நாள் : 14-11-2022 முதல் 18-11-2022
மாதம் : நவம்பர்
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : 1. முத்தொள்ளாயிரம்
2. மதுரைக் காஞ்சி
அறிமுகம் :
Ø உங்கள் ஊரினைச் சுற்றியுள்ள
இயற்கைச் சூழல்கள் குறித்து கேட்டு அறிமுகம் செய்தல்
Ø நீங்கள் சென்று வந்த வெளியூர்
பயணங்கள் குறித்து கேட்டு அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø ஒளிப்பட
வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,
வில்லு இசைக் கருவி, பானை
நோக்கம் :
·
இலக்கியங்கள் காட்டும் நாட்டு வளம் குறித்த செய்திகளைஅறிந்து நாட்டை
வளப்படுத்தும் ஊக்கத்தைப் பெறுதல்
·
சங்ககால மதுரைநகரக் காட்சிகளை இலக்கியங்கள் வழி அறிதல்
ஆசிரியர் குறிப்பு :
(ஆசிரியர் செயல்பாடு )
Ø முத்தொள்ளாயிரம் குறித்து
கூறல்
Ø பண்டைய சங்க கால தமிழ்நாட்டின்
மூன்று நாடுகளின் வளங்களைக் கூறல்
Ø சேர நாட்டின் வளத்தைப் பற்றிக்
கூறல்
Ø சோழ நாட்டின் வளத்தைப் பற்றி
கூறல்
Ø பாண்டிய நாட்டின் வளத்தைப்
பற்றிக் கூறல்
Ø மதுரைக் காஞ்சிப் பற்றிக்
கூறல்
Ø மதுரைக் காஞ்சியில் கூறப்பட்டுள்ள
மதுரையின் அழகினை கூறல்
Ø புதிய வார்த்தைகளை கூறி அதன்
பொருளைக் கூறல்
கருத்து வரைபடம் :
முத்தொள்ளாயிரம்
மதுரைக்காஞ்சி
விளக்கம் :
( தொகுத்தல் )
முத்தொள்ளாயிரம்
·
வெண்பாவில் எழுதப்பட்ட நூல் – முத்தொள்ளாயிரம்
·
சேர, சோழ, பாண்டியர் என்று பொதுவாகப் பாடுகிறது
·
சேர நாடு : சேரனின் நாட்டில் அச்சம் இல்லை
·
சோழநாடு : வளமும் வீரமும் மிக்கது
·
பாண்டிய நாடு: முத்து வளம் மிக்கது
மதுரைக்காஞ்சி
·
பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று
·
மதுரையின் சிறப்பையும், நிலையாமை சிறப்பையும் கூறுவதால் மதுரைக்காஞ்சி
எனப்பட்டது.
·
782 அடிகளைக் கொன்டது
·
மதுரை மாநகர்
- தெளிந்த அகழி உள்ளது
- பழமையும், தெய்வத்தன்மையும்
வாய்ந்த வாயில்கள் உள்ளது
- வையை ஆற்றைப் போல
மக்கள் வாயில்களில் வந்து செல்கின்றனர்
- நல்ல சாளரங்களை உடைய
வாயிலக் உள்ளன.
- மண்டபம், கூடம்,
அடுக்களை என உள்ளன.
- பல்வேறு மொழிகளை பேசும்
மக்கள் பொருட்களை வாங்க வருகின்றனர்.
- முரசறைவோன் முழக்கம்
கடலொலிபோல உள்ளது
- நாளங்காடி, அல்லங்காடி
ஓவியம் போல காட்சி தரகின்றன
காணொலிகள் :
·
விரைவுத் துலங்கல் குறியீடு
காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
முத்தொள்ளாயிரம்
·
வலையொளி காணொலிகள்
மாணவர்
செயல்பாடு :
Ø செய்யுளினை சீர் பிரித்துப்
படித்தல்
Ø செய்யுளில் காணும் புதியச்
சொற்களை அடிக்கோடிடல்
Ø புதியச்சொற்களுக்கான பொருளை
அகராதிக் கொண்டு பொருள் காணல்
Ø மனப்பாடப் பகுதியினை மனனம்
செய்தல்
Ø சேரநாடு, சோழநாடு,பாண்டிய
நாடு -நாட்டின் வளங்களை அறிதல்
Ø நாட்டின் வளங்களைப் பாதுகாத்தல்
Ø மதுரைக் காஞ்சி பற்றி அறிதல்
Ø மதுரையின் அழகினை பாடப்பகுதிக்
கொண்டு அறிதல்
Ø செய்யுளில் காணும் புதிய
வார்த்தைகளை இனம் காணல்
Ø மதுரை மாநகரின் சிறப்புகளை
அறிதல்
மதிப்பீடு :
LOT
:
Ø முத்தொள்ளாயிரம்
என்ற நூலை எழுதியவர் யார்?
Ø மதுரைக்காஞ்சியை
இயற்றியவர் யார்?
MOT
Ø சேரனின்
நாட்டில் அச்சம் இருக்கின்றது என்பதனை பாடல் எவ்வாறு கூறுகிறது?
Ø
நிலையாமை
என்பது என்ன?
HOT
Ø நாட்டின்
வளங்களை நாம் எவ்வாறு பாதுகாக்கலாம்?
Ø மதுரை
மாநகருக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பினைக் கூறுக
கற்றல் விளைவுகள் :
Ø இலக்கியங்கள் காட்டும் நாட்டு
வளம் குறித்த செய்திகளைஅறிந்து நாட்டை வளப்படுத்தும் ஊக்கத்தைப் பெறுதல்
Ø இலக்கியங்கள் வழி
அறிந்த நகர அமைப்பை இன்றைய நிலையுடன் ஒப்பிட்டு பேசுதல்
தொடர் பணி :
Ø புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________