நாள் : 21-11-2022 முதல் 25-11-2022
மாதம் : நவம்பர்
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : 1. சந்தை
2. ஆகுபெயர்
அறிமுகம் :
Ø உங்கள் ஊரில் உள்ள
சந்தைப் பற்றி கூறுக
Ø தமிழரசி வள்ளுவரை ஓவியமாக
வரைந்தாள்
தமிழரசி வள்ளுவரைப்
பார்த்தாள் – இரண்டுத் தொடர்களின் பொருள் வேறுபாட்டினைக் கேட்டு அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø ஒளிப்பட
வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,
வில்லு இசைக் கருவி, பானை
நோக்கம் :
·
பல்வேறு நூல்களைப் படித்து, ஒரு தலைப்பையொட்டிக் கருத்துகளை
ஒருங்கிணைத்துக் கூறும் திறனை வளர்த்துக் கொள்ளுதல்
·
மொழிப் பயன்பாட்டில் ஆகுபெயர் எவ்விதம் வெளிப்படுத்தப்படுகிறது
என்பதனைக் கண்டறிதல்
ஆசிரியர் குறிப்பு :
Ø பல்லங்காடி என்பதனை அறிதல்
Ø நாளங்காடி, அல்லங்காடி
என்பதனை அறிதல்
Ø பண்டமாற்று முறை பற்றிக்
கூறுதல்
Ø சந்தையின் தன்மையினைம கூறல்
Ø அன்றைய சந்தையும், இன்றைய
வணிக வளாங்களையும் ஒப்பிடல்
Ø ஆகுபெயர் என்பதனைப் பற்றிக்
கூறல்
Ø ஆகுபெயரின் வகைகளைப் பற்றிக்
கூறல்
Ø ஆகுபெயருக்கு நடைமுறை உதாரணங்களைக்
கூறல்
கருத்து வரைபடம் :
சந்தை
ஆகுபெயர்
விளக்கம் :
( தொகுத்தல் )
சந்தை
·
அனைத்துப் பொருட்களுக்கும் விற்கும் அங்காடி பல்லங்காடி
·
பகலில் செயல்படும் அங்காடி – நாளங்காடி
·
இரவில் செயல்படும் அங்காடி - அல்லங்காடி
·
பண்ட மாற்று முறை – பண்டம் கொடுத்து பண்டம் பெறுவது
·
சந்தை – வார சந்தை , மாத சந்தை
ஆகுபெயர்
·
ஒன்றன் இயற்பெயர் மற்றொன்றிற்கு ஆகி வருவது ஆகுபெயர்
·
ஆகுபெயர் – 16 வகைகள்
·
பொருளாகு பெயர் – முதற்பொருளுக்கு ஆகிருவது
·
இடவாகு பெயர் – இடத்திற்கு ஆகி வருவது
- காலவாகு பெயர் – காலத்திற்கு
ஆகி வருவது
- சினையாகு பெயர் –
உறுப்புக்கு ஆகி வருகிறது
- பண்பாகு பெயர் – பண்புக்கு
ஆகி வருவது
- தொழிலாகு பெயர் – தொழிலுக்கு
ஆகி வருவது
- கருவியாகு பெயர் –
காரியத்திற்கு ஆகி வருவது
- காரியவாகு பெயர் –
கருவிக்கு ஆகி வருவது
- கருத்தவாகு பெயர் –
கருத்தாவின் பெயர் இயற்றவருக்கு ஆகி வருவது
- எண்ணலளவை ஆகுபெயர்
– எண்கள் தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது
- எடுத்தலளவை ஆகுபெயர்
– அளவை பெயர் அதன் பொருளுக்கு ஆகி வருவது
- முகத்தலளவை ஆகு பெயர்
- அளவை பெயர் அதன் பொருளுக்கு ஆகி வருவது
- நீட்டலளவை ஆகுபெயர்
- அளவை பெயர் அதன் பொருளுக்கு ஆகி வருவது
காணொலிகள் :
·
விரைவுத் துலங்கல் குறியீடு
காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
ஆகுபெயர்
·
வலையொளி காணொலிகள்
மாணவர்
செயல்பாடு :
Ø விரிவானப் பகுதியினை வாசித்தல்
Ø நிறுத்தற்குறி அறிந்து வாசித்தல்
Ø புதிய சொற்களை அறிந்து வாசித்தல்
Ø விரிவானப் பகுதியின் மையக்
கருத்தினை அறிதல்
Ø விரிவானப் பகுதியினை நடைமுறை
வாழ்வியலோடு தொடர்புப்படுத்துதல்
Ø ஆகுபெயர் என்பதனை அறிதல்
Ø ஆகுபெயரின் வகைகளை அறிதல்
Ø ஆகுபெயரின் உதாரணங்களை நடைமுறை
வாழ்வியலோடு ஒப்பிடல்
மதிப்பீடு :
LOT
:
Ø பல்லங்காடி
என்பது யாது?
Ø ஆகுபெயர்
என்றால் என்ன?
MOT
Ø நாளங்காடி,
அல்லங்காடி பற்றிக் கூறுக
Ø
பட்டப்
பெயர்கள் ஆகுபெயர் ஆகுமா?
HOT
Ø வணிகம்
சார்ந்த பழமொழி, தொடர்களை கூறுக
Ø தற்காலத்தில்
ஆகுபெயரை எவ்வாறு பயன்படுத்துகிறோம்?
கற்றல் விளைவுகள் :
Ø 36. ஒரு தலைப்பையொட்டிக்
கருத்துகளை ஒருங்கிணைத்து உரையாடலாக/கலந்துரையாடலாக வெளிப்படுத்துதல்
Ø 37. மொழிப் பயன்பாட்டில்
ஆகுபெயர் எவ்விதம் வெளிப்படுத்தப்படுகிறது என்பதை அறிந்து கையாளுதல்
தொடர் பணி :
Ø புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________