8TH - TAMIL - NOTES OF LESSON - NOVEMBER - 4THWEEK

 

நாள்               :           21-11-2022 முதல் 25-11-2022       

மாதம்                          நவம்பர்

வாரம்               :              நான்காம்  வாரம்                     

வகுப்பு              :           எட்டாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. அறிவுசால் ஒளவையார்

                                         2. வல்லினம் மிகும் இடங்களும், மிகா இடங்களும்

அறிமுகம்                 :

Ø  ஒளவையார் எழுதிய நூல்களில் ஒன்றினைக் கூற வைத்து அறிமுகம் செய்தல்

Ø  கரும்பலகையில் சில தொடர்களை எழுதி அதன் பொருள் கூற வைத்து அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி

நோக்கம்                                   :

Ø  நாடகத்தைப் படித்துக் கதையைப் புரிந்துகொள்ளும் திறன் பெறுதல்

Ø  வல்லினம் மிகும் இடங்கள், மிகா இடங்களை அறிந்து பயன்படுத்துதல்

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  ஆசிரியர் படித்தல், பின் தொடர்ந்து மாணவர்களும் படித்தல்

Ø  முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்

Ø  புதிய வார்த்தைக்கான பொருள் அறிதல்

Ø  நாடக பாங்கில் உள்ளதை மாணவர்களை வாசிக்க வைத்தல்

Ø  மாணவர்கள் நிறுத்தற்குறி அறிந்து வாசித்தல்

Ø  வல்லினம் பற்றிக் கூறல்

Ø  வல்லினங்களில் எந்தெந்த எழுத்துகள் மிகும், மிகாது எனக் கூறல்

Ø  வல்லினத்தால் காணும் பொருள் மாறுபாடினை உணர்தல்

Ø  வல்லினம் மிகும்,மிகா இடங்களுக்கான விதிகளை கூறல்

கருத்து  வரைபடம்                   :

அறிவுசால் ஒளவையார்

வல்லினம் மிகும் இடங்கள்




வல்லினம் மிகா இடங்கள்

விளக்கம்  :

( தொகுத்தல் )

அறிவுசால் ஒளவையார்

Ø  நாடகப்பாங்கில் மாணவர்களை வாசிக்க வைத்தல்

Ø  அதியமான் அரண்மனையில் ஒளவையார்

Ø  கரும்புக்கும் அதியமான் முன்னோருக்கும் உள்ள தொடர்பினை கூறல்

Ø  அதியமான் தனக்கு கிடைத்த அரிதான நெல்லிக்கனியை ஒளவையாருக்கு கொடுத்தல்

Ø  நெல்லிக்கனியைப் பற்றி கூறல்

Ø  தொண்டைமான் போர் பற்றி கூறல்

Ø  போரினால் காணும் இழப்பை அதியமான் கூறல்

Ø  தொண்டைமானிடம் தூதுதாக ஒளவை செல்லல்

 

வல்லினம் மிகும் இடங்கள்,

·         சுட்டுத்திரிபுகளை அடுத்து வல்லினம் மிகும் - அந்தப்பக்கம்

·         வினாத்திரியை அடுத்து வல்லினம் மிகும் – எந்தத்திசை?

·         இரண்டாம் வேற்றுமைத் தொடரில் வல்லினம் மிகும் - பாடத்தப்படி

·         நான்காம் வேற்றுமைத் தொடரில் வல்லினம் மிகும் – எனக்குக் கொடு

·         இகரத்தை அடுத்த வினையெச்சங்களில் வல்லினம் மிகும்

·         வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும் – படித்துப் பார்த்தார்

·         உவமைத் தொகையில் வல்லினம் மிகும்

·         உருவகத்தில் வல்லினம் மிகும்

·         எட்டு,பத்து எண்ணுப் பெயர்களில் வல்லினம் மிகும்.

·         திசைப்பெயர்களை அடுத்து வல்லினம் மிகும்

வல்லினம் மிகா இடங்கள்

·         எழுவாய்ச் சொற்களை அடுத்து வல்லினம் மிகாது.

·         பெயரெச்சம், எதிர்மறை பெயரெச்சம் ஆகியவற்றை அடுத்து வல்லினம் மிகாது

·         இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது

·         வினைத்தொகையில் வல்லினம் மிகாது.

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

அறிவுசால் ஒளவையார்


வல்லினம் மிகும் இடங்களும், மிகா இடங்களும் 


  

·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                     :

Ø  பிழையின்றி வாசித்தல்

Ø   புதிய வார்த்தைகளை காணுதல்

Ø  புதிய வார்த்தைகளுக்கான பொருள் அறிதல்

Ø  நிறுத்தற் குறி அறிந்து வாசித்தல்

Ø  நாடகத்தில் உணர்வுகளுக்கு ஏற்ப உரையாடுதல்

Ø  அதியமான் கொடைத் திறம் அறிதல்

Ø  அதியமானின் போர் பற்றிய சிந்தனையைப் போற்றுதல்

Ø  வல்லினம் அறிதல்

Ø  வல்லினத்தில் மிகும், மிகா இடங்களை அறிதல்

Ø  வல்லினம் மிகும் மிகா, இடங்களை அறிந்து தொடர்களைப் பயன்படுத்துதல்

 

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  அதியமான் எந்த ஊரில் ஆட்சி புரிந்தான் _______

Ø  வல்லின எழுத்துகள் யாவை?_______

MOT

Ø  அதியமானின் கொடைத்தன்மையைக் கூறுக

Ø  வல்லினம் மிகும் இடங்களுக்கு சான்று தருக

HOT

Ø  நீங்கள் இரு நாடுகளுக்கும் நடக்கும் போரினை தடுத்து நிறுத்த எவ்வாறு உதவுவீர்கள்?

Ø  வல்லினம் இட்டும், இடாமலும் சொற்களை எழுதுவதில் காணும் விளைவுகளைக் கூறுக

கற்றல் விளைவுகள்                  :

அறிவுசால் ஒளவையார்

Ø  807 – கதைகள், பாடல்கள், கட்டுரைகள் போன்ற பல்வேறு வகைப்பட்டவற்றை படிக்கும் போது நுட்பமாக ஆய்வு செய்து குறிப்பிட்ட சிலவற்றைக் கண்டறிதலும், ஊகித்தறிதலும்

 

வல்லினம் மிகும் இடங்களும், மிகா இடங்களும்

Ø  816  மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றை தம் மொழியில் எழுதும் போது பயன்படுத்துதல்

தொடர் பணி                            :

Ø   மதிப்பீடு வினாக்களுக்கு விடை எழுதி வருக

Ø   சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களின் பட்டியல் எழுதி வருக

Ø   பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ல வல்லினம் மிகும், மிகா இடங்களை அறிந்து எழுதி வருக

 

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post