொளிகள்

மாணவர் செயல்பாடு :

o  ஆசிரியர் குறிப்பு, நூற் குறிப்பு அறிதல்

o  செய்யுளினைச் சீர் பிரித்து வாசித்தல்

o  செய்யுளில் புதிய சொற்களுக்கான பொருள் அறிதல்

o  செய்யுளில் காணப்படும் கருத்தினை நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிடல்

o  மனப்ப்பாடப் பகுதியினை மன்னம் செய்தல்

o  மனப்பாடப்பகுதியினை இனிய இராகத்தில் பாடுதல்

o  உழவின் மேன்மையை அறிதல்

o  நாட்டுப்புறப் பாடல்களில் காணப்படும் சமூக நிலையைப் புரிந்துக் கொள்ளுதல்

மதிப்பீடு                                   :

                                                LOT :

Ø  மரம் வளர்த்தால்_________பெறலாம்

Ø  உழவர் சேற்று வயலில் _________ நடுவர்.

MOT

Ø  பாரி மகளின் பெயர்களைக் கூறுக

Ø  உழவர்கள் எப்போது நண்டுப் பிடித்தனர்?

HOT:

Ø  தமிழரின் பிற பண்பாட்டுக் கூறுகள் யாவை?

Ø  உழவுத் தொழிலில் இன்று ஏற்பட்டுள்ள நடைமுறை மாற்றங்கள் யாவை?

கற்றல் விளைவுகள்  :

விருந்தோம்பல்

T710  பாடப்பொருள் ஒன்றை நுட்பமாக நன்கு ஆய்ந்து அதில் சில சிறப்பு கூறுகளைதேடிக் கண்டறிதல்.

வயலும் வாழ்வும்

Ø  T705  தாங்கள் வாழும் சமூகம் அல்லது நிலப்பகுதிகள் நாட்டுப்புற இலக்கியங்கள் பாடல்கள் பற்றி கலந்துரையாடி அவற்றின் நயம் பாராட்டுதல்

 

தொடர் பணி                            :

Ø  பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்

Ø  வள்ளல்கள் எழுவரின் பெயர்களை எழுதி வருக

Ø  உழவு செய்யப்பயன்படும் பொருட்களின் படத்தொகுப்பு உருவாக்குக

 

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post