நாள் : 14-11-2022 முதல் 18-11-2022
மாதம் : நவம்பர்
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : 1. படை வேழம்
2. விடுதலைத் திருநாள்
3. பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன்
அறிமுகம் :
Ø இன்றைய
நாட்களில் நடக்கும் போர்கள் எப்படி நடக்கிறது எனக் கேட்டறிந்து அறிமுகம் செய்தல்
Ø பள்ளிகளில்
தேசிய விழாக்கள் கொண்டாடும் போது அதில் உங்களின் பங்களிப்பு என்னவாக இருக்கும்? எப்படி
கொண்டாடுவீர்கள் எனக் கேட்டறிந்து அறிமுகம் செய்தல்
Ø நாட்டிற்கு
உழைத்த தியாகிகளில் நீங்கள் அறிந்தவரைப் பற்றிக் கூறக் கேட்டு அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø ஒளிப்பட
வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி
நோக்கம் :
Ø சிற்றிலக்கியங்களில்
உள்ள இலக்கிய நயங்களை நுகர்தல்
Ø தேசிய
விழாக்களின் சிறப்பினை உணர்ந்து கொண்டாடுதல்
Ø நாட்டுக்கு
உழைத்த நல்லோரின் வாழ்க்கையை அறிந்து பின்பற்றுதல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø ஆசிரியர் படித்தல், பின்
தொடர்ந்து மாணவர்களும் படித்தல்
Ø முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்
Ø புதிய வார்த்தைக்கான
பொருள் அறிதல்
Ø தொண்ணூற்று வகைச் சிற்றிலக்கியங்கள்
பற்றி கூறல்
Ø சோழர்களின் படைத் திறம்
பற்றிக் கூறல்
Ø தேசிய விழாவினைப் பற்றிக் கூறல்
Ø தேசிய விழாவின் முக்கியத்துவம் பற்றிக்
கூறல்
Ø கவிதையின் மையக்கருத்தினைக் கூறல்
Ø எம்.ஜி.ஆரின் இளமைக்காலம் பற்றிக் கூறல்
Ø எம்.ஜி.ஆர் அவர்களின் ஆற்றலைப் பற்றிக்
கூறல்
Ø எம்.ஜி.ஆர் மக்களுக்கு ஆற்றியப் பணிகள்
பற்றிக் கூறல்
கருத்து வரைபடம் :
படை வேழம்
விடுதலைத் திருநாள்
பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன்
விளக்கம் :
( தொகுத்தல் )
படைவேழம்
Ø 96 வகை சிற்றிலக்கியங்களில்
ஒன்று பரணி
Ø பரணியை இயற்றியவர் –
செயங்கொண்டார்
Ø கலிங்கர் கடற்கொள்ளையர்
Ø சோழர் படைக் கண்ட கலிங்கரின்
நடுக்கம்
Ø சோழரின் யானைப் படைக்
கண்டு கலிங்கர் சிதைந்தோடல்
விடுதலைத் திருநாள்
·
ஆசிரியர்
: மீ.இராசேந்திரன்
·
கல்லூரி
பேராசிரியர்
·
அந்நியர்
ஆட்சி முடிவுக்கு வந்த நாள் இன்று
·
இந்தியருக்கு
மகிழ்ச்சி அளிக்கும் நாள் இன்று
·
இந்தியாவின்
விடியல் தோன்றிய நாள் இன்று
·
இந்திய
தேசம் விடுதலைப் பெற்ற நாளை கவிஞர் எடுத்துரைக்கிறார்
பாரத ரத்னா எம்.ஜி.ஆர்.இராமசந்திரன்
·
எம்.ஜி.ஆர்
– கேரளாவினைச் சேர்ந்தார்
·
பெற்றோர்
– கோபாலன் – சத்தியபாமா
·
இளமையிலே
நடிக்கும் ஆற்றல் கொண்டவர்
·
திரைத்துறையில்
நடித்து புகழ் பெற்றார்
·
முதலமைச்சராக
பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்
·
மாணவர்களுக்கு
சத்துணவுத் திட்டம், காலணி திட்டம் என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்
·
மதுரையில்
ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினார்
·
தஞ்சையில்
தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தார்
காணொலிகள் :
·
விரைவுத்
துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
படை வேழம்
விடுதலைத் திருநாள்
எம்.ஜி.ஆர்
·
வலையொளி
காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø பிழையின்றி வாசித்தல்
Ø புதிய வார்த்தைகளை காணுதல்
Ø புதிய வார்த்தைகளுக்கான
பொருள் அறிதல்
Ø நிறுத்தற் குறி அறிந்து
வாசித்தல்
Ø சோழர்களின் படைத்திறத்தை
உணர்தல்
Ø கலிங்கத்து பரணி பற்றி
அறிதல்
Ø விடுதலை திருநாளினை நேசித்தல்
Ø தேசிய விழாக்களின் முக்கியத்துவத்தை
உணர்தல்
Ø சுதந்திரத்திற்கு பாடுபட்ட
வீரர்களை நினைவுக் கூறல்
Ø எம்.ஜி.ஆர். பற்றி அறிதல்
Ø எம்.ஜி.ஆர். அவர்களின்
கலைத்திறமையைப் போற்றுதல்
Ø எம்.ஜி.ஆர் அவர்களின்
மக்கள் நலத்திட்டங்களை அறிதல்
மதிப்பீடு :
LOT :
Ø சிற்றிலக்கியங்கள் மொத்தம்
_______
Ø இந்தியா எப்போது சுதந்திரம்
அடைந்தது_______
Ø எம்.ஜி.இராமச்சந்திரன்
எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் ?
MOT
Ø சோழர்களின் படைத்திறம்
பற்றிக் கூறுக
Ø தேசிய விழாக்கள் என்பவை
யாவை?
Ø எம்.ஜி.இராமசந்திரன்
அவர்களின் பன்முகத் திறமை யாது?
HOT
Ø ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு
தேவையென நீங்கள் எதனை கருதுவீர்கள்?
Ø தேசிய விழாக்களை கொண்டாடுவதன்
நோக்கம் என்னவாக இருக்கும்?
Ø ஒரு அரசியல் தலைவருக்கு
இருக்க வேண்டிய பண்புகளாக நீங்கள் கருதுவன யாவை?
கற்றல் விளைவுகள் :
படை
வேழம்
Ø 812 – படிக்கும் போது படைப்பாளியின் சொற்சித்திரத்தினை நயம்பட பாராட்டி தமது கல்வி
நிலைக்கு ஏற்ப அதை வெளிப்படுத்துதல்
Ø 815 – தாம் அறிந்திடாத சூழல்களை கற்பனை செய்தும் ,நிகழ்வுகள் பற்றி மனதில் உருவகித்தும்
அவற்றைப் பற்றி சிந்தித்தும் எழுத்து வழி வெளிப்படுத்துதல்
விடுதலைத் திருநாள்
Ø 810
பல்வேறு வகை படித்தல் பொருள்களில் காணப்படும் சொற்கள், தொடர்கள், மரபுத்தொடர்கள் ஆகியவற்றை
புரிந்து கொண்டு நயம் பாராட்டுதல்
Ø 813
தேவைப்படின் பார்வை நூல்களாகிய அகராதிகள்,
தேசப்படங்கள், கலைக்களஞ்சியம் போன்றவற்றையும் இணையதளத்தையும் பொருத்தமான முறையில் பயன்படுத்துதல்
பிறர் உதவியை நாடியும் இதனைச் செய்யலாம்
எம்.ஜி.இராமசந்திரன்
Ø 811
படித்த பிறகு பல்வேறு எழுத்தியியல் நடைகளையும்,
முறைகளையும் இனங்காணுதல்
Ø 814
தான் எழுதுவதை படிப்பவர் மற்றும் எழுத்தின்
நோக்கம் ஆகியவற்றை மனதில் கொண்டு பயன் விளைவிக்கும்
வகையில் எழுதுதல்
Ø 816
மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றை தம்
மொழியில் எழுதும் போது பயன்படுத்துதல்
தொடர் பணி :
Ø மதிப்பீடு வினாக்களுக்கு விடை எழுதி வருக
Ø சிற்றிலக்கியங்களின் பெயர்களை திரட்டி வருக
Ø நீங்கள் விரும்பும் விழா ஒன்றினைப் பற்றி ஒரு பக்க அளவில் எழுதி வருக
Ø தமிழக முதலமைச்சர்களின் பெயர்களை பட்டியலிடுக
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை