9TH - TAMIL - ALL UNIT - BOOK BACK TWO MARK - QUESTION BANK

 

இளந்தமிழ் - சிறப்பு பயிற்சி புத்தகம்

ஓன்பதாம்  - தமிழ்

 

புத்தக குறு வினாக்கள்

( இயல் - 1 )

) குறுவினாக்கள்

 1. நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?

 2. தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.

3. கண்ணி என்பதன் விளக்கம் யாது?

4. கணினி சார்ந்து நீங்கள் அறிந்த எவையேனும் ஐந்து தமிழ்ச் சொற்களைத் தருக .

5. அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் – அவை அமைந்ததைச் சொல் லும் இலக்கணங்கள் – இலக்கியங்களின் பாடுபொருள்களாக இவ்வடிகள் உணர்த்துவன யாவை?

 6. செய்வினையைச் செயப்பாட்டு வினையாக மாற்றும் துணைவினைகள் இரண்டினை எடுத்துக்காட்டுடன் எழுதுக.

 7. வீணையோ டு வந்தாள், கிளியே பேசு – தொ டரின் வகையைச் சுட்டுக.

( இயல் - 2 )

            8. “கூவல்” என்று அழைக்கப்படுவது எது?

9. உங்களது பள்ளியைச் சுற்றியுள்ள நீர்நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

10. உண்டி கொ டுத்தோர் உயிர் கொடுத்தோரே – குறிப்புத் தருக.

11. நிலையான வானத்தில் தோ ன்றி மறையும் காட்சிக்குப் பெரியபுராணம் எதனை ஒப்பிடுகிறது?

12. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண் - இக்குறள் கூறும் நாட்டின் அரண்கள் யாவை?

( இயல் - 3 )

13. நீங்கள் வாழும் பகுதியில் ஏறுதழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?

14. தொல்லியல் சான்றுகள் காணப்படும் இடங்களை அகழாய்வு செய்யவேண்டும். ஏன்?

15. ஏறுதழுவுதல் நிகழ்விற்கு இலக்கியங்கள் காட்டும் வேறுபெயர்களைக்குறிப்பிடுக.

16.பழமணல் மாற்றுமின்; புதுமணல் பரப்புமின் - இடஞ்சுட்டிப் பொருள்விளக்குக.

17. பட்டிமண்டபம், பட்டிமன்றம் – இரண்டும் ஒன்றா? விளக்கம் எழுதுக.

18. ஏறுதழுவுதல் குறித்துத் தொல் லியல் சான்றுகள் கிடைத்த இடங்களைப் பட்டியலிடுக

. ( இயல் - 3 )

திருக்குறள்

19) படத்திற்கேற்ற குறளைத் தேர்வு செய்க.


அ) நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்

             பேணாமை பேதை தொழில்.

ஆ) விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்

    கேளாது நட்டார் செயின்.

இ) செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

    செல்வத்துள் எல்லாந் தலை.

20. பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.

பாடல்

ஆண்டில் இளையவனென்று அந்தோ அகந்தையினால்

ஈண்டிங்கு இகழ்ந்தென்னை ஏளனம்செய் – மாண்பற்ற

காரிருள்போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்

பாரதி சின்னப் பயல்.

குறள்

அ) செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

    அவியினும் வாழினும் என்.

 ஆ) மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

   தகுதியான் வென்று விடல்.

இ) குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்

21. பொருளுக்கேற்ற அடியைக் கண்டுபிடித்துப் பொருத்துக.

1) பசுமண் கலத்துநீர் பெய்திரீஇ யற்று  - அ) ஒருவனின் செயல்பாடுகளே உரசி அறியும் உரைகல்

2) தத்தம் கருமமே கட்டளைக்கல் – ஆ) அவ்வளவிற்குப் பெருமை உண்டாக்கும்

3) அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் -  இ) சுடாத மண்கலத்தில் நீரூற்றி வைப்பதைப் போல

விடை :

1. பசுமண் கலத்துநீர் பெய்திரீஇ யற்று  - இ) சுடாத மண்கலத்தில் நீரூற்றி வைப்பதைப் போல

2. தத்தம் கருமமே கட்டளைக்கல் - அ) ஒருவனின் செயல்பாடுகளே உரசி அறியும் உரைகல்

3) அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் - ஆ) அவ்வளவிற்குப் பெருமை உண்டாக்கும்

22. தீரா இடும்பை தருவது எது?

அ. ஆராயாமை, ஐயப்படுதல்                    ஆ. குணம், குற்றம்

இ. பெருமை, சிறுமை                 ஈ. நாடாமை, பேணாமை

23. சொல்லுக்கான பொருளைத் தொடரில் அமைத்து எழுதுக.

அ. நுணங்கிய கேள்வியர் - நுட்பமான கேள்வியறிவு உடையவர்

ஆ. பேணாமை – பாதுகாக்காமை

இ. செவிச் செல்வம் – கேட்பதால் பெறும் அறிவு

ஈ. அறனல்ல செய்யாமை – அறம் அல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல்

24. நிலம் போல யாரிடம் பொறுமை காக்க   வேண்டும்?

25. தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். இக்குறட்பாவின் கருத்தை விளக்குக.

26. ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்

    ஒற்றினால் ஒற்றிக் கொளல். இக்குறட்பாவில் அமைந்துள்ள நயங்களை எழுதுக.

27. கனவிலும் இனிக்காதது எவர் நட்பு?

. ( இயல் - 4 )

28. கூட்டுப் புழுவை எடுத்துக்காட்டிக் கவிஞர் உணர்த்தும் கருத்துகளை எழுதுக.

29.. இணையவழியில் இயங்கும் மின்னணு இயந்திரங்கள் எவையேனும் ஐந்தினைக் குறிப்பிடுக.

30. மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே

      நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே

      ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே

இவ்வடிகளில் தொல்காப்பியர் குறிப்பிடும், மூவறிவு, நான்கறிவு, ஐந்தறிவு உயிர்கள் யாவை?

31. செயற்கைக்கோள் ஏவு ஊர்தியில் பொருத்தும் செயலியைப் பற்றி திரு.சிவன் கூறுவது யாது?

 ( இயல் – 5 )

            32.. தலைவியின் பேச்சில் வெளிப்படுகின்ற பாடுபொருள் யாது?

33. மூவாது மூத்தவர், நூல் வல்லார்- இத்தொடர் உணர்த்தும் பொருளைக் குறிப்பிடுக

34. நீங்கள் மிகவும் விரும்பிப் படித்த நூல்கள் யாவை?

35. சாரதா சட்டம் எதற் காக இயற்றப்பட்டது?

( இயல் – 6 )

            36. செப்புத் திருமேனிகள் பற்றிக் குறிப்பு வரைக

37. நடுகல் என்றால் என்ன?

38. இசைத் தூண்கள் யார் காலத்தில் அமைக்கப்பட்டவை?

39. கண்ணன் புகுந்த பந்தல் எவ்வா று இருந்தது?

40 இடிகுரல் , பெருங்கடல் – இலக்கணக் குறிப்புத் தருக.

41. பாலை நிலத்தில் பருந்துகள் பறந்ததன் காரணம் என்ன?

( இயல் – 6 )

திருக்குறள்

            42. இறக்கும் வரை உள்ள நோய் எது?

43.அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு

                 ஐந்துசால்பு ஊன்றிய தூண்

                 இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்கி எழுதுக.

44. உலகத்திற்கு அச்சாணியாய் இருப்பவர் யார்?ஏன்?

45. காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்

                கண்டானாம் தான்கண்ட வாறு

                இக்குறட்பாவில் பயின்று வரும் தொடை நயத்தை விளக்குக.

( இயல் – 7 )

46. இந்திய தேசிய இராணுவத்தில் குறிப்பிடத் தகுந்த தமிழக வீரர்கள் யாவர்?

47.தாய்நாட்டுக்காக உழைக்க விரும்பினால் எப்பணியைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்?

48. ‘மதுரைக்காஞ்சி’ - பெயர்க் காரணத்தைக் குறிப்பிடுக.

49. உங்கள் ஊரில் உற்பத்தியாகும் பொருள்களையும் சந்தையில் காணும் பொருள்களையும் ஒப்பிட்டு எழுதுக.

50. கருக்கொண்ட பச்சைப் பாம்பு, எதற்கு உவமையாக்கப்பட்டுள்ளது?

51. அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ – இவ்வடியில் சேற்றையும் வயலையும் குறிக்கும் சொற்கள் யாவை?

52.  "டெல்லி நோக்கிச் செல்லுங்கள் " என்ற முழக்கம் யாரால் எப்போது செய்யப்பட்டது?

( இயல் – 8 )

            53. ‘பகுத்தறிவு’ என்றால் என்ன?

54. தாவோ தே ஜிங் ‘இன்னொரு பக்கம்’ என்று எதைக் குறிப்பிடுகின்றது?

55. கமுகுமரம் எதைத் தேடியது?

56. யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?

57. அசை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

      ( இயல் – 9 )

58.தமிழ்ச் சான்றோர்க்கும் உரோமையச் சான்றோர்க்கும் உள்ள வேறுபாடு யாது?

59.பிடிபசி களைஇய பெருங்கை வேழம் – இவ்வடியில் உள்ள இலக்கணக் குறிப்புகளைக் கண்டறிக.

60.குறுந்தொகை – பெயர்க் காரணம் எழுதுக.

61. நினைத்தேன் கவித்தேன் படைத்தேன் சுவைத்தேன். இத்தொட ரில் அமைந்துள்ள உருவகத்தைக் கண்டறிக

 

வெ.ராமகிருஷ்ணன்,

அரசு உயர்நிலைப் பள்ளி,

கோரணம்பட்டி.

CLICK HERE TO GET INTO PDF

WAIT FOR 10 SECONDS

 

 

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post