8TH - TAMIL - NOTES OF LESSON - NOVEMBER - 2ND WEEK

  

நாள்               :           07-11-2022 முதல் 11-11-2022       

மாதம்                          நவம்பர்

வாரம்               :              இரண்டாம்  வாரம்                     

வகுப்பு              :           எட்டாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. கொங்கு நாட்டு வணிகம்

                                         2. காலம் உடன் வரும்

                                        3. புணர்ச்சி

அறிமுகம்                 :

Ø  உங்கள் பகுதியில் நடைபெறும் தொழில்கள் பற்றி கூறுக

Ø  உங்கள் தந்தை என்ன தொழில் செய்கிறார்? அந்த தொழிலில் காணும் சிக்கல்கள் பற்றி நீ அறிந்தவைகளைக் கூறுக

Ø  சில சொற்களை கரும்பலகையில் எழுதி அவற்றை பிரித்தும் சேர்த்தும் கூறச் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி

நோக்கம்                                   :

Ø  தொழில்களின் வகைகளை உணர்தல்

Ø  சிறுகதை மூலம் தொழிலாளர்களின் வாழ்வியலைப் புரிந்து கொள்ளுதல்

Ø  புணர்ச்சி விதிகளை அறிந்து சொற்களைப் பிழையில்லாமல் எழுதுதல்

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  ஆசிரியர் படித்தல், பின் தொடர்ந்து மாணவர்களும் படித்தல்

Ø  முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்

Ø  புதிய வார்த்தைக்கான பொருள் அறிதல்

Ø  நிறுத்தற்குறி அறிந்து படித்தல்

Ø  கொங்குப் பகுதிகளை கூறல்

Ø  கொங்குப் பகுதியில் நடைபெறும் தொழில்கள் பற்றி கூறல்

Ø  தொழிலாளிரின் வாழ்வியலை நெசவின் மூலம் விளக்குதல்

Ø  வட்டார வழக்குச் சொற்களை அறிந்து கூறல்

Ø  புணர்மொழியின் இயல்புகளை விளக்குதல்

Ø  புணர்ச்சியின் வகைகளை விளக்குதல்

கருத்து  வரைபடம்                   :

கொங்கு நாட்டு வணிகம்





காலம் உடன் வரும்

புணர்ச்சி

விளக்கம்  :

( தொகுத்தல் )

கொங்கு நாட்டு வணிகம்

Ø  சேரர்கள் ஆண்டப் பகுதி கொங்கு மண்டலமாகக் கருதப்படுகிறது

Ø  சேரர்களின் நாடு குட நாடு. தலைநகர் - வஞ்சி

Ø  கொங்கு மண்டலம் : கொங்கு மண்டலச் சதகம்

o   வடக்கு – பெரும்பாலை

o   தெற்கு – பழனி மலை

o   மேற்கு – வெள்ளி மலை

o   கிழக்கு – மதிற்கரை

Ø  கொங்கு மண்டல ஆறு : காவிரி, பவானி, நொய்யல், அமராவதி

Ø  கொங்கு மண்டலப்  பகுதிகளில் இன்றைய வணிகம்

o   நீலகிரி,கோவை,திண்டுக்கல், ஈரோடு,திருப்பூர்,நாமக்கல்,சேலம், கரூர்.

காலம் உடன் வரும்

·         ஆசிரியர் : கன்னிவாடி சீரங்கன் சிவக்குமார்

·         நெசவுத் தொழிலாளியின் பின்னணி

·         பாவு பிணைத்தல்

·         ஒச்சம்மா பெண் பாவு பிணைத்தல் தொழில் செய்கிறார்

·         நள்ளிரவு நேரத்திலும் குழந்தையுடன் பாவு பிணைக்க செல்கிறார்

·         நெடுநேரம் பாவு பிணைத்து  இரட்டைக் கூலி பெறும் போது ஆனந்த கண்ணீர் சிந்துகிறார்

புணர்ச்சி

·         நிலைமொழி ஈறும், வருமொழி முதலும் இணைவது புணர்ச்சி

·         உயிரீற்றுப் புணர்ச்சி

·         மெய்யீற்றுப் புணர்ச்சி

·         உயிர்முதல் புணர்ச்சி

·         மெய்முதல் புணர்ச்சி

·         புணர்ச்சி இரு வகைப்படும்

·         இயல்பு புணர்ச்சி, விகாரப் புணர்ச்சி

o   விகாரப்புணர்ச்சி – தோன்றம், திரிதல்,கெடுதல்

 

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

கொங்கு நாட்டு வணிகம்


புணர்ச்சி



·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                     :

Ø  பிழையின்ரி வாசித்தல்

Ø   புதிய வார்த்தைகளை காணுதல்

Ø  புதிய வார்த்தைகளுக்கான பொருள் அறிதல்

Ø  நிறுத்தற் குறி அறிந்து வாசித்தல்

Ø  கொங்கு மண்டலங்களை அறிதல்

Ø  கொங்கு மண்டல வணிகப் பகுதிகளை அறிதல்

Ø  நெசவுத் தொழிலாளியின் வாழ்க்கை நிலையினை அறிதல்

Ø  வட்டார வழக்குச் சொற்களை அறிந்து வாசித்தல்

Ø  புணர்ச்சி பற்றி அறிதல்

Ø  புணர்ச்சியின் வகைகளை அறிதல்

 

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  ஆன்பொருநை என அழைக்கப்படும் ஆறு________

Ø  காலம் உடன் வரும் கதையின் ஆசிரியர் _______

Ø  புணர்ச்சி என்பது யாது?

MOT

Ø  மூவேந்தர்களின் காலம் குறித்து கூறுக

Ø  ஒச்சம்மாவின் நிலையினைக் கூறுக

Ø  புணர்ச்சியின் இயல்புகள் யாவை?

HOT

Ø  நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு வணிகம் தவிர்த்து வேறு எவையெல்லாம் உதவும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

Ø  உங்கள் பகுதியில் உள்ள தொழிலாளரின் நிலையினைக் கூறுக.

Ø  புணர்ச்சியில் விகாரப்புணர்ச்சி பற்றி கூறுக

கற்றல் விளைவுகள்                  :

Ø  801 – மாணவர்கள் பல்வேறு வகையான பாடத் தலைப்புகளில்  பாடப் பொருள்களின் மீது எழுதப் பட்டவற்றைப் பற்றி கலந்துரையாடல்

Ø  808 – ஒரு கட்டுரையைப் படித்த பின் அதன் சமூக மதிப்புகளை கலந்துரையாடல். சில வினாக்களுக்கு விடை காண முற்படல்

Ø  816 – மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றை நம் மொழியில் எழுதும் போது பயன்படுத்துதல்

தொடர் பணி                            :

Ø   மதிப்பீடு வினாக்களுக்கு விடை எழுதி வருக

Ø   உங்கள் பகுதியில் நடைபெறும் தொழில்களைப் பட்டியலிடுக

Ø   நீங்கள் அறிந்த தொழிலாளி ஒருவரின் வாழ்வியல் சூழலை அறிந்து எழுதி வருக.

Ø   இயல்பு, தோன்றல், திரிதல்,கெடுதல் ஆகிய புணர்ச்சிகளுக்குரிய எடுத்துக்காட்டுகளைக் கொண்டு பட்டியல் ஒன்று உருவாக்குக

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


1 Comments

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

  1. புதன் கிழமைக்குள் notes of lesson கிடைக்க வழிவகை செய்யவும்

    ReplyDelete
Previous Post Next Post