நாள் : 28 -11-2022 முதல் 02 -12-2022
மாதம் : நவம்பர்
வாரம் : ஐந்தாம் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : 1. கடலோடு விளையாடு
2. வளரும் வணிகம்
அறிமுகம் :
Ø நீங்கள்
மீன் இறைச்சி உண்டுள்ளீர்களா? அந்த மீன் எங்கிருந்து கிடைக்கிறது?
Ø உங்களின்
அன்றாத் தேவைகளை நீங்கள் எவ்விதம் பெறுவீர்கள்? என்பன போன்ற வினாக்களைக் கேட்டு வரும்
விடைகளைக் கொண்டு அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø காணொலிக்
காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø பல்வேறுத்
தொழில்கள் குறித்து அறிதல்
Ø வணிகத்தின்
வளர்ச்சி நிலையை புரிந்து கொள்ளுதல்
ஆசிரியர் குறிப்பு :
Ø பாடப்பகுதியினை
ஆர்வமூட்டல்
Ø
நாட்டுப்புற பாடல்கள் பற்றி அறிதல்
Ø
பாடலின் மையக் கருத்தை கூறல்
Ø
பாடலை இனிய இராகத்தில் பாடுதல்
Ø
வணிகம் பற்றி கூறல்
Ø
வணிகத்தின் வகைகளைக்
கூறல்
Ø
வணிகத்தில் நேர்மை மற்றும்
ஏற்றுமதி, இறக்குமதி பற்றிக் கூறல்
Ø
அன்றைய வணிகத்தை இன்றைய வணிகத்தோடு ஒப்பிடல்
கருத்துரு வரைபடம் :
கடலோடு விளையாடு
வளரும் வணிகம்
விளக்கம் :
கடலோடு விளையாடு
Ø மீன் பிடிக்கக்
கடலுக்குச் செல்பவர்கள் மீனவர்கள்.
Ø விண்மீன்களே விளக்குகள்;
Ø விரிந்த கடலே
பள்ளிக்கூடம்;
Ø கடல் அலையே தோழன்;
Ø மேகமே குடை;
Ø வண்மையான மணலே
படுத்துறங்கும் பஞ்சு மெத்தை;
Ø விண்ணின் இடி அவர்கள் காணும் கூத்து;
Ø சீறிவரும் புயலே
விளையாடும் ஊஞ்சல்;
Ø பனிமூட்டம்தான்
உடலைச் சுற்றும் போர்வை;
Ø அனல் வீசும்
கதிரவனின் ஒளிச்சுடர்தான் மேற்கூரை;
Ø கட்டுமரம்தான்
அவர்கள் வாழும் வீடு;
Ø மின்னல் கோடுகளே
அடிப்படைப் பாடம்;
Ø வலைவீசிப் பிடிக்கும் மீன்களே அவர்களது செல்வம்;
Ø முழு நிலவுதான்
கண்ணாடி;
Ø மூச்சடக்கிச்
செய்யும் நீச்சலே அவர்கள் செய்யும் தவம்;
Ø வானமே அவர்கள்
வணங்கும் தலைவன்;
Ø இவற்றிற்கு இடையே
மீனவர்கள் மன உறுதியோடு தொழில் செய்கின்றனர்.
வளரும் வணிகம்
Ø ஒரு பொருளைப்
பிறரிடம் இருந்து வாங்குவதும் பிறருக்கு விற்பதும் வணிகம் ஆகும். பொருள்களை
விற்பவரை வணிகர் என்பர்;
வாங்குபவரை
நுகர்வோர் என்பர்.
பண்டமாற்று
வணிகம்
நம்மிடம் கூடுதலாக
இருக்கும் பொருள்களைக் கொடுத்து நமக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்வது
பண்டமாற்று வணிகம் ஆகும்.
வணிகத்தின்
வகைகள்
வணிகத்தைத் தரைவழி வணிகம், நீர்வழி வணிகம் எனப்
பிரிக்கலாம்.
சிறு
வணிகம்
நம் அன்றாடத் தேவை க ளான பால், கீரை, காய்கறிகள்
போன்றவற்றை விற்பனை செய்பவர்கள் சிறு வணிகர்கள் ஆவர்.
பெருவணிகம்
பெருந்தொகையை முதலீடு செய்து பொருள்களை அதிக அளவில்
திரட்டி வைத்து விற்பனை செய்வது பெருவணிகம் ஆகும்.
இணைய வழி வணிகம்
கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்க நேரம் இல்லாதவர்களுக்கு
இணையவழி வணிகம் உதவுகிறது
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்க குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
o கடலோடு
விளையாடு
வளரும்
வணிகம் :
மாணவர் செயல்பாடு :
Ø பாடப்பகுதியினை வாசித்தல்
Ø புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்
Ø புதிய வார்த்தைகளுக்கான பொருளை அகராதிக் கொண்டு
அறிதல்
Ø பாடலின் மையக் கருத்தை அறிதல்
Ø பண்டைய தமிழர் வணிகம் பற்றி அறிதல்
Ø வணிகத்தின் வகைகளை அறிதல்
Ø வணிகம் நம் வாழ்வியலோடு தொடர்புடையது என அறிதல்
Ø வணிகத்தின் வளர்ச்சியைப் புரிந்துக் கொள்ளுதல்
மதிப்பீடு :
LOT :
Ø மீனவர்களுக்கு
உதவக்கூடிய சிலப் பொருட்களைக் கூறுக
Ø நுகர்வோர்
என்பவர் யார்?
MOT
:
Ø கடல்
மீனவர்களின் வாழ்க்கையோடு எவ்விதம் ஒப்பிடப்படுகிறது?
Ø உங்கள்
வீட்டின் அருகில் உள்ள வணிகங்கள் யாவை?
HOT
Ø நாட்டுப்புறப்
பாடல்கள் இன்றும் சிறப்பாக அமைய காரணம் என்னவாக
இருக்கும்?
Ø வணிகப்
பொருட்கள் தற்காலத்தில் மக்களை எவ்விதம் வந்தடைகின்றன?
கற்றல் விளைவுகள் : கடலோடு விளையாடு
Ø 605 பல்வேறு சூழல்களில் பிறரால் சொல்லப்பட்ட சொற்களை
(பார்வை இழந்தவரின் பயண அனுபவங்கள் போன்றவை திரும்பக் கூறுதல்
Ø
606
தங்கள் பகுதிகளில் காணப்படும் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் நாட்டுப்புறப் பாடல்களை
அறிந்திருத்தல் அவற்றை பற்றி கலந்துரையாடல்
Ø
609 – மிக நுட்பமாக ஒரு
நூலை ஆய்ந்து குறிப்பிட்ட செய்திகளைத் தேடிக்கண்டு பிடித்தல் ஊகித்தறிதல் மற்றும் முடிவு
செய்தல்
வளரும் வணிகம்
Ø T602 தாங்கள் பார்த்த கேட்ட உள்ளூர் சமூக நிகழ்வுகள்,
செயல்பாடுகள், சடங்குகள் போன்றவற்றைப் பற்றி
தயக்கம் இன்றி வினா எழுப்பவும் கலந்துரையாடவும் செய்தல்
Ø T604
வானொலி, தொலைக்காட்சி ,செய்தித்தாள் போன்றவற்றில்
தாங்கள் கேட்ட பார்த்த படித்த செய்திகளை தங்களின் சொந்த மொழி நடையில் கூறுதல்
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
Ø நீங்கள் அறிந்த நாட்டுப்புற பாடல் ஒன்றை எழுதி வருக
Ø உங்கள் பகுதியில் கிடைக்கும் பொருட்கள் பற்றிய படத்தொகுப்பு
உருவாக்கி வருக
_______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை