8TH - TAMIL - NOTES OF LESSON - DECEMBER - 1ST WEEK

  

நாள்               :           05-12-2022 முதல் 09-12-2022       

மாதம்                          டிசம்பர்

வாரம்               :              முதல்  வாரம்                     

வகுப்பு              :           எட்டாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. அயோத்திதாசர் சிந்தனைகள்

                                         2. மனித இயந்திரம்

அறிமுகம்                 :

Ø  இன்று சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இன்றி செயல்படுகிறது. இதற்கு யார் காரணமாக இருந்திருப்பார்கள்?

Ø  உங்களுக்கு சொந்தமில்லாத பணப்பெட்டி உங்கள் கைக்கு கிடைக்கிறது. நீங்கள் அதை என்ன செய்வீர்கள்?

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி

நோக்கம்                                   :

Ø  அயோத்திதாசரின் சிந்தனைகள் வழியாகச் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை உணர்தல்

Ø  நவீன சிறுகதைகளைப் படித்து அவற்றின் நுட்பங்களை அறியும் திறன் பெறுதல்

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  சிந்தனையாளர்கள் பற்றி கூறல்

Ø  ஆசிரியர் படித்தல், பின் தொடர்ந்து மாணவர்களும் படித்தல்

Ø  முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்

Ø  புதிய வார்த்தைக்கான பொருள் அறிதல்

Ø  அயோத்தி தாசர் பற்றிக் கூறல்

Ø  அயோத்தி தாசர் பண்புகளும், பணிகளும் பற்றிக் கூறல்

Ø  மனிதர்களில் காணும் இரு வகைப் பண்பினைக் கூறல்

Ø  நேர்மை பண்பை வலியுறுத்தும் கதையை வாழ்வியலோடு ஒப்பிடல்

கருத்து  வரைபடம்                   :

அயோத்தி தாசர் சிந்தனைகள்



மனித இயந்திரம்

விளக்கம்  :

( தொகுத்தல் )

அயோத்திதாசர் சிந்தனைகள்

Ø  தந்தை பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் முன்னோடி.

Ø  தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுவர்

Ø  இயற்பெயர் : காத்தவராயன்

Ø  பாலி, வடமொழி,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேர்ச்சிப் பெற்றவர்

Ø  1907 இல் ஒரு பைசாத்தமிழன் என்னும் வார இதழை காலணா விலையில் தொடங்கினார்

Ø  மக்கள் அனைவரும் சம உரிமை பெற்றுச் சமத்துவமாக வாழ வேண்டும் என விரும்பினார்.

Ø  ஒடுக்கப்பட்ட மக்களுக்காக திராவிட மகாஜன சங்கம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார்

Ø  அயோத்திதாசர் சிந்தனைகள் சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் சித்தாந்தங்கள்

மனித இயந்திரம்

·         மனிதர்களில் இரண்டு வகையான பண்புகள் உள்ளது.

·         ஒன்று நல்லதையே செய்வது: மற்றொன்று தீயனவற்றை செய்வது

·         தவறு செய்யும் எண்ணம் தோன்றும் போது அதனை அடக்கி நேர்மையாக வாழ்வதே உயர்ந்த மனிதர்களின் இயல்பு.

·         மீனாட்சி சுந்தரம் ஸ்டோர் குமாஸ்தா

·         45 வருடங்களாக ஒரே கடை

·         கதையில் காணும் நாணயங்கள் : நாலரை,மாகாணி, வீசம், அரைக்கால், அரையே அரைக்கால்

·         கதையின் ஆசிரியர் : புதுமைப் பித்தன்

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

அயோத்திதாசர் சிந்தனைகள்


·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

மனித இயந்திரம்



மாணவர் செயல்பாடு                     :

Ø  பிழையின்றி வாசித்தல்

Ø   புதிய வார்த்தைகளை காணுதல்

Ø  புதிய வார்த்தைகளுக்கான பொருள் அறிதல்

Ø  நிறுத்தற் குறி அறிந்து வாசித்தல்

Ø  அயோத்தி தாசரின் அறக்கருத்துகளை அறிதல்

Ø  அயோத்திதாசரின் சிந்தனைகளை போற்றுதல்

Ø  அயோத்தி தாசர் சிந்தனைகளை நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிடல்

Ø  சிறுகதையின் மூலம் காணும் நேர்மை பண்பை அறிதல்

Ø  வட்டார வழக்குச் சொற்களை அறிதல்

Ø  நேர்மை பண்புகள் ஒழுக்கத்தின் உயர்வு என்பதனை அறிதல்

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  அயோத்தி தாசரின் இயற்பெயர் _________

Ø  சிறுகதை மன்னன்  என அழைக்கப்படுபவர் ________

MOT

Ø  அரசியல் விடுதலை பற்றிய அயோத்தி தாசரின் கருத்து யாது?

Ø  மீனாட்சி சுந்தரம் அவர்களின் பண்பைக் கூறுக

HOT

Ø  ஒரு சமூகம் உயர்வடைய மக்களிடம் இருக்க வேண்டிய உயர் பண்புகளாக நீங்கள் கருதுவது யாது?

Ø  மனித இயந்திரம் கதையில் மீனாட்சி சுந்தரத்தின் பண்புகளை அவரே கூறுவது போன்று கூறுக

கற்றல் விளைவுகள்                  :

அயோத்தி தாசர் சிந்தனைகள்

Ø  T817  மற்றவர்கள் ஒரு குறிப்பிட்ட சூழலில் சொன்ன சொற்களை பிறிதொரு சூழலில் தனது மொழி நடையில் பயன்படுத்துதல்

மனித இயந்திரம்

Ø  T807  கதைகள், பாடல்கள் ,கட்டுரைகள், அறிக்கைகள், நினைவுகள், நகைச்சுவை போன்ற பல்வேறு வகை பட்டவற்றை படிக்கும் போது அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட செய்திகளை கண்டறிதலிலும் ஊகித்தறிதலிலும்

தொடர் பணி                            :

Ø   மதிப்பீடு வினாக்களுக்கு விடை எழுதி வருக

Ø   சமூகச் சீர்திருத்தத்திற்குப் பாடுபட்ட சான்றோர்களின் பெயர்களைத் திரட்டுக

Ø   வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த ஒருவரைப் பற்றி எழுதி வருக

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post