நாள் : 21-11-2022 முதல் 25-11-2022
மாதம் : நவம்பர்
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : 1. ஒரு வேண்டுகோள்
அறிமுகம் :
Ø உனக்கானத் தேவையை நீ எவ்வாறு நிறைவேற்றிக் கொள்வாய்?
நீ மற்றவர்களிடம் என்னென்ன பண்புகளை எதிர்ப்பார்ப்பாய்?
கற்பித்தல் துணைக் கருவிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல்
அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்
நோக்கம் :
Ø கலைகளின் இன்றியமையாமையைக்
கவிதை வாயிலாக அறிதல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பகுதியினை
அறிமுகம் செய்தல்
Ø கவிதையினை
வாசித்தல்
Ø கவிதையின் மையக் கருத்தை
கூறல்
Ø கலைகளின் நயங்களை உணர்தல்
Ø தாமே கவிதைப் படைக்கும்
சூழலை உருவாக்கல்
Ø ஓவியங்களில் உயிரோட்டம்
வேண்டும் எனபதனைக் கவிதை வழியாக அறிதல்
நினைவு வரைபடம் :
ஒரு
வேண்டுகோள்
விளக்கம் :
(
தொகுத்தல் )
ஒரு
வேண்டுகோள்
Ø கலைஉலகப் படைப்பாளிகளுக்கு ஓர் வேண்டுகோள்
Ø பாறை உடைப்பவரின் சிலையில் வியர்வை
நாற்றம் வேண்டும்
Ø உழவரின் உருவத்தில் ஈர மண்ணின் வாசம்
வீச வேண்டும்
Ø தாயின் ஓவியத்தில் அன்பும், பாசமும்
வேண்டும்
Ø குழந்தையின் சித்திரத்தில் பால் மணம்
கமழ வேண்டும்
Ø இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் கலைவடிவம் பெற வேண்டும்.
Ø எல்லா படைப்புகளிலும் மானிடப் பண்பு
அவசியம் வேண்டும்
காணொளிகள் :
Ø விரைவுத் துலங்கள் குறியீடு
காணொளி காட்சிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொளிகள்
மாணவர் செயல்பாடு :
o ஆசிரியர் குறிப்பு பற்றி
அறிதல்
o கவிதையை வாசித்தல்
o புதிய சொற்களை அடையாளம்
கண்டு பொருள் அறிதல்
o பாடப்பகுதியினை நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிடல்
o கலைகளை போற்றுதல்
o ஓவியங்களில் மானுடப்
பண்புகளைக் காணுதல்
மதிப்பீடு :
LOT
:
Ø வனப்பு
என்பதன் பொருள் யாது?
Ø மிளகாய்
வற்றலின் _______ தும்மலை வரவழைக்கும்
MOT
Ø தாய்மையின்
ஓவியத்தில் நிறைந்திருக்க வேண்டியவை எவை?
Ø குழந்தைக்கான
வேறு சொற்களைக் கூறுக
HOT:
Ø சிற்பங்களும்,
ஓவியங்களும் எவ்வாறு அமைய வேண்டும்?
Ø நீங்கள்
ஒரு கலைஞராக இருந்தால் எத்தகையப் படைப்புகளை உருவாக்குவீர்கள்?
கற்றல் விளைவுகள் :
Ø 702 – ஒன்றைப் படிக்கும் போது அந்தப்
படைப்பாளி வேறு சூழல்களில் வெளியிட்ட சிந்தனைகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தலும்
அக்கருத்துகளைத் தமது சொந்த கருத்துகளுடனும் அனுபவங்களுடனும் ஒப்பிட்டு, தமது குறிப்பிட்ட
கருத்துடன் படைப்பாளி ஒன்றுபடுதலையும், மாறுபடுதலையும் அறிதல்
தொடர் பணி :
Ø பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்
Ø உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு கலை பற்றிய தகவலை எழுதி வருக
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை