நாள் : 14-11-2022 முதல் 18-11-2022
மாதம் : நவம்பர்
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : 1. பள்ளி மறு திறப்பு
2. ஓரெழுத்து ஒரு மொழி, பகுபதம், பகாப்பதம்
அறிமுகம் :
Ø உனது வீட்டின் அருகில் பள்ளிக்கு செல்லாமல் இருக்கும்
மாணவர்களை நீங்கள் எவ்வாறு வர வைப்பீர்கள்?
Ø ஓரெழுத்தில் பொருள் தரும்
சொற்களில் நீ அறிந்த சொற்களைக் கூறு
கற்பித்தல் துணைக் கருவிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல்
அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்
நோக்கம் :
Ø கதை படிக்கும் ஆர்வத்தை
உருவாக்குதல்
Ø மொழியில் உள்ள எழுத்துகள்
சொற்கள் ஆகியவற்றின் கட்டமைப்பை அறிந்து பயன்படுத்துதல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பகுதியினை
அறிமுகம் செய்தல்
Ø உரைப்பத்தியினை
நிறுத்தற்குறி அறிந்து வாசித்தல்
Ø புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்
Ø புதிய வார்த்தைகளுக்கான
பொருள் அறிதல்
Ø பாடப்பகுதியினை நடைமுறை
வாழ்க்கையோடு ஒப்பிடல்
Ø ஓரெழுத்தில் உள்ள சொற்களை
அடையாளம் காணல்
Ø சொற்களில் பகுக்கும்
சொற்களையும், பகுப்படா சொற்களையும் கூறல்
Ø பகுபத உறுப்புகளை கூறல்
நினைவு வரைபடம் :
பள்ளி
மறு திறப்பு
ஓரெழுத்து ஒரு மொழி, பகுபதம், பகாப்பதம்
விளக்கம் :
(
தொகுத்தல் )
பள்ளி
மறு திறப்பு
Ø ஆசிரியர் : சுப்ரபாரதிமணியன்
Ø பல்வேறு கருத்துகளை வலியுறுத்தி சிறுகதை,
புதினம், கட்டுரை எழுதியுள்ளார்.
Ø ஒன்றரை மாத விடுமுறையில் பின்னலாடை
தொழிலுக்குப் போன கவின், மதிவாணன் பற்றிய கதை
Ø குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்கப்பட
வேண்டும்.
Ø கல்வியே ஒருவருக்கு உயர்வுத் தரும்.
Ø கல்வியின் முக்கியத்துவத்தை கூறும்
கதை
Ø கற்க கசடற : நாம் படிக்க வேண்டிய நூல்களை
கசடற கற்க வேண்டும்.
ஓரெழுத்து
ஒரு மொழி, பகுபதம், பகாப்பதம்
·
நன்னூல் – பவணந்தி முனிவர்
·
ஓரெழுத்து ஒரு மொழிகள்
– 42
·
40 எழுத்துகள் – நெடில்,
2 – குறில்
பகுப்பதம்
·
சொற்களை சிறு சிறு உறுப்புகளாக
பிரிக்கப்படுமாயின் அவை பகுபதம்
·
பகுபதம் – பெயர்பகுபதம்
, வினைப்பகுபதம்
·
பகுபத உறுப்புகள்
: பகுதி, விகுதி, சந்தி, சாரியை, விகாரம்
பகாப்பதம்
·
சிறு சிறு உறுப்புகளாக
பிரிக்க முடியாத பதம் – பகாப்பதம்
·
பெயர், வினை, இடை, உரி
– என 4 வகைச் சொற்களிலும் பகாப்பதங்கள் உண்டு
காணொளிகள் :
Ø விரைவுத் துலங்கள் குறியீடு
காணொளி காட்சிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொளிகள்
மாணவர் செயல்பாடு :
o ஆசிரியர் குறிப்பு பற்றி
அறிதல்
o உரைப்பத்தி வாசித்தல்
o புதிய சொற்களை அடையாளம்
கண்டு பொருள் அறிதல்
o பாடப்பகுதியினை நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிடல்
o உரைப்பத்தி மேற்கோள்
பற்றி அறிந்து கொள்ளுதல்
o கல்வியின் முக்கியத்துவத்தை
பாடப்பகுதியின் துணைக் கொண்டு அறிதல்
o ஓரெழுத்து ஒரு மொழிகளை அறிதல்
o சொற்களில் பகுபதம், பகாப்பதம் பற்றி அறிதல்
o பகுபத உறுப்புகள் அறிதல்
o பகாப்பதங்களின் 4 வகை அறிதல்
மதிப்பீடு :
LOT
:
Ø பள்ளி
மறு திறப்பு என்ற கதையின் ஆசிரியர் யார்?
Ø நன்னூலின்
ஆசிரியர் யார்?
MOT
Ø கவின்
பள்ளி செல்ல விருப்பம் இல்லாமைக்கான காரணங்கள் என்ன?
Ø பகுபத
உறுப்புகள் யாவை?
HOT:
Ø மதிவாணன்
மனமாற்றம் அடைய காரணமாக அமைந்த நிகழ்வு யாது?
Ø பகாப்பதம்
என்பது யாது? அது எத்தனை வகைச் சொற்களில் வருகிறது?
கற்றல் விளைவுகள் :
Ø 704 – தாங்கள் படித்தவற்றைப் பற்றிச்
சிந்தித்து அவற்றின் மீதான வினாக்கள் எழுப்புதல்,கருத்தாடலை
தொடங்கி வைத்தல் ஆகியவற்றின் மூலம் தங்களின் புரிதலை மேம்படுத்துதல்
Ø 716 – மொழி மரபின் நுட்பமான பயன்பாட்டுக்
கூறுகளை அறிந்து அவற்றை தமது மொழியில் பயன்படுத்துதல்
தொடர் பணி :
Ø பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்
Ø எழுதப்
படிக்கத் தெரியாதவர்களுக்கு எவ்வாறு உதவுவீர்கள் என எழுதுக.
Ø நீங்கள்
அறிந்த சில சொற்களை எழுதி அவற்றை பகுபதம், பகாப்பதம் என வகைப்படுத்தி எழுதி வருக.
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை