9TH - TAMIL - ALL UNIT - BOOK BACK ONEMARK - QUESTION BANK

 

இளந்தமிழ் - சிறப்பு பயிற்சி புத்தகம்

ஓன்பதாம்  - தமிழ்

 

புத்தக ஒரு மதிப்பெண் வினாக்கள்

( இயல் - 1 )

) சரியான விடையைத் தேர்ந்தெடு:-

1.குழுவில் விடுபட்ட வரிசையைத் தேர்ந்தெடுக்க.

குழு -1

குழு-2

குழு-3

குழு-4

நாவாய்

மரம்

துறை

தன்வினை

………………….

………………….

………………..

…………………..

அ) 1-வங்கம்,2-மானு,3-தாழிசை,4-பிறவினை

ஆ) 1.தாழிசை2-மானு,3-பிறவினை,4-வங்கம்

இ) 1-பிறவினை,2-தாழிசை,3-மானு,4-வங்கம்

ஈ) 1-மானு,2-பிறவினை,3-வங்கம்,4-தாழிசை                     

2 தமிழ்விடுதூது ____ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.

) தொடர்நிலைச் செய்யுள்    ) புதுக்கவிதை                        ) சிற்றிலக்கியம்    ஈ) தனிப்பாடல்

3. விடுபட்ட இடத்திற்கு பொருத்தமான விடை வரிசையைக் குறிப்பிடுக.

) _____குணம்    ) ______ வண்ணம் இ) _____ குணம்

) _____ வனப்பு

௧ ) மூன்று,நூறு,பத்து,எட்டு               ௨) எட்டு,நூறு,பத்து,மூன்று

௩) பத்து,நூறு,எட்டு,மூன்று                ௪) நூறு,பத்து,எட்டு,மூன்று

4. காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! – எந்த

   காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!.............

              இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்

) முரண்,எதுகை,இரட்டைதொடை ) இயைபு,அளபெடை,செந்தொடை

) மோனை,எதுகை,இயைபு             ஈ) மோனை,முரண்,அந்தாதி

5.. அழியா வனப்பு, ஒழியா வனப்பு, சிந்தா மணி அடிக்கோடிட்ட சொற்களுக்கான இலக்கணக்  குறிப்பு

) வேற்றுமை தொகை        ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்  

) பண்புத்தொகை              ) வினைத்தொகை

( இயல் - 2 )

          6.  “ மிசை “ என்பதன் எதிர்சொல் என்ன?

அ) கீழே            ஆ) மேலே                   இ) இசை   ஈ) வசை                 

7 நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?

) அகழி           ) ஆறு             ) இலஞ்சி       ஈ) புலரி

8. பொருத்தமான விடையைத் தேர்க.

                 ) நீரின்று அமையாது உலகு          -          திருவள்ளுவர்

) நீரின்று அமையாது யாக்கை        -          ஓளவையார்

                இ) மாமழை போற்றுதும்                     -          இளங்கோவடிகள்

க) அ,இ         ௨) ஆ,இ           ௩) அ,ஆ                        ௪) அ,ஆ,இ

9. பொருத்தமான வினையை எடுத்து எழுதுக.

கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக ______

அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும் _______

) வந்தான், வருகிறான்             ) வந்துவிட்டான், வரவில்லை

இ) வந்தான், வருவான்                 ஈ) வருவான், வரமாட்டான்

10.. மல்லல் மூதூர் வயவேந்தே – கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

) மறுமை        ஆ) பூவரசு மரம்            ) வளம்           ) பெரிய

( இயல் - 3 )

11. பொருந்தாத இணை எது?

அ) ஏறுகோள் – எருதுகட்டி          ஆ) திருவாரூர் – கரிக்கையூர்    

இ) ஆதிச்ச நல்லூர் – அரிக்க மேடு   ஈ) பட்டிமன்றம் – பட்டிமண்டபம்                    

12 முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக

) தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்

) தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான  

) தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்

ஈ) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்

13. பின்வருவனவற்றுள் தவறான செய்தியைத் தரும் கூற்று

) அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய நாணயங்கள் கிடைத்தன.

) புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.

 இ) எட்டு,பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது

ஈ) பட்டிமண்டபம் பற்றிய குறிப்பு மணிமேகலையில் காணப்படுகிறது.

14. ஐம்பெருங்குழு, எண்பேராயம் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்

) திசைச்சொற்கள்                    ஆ) வடசொற்கள்

இ) உரிச்சொற்கள்                        ஈ) தொகைச்சொற்கள்

15.. சொற்றொடர்களை முறைப்படுத்துக.

) ஏறுதழுவுதல் என்பதை          ஆ) தமிழ் அகராதி    ) தழுவிப் பிடித்தல் என்கிறது

i) ஆ- அ - இ     ii) ஆ-இ-அ      iii) இ – ஆ – அ  iv) இ – அ - ஆ

( இயல் - 4 )

          16. கீழ்க்காணும் மூன்று தொடர்களுள் –

அ) இருந்த இடத்திலிருந்தே பயணச்சீட்டு எடுப்பதை எளிதாக்கிய மிகப் பெரிய இந்திய நிறுவனம் இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் ஆகும்.

ஆ) வங்கி அட்டை இல்லை என்றால் அலைபேசி எண், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றைக் கொண்டு பணம் செலுத்துதல் இயலாது.

இ) திறன் அட்டைகள் என்பவை குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக வழங்கப்பட்டனவாகும்.

 i) , ஆ ஆகியன சரி; இ தவறு  ii) , இ ஆகியன சரி; ஆ தவறு

                        iii) அ தவறு; , இ ஆகியன சரி  iv) மூன்றும் சரி

17. தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?

அ) தேசியத் திறனறித் தேர்வு                  ஆ) ஊரகத் திறனறித் தேர்வு

                        இ) தேசியத் திறனறி, கல்வி உதவித் தொகைத் தேர்வு      ஈ) மூன்றும் சரி

18. ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே இவ்வடிகளில் அதனொடு என்பது எதைக் குறிக்கிறது?

அ) நுகர்தல்       ஆ) தொடு உணர்வு       இ) கேட்டல்       ஈ) காணல்

19. பின்வரும் தொடர்களைப் படித்து ‘நான்’ யார் என்று கண்டுபிடிக்க .

அறிவியல் வாகனத்தில் நிறுத்தப்படுவேன்  எல்லாக் கோளிலும் ஏற்றப்படுவேன் இளையவர் கூட்டம் என்னை ஏந்தி நடப்பர்

அ) இணையம் ஆ) தமிழ்           இ) கணினி       ஈ) ஏவுகணை

 20. விடை வரிசையைத் தேர்க .

அ) இது செயற்கைக் கோள் ஏவு ஊர்தியின் செயல்பாட்டை முன்கூட்டியே கணிக்கும்.

ஆ) இது கடல்பயணத்துக்காக உருவாக்கப்பட்ட செயலி.

௧) நேவிக், சித்தாரா        ௨) நேவிக், வானூர்தி

௩) வானூர்தி, சித்தாரா ௪) சித்தாரா, நேவிக்

( இயல் – 5 )

          21. பொருத்தமான விடையைத் தேர்க .

                        அ) சிறுபஞ்ச மூலம்         - 1. காப்பிய இலக்கியம்

ஆ) குடும்ப விளக்கு        - 2. சங்க இலக்கியம்

 இ) சீவகசிந்தா மணி     - 3. அற இலக்கியம்

ஈ) குறுந்தொகை                        - 4. தற்கால இலக்கியம்.

(௧) அ-3, ஆ- 4, இ -1, ஈ- 2                   (௨) அ- 2, ஆ- 3, இ- 1, ஈ- 4

(௩) அ- 3, ஆ-1, இ- 4. ஈ -2                  (௪) அ- 4, ஆ -1, இ – 2, ஈ- 3

22. மாறுபட்டுள்ள குழுவினைக் கண்டறிக.

அ) கலைக்கூடம்                                                ஆ) கடி

                        திரையரங்கம்                                            உறு

                        ஆடுகளம்                                                   கூர்

                        அருங்காட்சியகம்                                                 கழி

இ) வினவினான்                                   ஈ) இன்

                         செப்பினான்                                          கூட

                        உரைத்தான்                                        கிறு

                        பகன்றான்                                           அம்பு

23. கீழ்க் காண்பவற்றுள் உணர்ச்சித் தொடர் எது?

அ) சிறுபஞ்ச மூலத்தில் உள்ள பாடல்கள் பெரும்பாலும் மகடூஉ முன்னிலையில் அமைந்துள்ளன.

ஆ) இந்திய நூலகவியலின் தந்தையென அறியப்படுபவர் யார்?

இ) என்னண்ணே! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை!

ஈ) வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடத்தைப் புத்தகசாலைக்குத் தருக.

24. சரியான கூற்றினைத் தெரிவு செய்க.

 அ) ‘ஆ’ என்பது எதிர்மறை இடைநிலை.

ஆ) வீட்டிற்கோர் புத்தகசாலை என்பது அண்ணாவின் மேடைப்பேச்சு.

 இ) வில்லுப்பாட்டு ஓர் இலக்கிய வடிவம்.

                        1. , இ சரி; அ தவறு      2. , , சரி; ஆ தவறு

3. மூன்றும் சரி              4. மூன்றும் தவறு

25. பூவாது காய்க்கும், மலர்க்கை - அடிக்கோடிட்ட சொற்களுக்குரிய இலக்கணம் யாது?

அ) பெயரெச்சம், உவமைத்தொகை          ஆ) எதிர்மறைப் பெயரெச்சம், உருவகம்

                        இ) வினையெச்சம், உவமை                  ஈ) எதிர்

( இயல் – 6 )   

          26. பல்லவர் காலச் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்று __________

அ) மாமல்லபுரம் ஆ) பிள்ளையார்பட்டி      இ) திரிபுவனவீரேசுவரம்            ஈ) தாடிக்கொம்பு

27. ’பொதுவர்கள் பொலிஉறப் போர்அடித்திடும்’ நிலப் பகுதி _______

அ) குறிஞ்சி        ஆ) நெய்தல்       இ) முல்லை      ஈ) பாலை

          28. மரவேர் என்பது ________ புணர்ச்சி

அ) இயல்பு         ஆ) திரிதல்        இ) தோன்றல்    ஈ) கெடுதல்

          29. ’அதிரப் புகுதக் கனாக் கண்டேன்’ -யார் கனவில் யார் அதிரப் புகுந்தார்?

அ) கண்ணனின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்

ஆ) தோழியின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்

            இ) ஆண்டாளின் கனவில் தோழி புகுந்தாள்

 ஈ) ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்

          30) திருநாதர்குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை _____

அ) விலங்கு உருவங்கள்                        ஆ) தீர்த்தங்கரர் உருவங்கள்

            இ) தெய்வஉருவங்கள்               ஈ)நாட்டியம் ஆடும் பாவை உருவங்கள்

( இயல் – 6 )

திருக்குறள்

          31. 1. படத்திற்கேற்ற குறளைத் தேர்வு செய்க.



அ) இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்

                         துன்பத்துள் துன்பங் கெடின்

ஆ) ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்

                        போஒம் அளவும் ஓர்நோய்

இ) சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்

                         உழந்தும் உழவே தலை

32. பொருளுக்கேற்ற அடியை கண்டுப்பிடித்து பொருத்துக

 

பகைவரையும் நட்பாக்கும் கருவி

கண்டானாம் தான்கண்ட வாறு

தெரிந்த அளவில் அறிவுடையவனாகத் தோன்றுவான்

அறம்நாணத் தக்கது உடைத்து

அறம் வெட்கப்பட்டு அவனை விட்டு விலகிப்போகும்

மாற்றாரை மாற்றும் படை

33. ஐந்து சால்புகளில் இரண்டு

அ) வானமும் நாணமும்              ஆ) நாணமும் இணக்கமும்

            இ) இணக்கமும் சுணக்கமும்      ஈ) இணக்கமும் பிணக்கமும்

34. கோடிட்ட இடங்களுக்கான விடையைக் கட்டத்துள் கண்டறிந்து வட்டமிடுக

 



 

அ. அனைவரிடமும் இணக்கம் என்பதன் பொருள்

ஆ. உலகத்துக்கு அச்சாணி போன்றவர் -

இ. தான் நாணான் ஆயின் …… நாணத் தக்கது.  -

ஈ. ஆழி என்பதன் பொருள் -

உ. மாற்றாரை மாற்றும் -  

ஊ. ஒழுக்கமான குடியில் பிறந்தவர் …… செய்வதில்லை.

 

( இயல் – 7 )

          35.இந்திய தேசிய இராணுவத்தை ...............இன் தலைமையில் .................. உருவாக்கினர்.

அ) சுபா ஷ் சந்திரபோஸ், இந்தியர் ஆ) சுபாஷ் சந்திரபோ ஸ், ஜப்பானியர்

இ) மோகன்சிங், ஜப்பானியர்       ஈ) மோகன்சிங், இந்தியர்

36. சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?

அ) வருக்கை - இருக்கை           ஆ) புள் – தாவரம்

                        இ) அள்ளல் – சேறு                    ஈ) மடிவு – தொடக்கம்

          37. இளங்கமுகு, செய்கோலம் – இலக்கணக்குறிப்புத் தருக.

அ) உருவகத்தொடர், வினைத்தொகை ஆ) பண்புத்தொகை, வினைத்தொகை

இ) வினைத்தொகை, பண்புத்தொ கை ஈ) பண்புத்தொகை, உருவகத்தொடர்

38. நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு - இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே,

அ) பாண்டிய நாடு, சேர நாடு       ஆ) சோழ நாடு, சேர நாடு

இ) சேர நாடு, சோழ நாடு                        ஈ) சோழ நாடு, பாண்டிய நாடு

          39. வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே – இவ்வடி உணர்த்தும் பொருள் யாது?

அ. மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்

ஆ. வறண்ட வயலில் உழவர் வெள்ளமாய் அமர்ந்திருந்தனர்

இ. செறிவான வயலில் உழவர் வெள்ளமாய்க் கூடியிருந்தனர்

ஈ. பசுமையான வயலில் உழவர் வெள்ளமாய் நிறைந்திருந்தனர்

 

40. கூற்று - இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்த தில்லான், ”இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்” என்றார். காரணம் - இந்திய தேசிய இரா ணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்கு உரியவர்கள் தமிழர்கள்.

அ) கூற்று சரி; காரணம் சரி                     ஆ) கூற்று சரி; காரணம் தவறு

இ) கூற்று தவறு; காரணம் சரி                ஈ) கூற்று தவறு; காரணம் தவறு

( இயல் – 8 )

          41. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

கூற்று - பெரியார் உயிர் எழுத்துகளில் ’ஐ’ என்பதனை ’அய்’ எனவும்,

ஒள’ என்பதனை ’அவ்’ எனவும் சீரமைத்தார்.

காரணம் – சில எழுத்துகளைக் குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று எண்ணினார்.

அ) கூற்று சரி, காரணம் தவறு                 ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி

இ) கூற்று, காரணம் இரண்டும் தவறு     ஈ) கூற்று தவறு, காரணம் சரி

42. காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது - இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்பாடு யாது?

அ) நாள் ஆ) மலர் இ) காசு ஈ) பிறப்பு

 43. முண்டி மோதும் துணிவே இன்பம் – இவ்வடியில் இன்பமாக உருவகிக்கப்படுவது

அ) மகிழ்ச்சி ஆ) வியப்பு இ) துணிவு ஈ) மருட்சி

44. விடைக்கேற்ற வினாவைத் தேர்க .

விடை – பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது.

அ) பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?

ஆ) பானை எப்படி நமக்குப் பயன்படுகிறது?

இ) பானை எதனால் நமக்குப் பயன்படுகிறது?

ஈ) பானை எங்கு நமக்குப் பயன்படுகிறது?

45. ‘ஞானம்’ என்பதன் பொருள் யாது?

            அ) தானம் ஆ) தெளிவு இ) சினம் ஈ) அறிவு

( இயல் – 9 )

46. இமயத்துக் கோடு உயர்ந்தன்ன – இவ்வடியில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் யாது?

அ) கொம்பு         ஆ) மலையுச்சி               இ) சங்கு           ஈ) மேடு

47. தமிழ்ப் புலவரைப் போலவே உரோமச் சிந்தனையாளர் கொண்ட கொள்கை  

அ) நிலையற்ற வாழ்க்கை           ஆ) பிறருக்காக வாழ்தல்

இ) இம்மை மறுமை                   ஈ) ஒன்றே உலகம்

48. வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த நூல்

அ) ஒரு சிறு இசை         ஆ) முன்பின்      இ) அந்நியமற்ற நதி       ஈ) உயரப் பறத்தல்

49. யா மரம் என்பது எந்த நிலத்தில் வளரும்?

அ) குறிஞ்சி        ஆ) மருதம்         இ) பாலை        ஈ) நெய்தல்

50. கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை – இக்குறளில் பயின்று வந்துள்ள அணி?

அ) சொல் பின்வருநிலையணி                ஆ) பொருள் பின்வருநிலையணி

இ) சொற்பொருள் பின்வரு நிலையணி ஈ) வஞ்சப் புகழ்ச்சியணி


CLICK HERE TO GET INTO PDF

WAIT FOR 10 SECONDS

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post