நாள் : 05-12-2022 முதல் 09-12-2022
மாதம் : டிசம்பர்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : 1. தமிழ் ஒளிர் இடங்கள்
2. தொழிற்பெயர்
அறிமுகம் :
Ø நீங்கள் சென்று வந்த சுற்றுலாத் தலங்கள் பற்றிக்
கூறுக
Ø நீங்கள் என்னென்ன செயல்களை
செய்வீர்கள் என்பதனை ஒரு தாளில் எழுதி கூற வைத்தல்
கற்பித்தல்
துணைக் கருவிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல்
அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்
நோக்கம் :
Ø தமிழக சுற்றுலா இடங்களையும்
அவை வெளிப்படுத்தும் கலை, பண்பாடுக் கூறுகளையும் படித்தறிதல்
Ø தொழிற்பெயரின் வகைகளை
அறிந்து பயன்படுத்துதல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பகுதியினை அறிமுகம்
செய்தல்
Ø விரிவானப் பகுதியினை
வாசிக்க வைத்தல்
Ø நிறுத்தற் குறி அறிந்து
வாசிக்க வைத்தல்
Ø சுற்றுலாத் தலங்கள் பற்றிக்
கூறல்
Ø சுற்றுலாத் தலங்களின்
தன்மைக் குறித்து கூறல்
Ø தொழிற்பெயர் பற்றிக்
கூறல்
Ø தொழிற்பெயரின் வகைகளைக்
கூறல்
Ø தொழிற்பெயரை வாழ்வியலோடு
தொடர்புப் படுத்துதல்
நினைவு வரைபடம் :
தமிழ்
ஒளிர் இடங்கள்
தொழிற்பெயர்
விளக்கம் :
(
தொகுத்தல் )
தமிழ்
ஒளிர் இடங்கள்
Ø இந்தியாவில் உள்ள தொன்மையான நூலகங்களுள்
தஞ்சை சரசுவதி மகால் நூலகமும் ஒன்று. இந்நூலகம் கி.பி. (பொ.ஆ.) 1122 முதல் இயங்கி
வருவதாகக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன
Ø தமிழ் பல்கலைகழகம் –
தஞ்சாவூர்
o
தமிழக
அரசால் கி.பி. (பொ.ஆ.) 1981 இல் தோற்றுவிக்கப்பட்டது.
Ø உ.வே.சா – நூலகம் – சென்னை
o
1942
– இல் தொடக்கம்
o
2128
ஓலைச்சுவடிகளும், 2941 தமிழ் நூல்களும் உள்ளன.
Ø கீழ்திசை நூலகம் - சென்னை
o
1869
ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
Ø கன்னிமாரா நூலகம் – சென்னை
o
1896
இல் தொடங்கப்பட்டது.
o
தமிழ்நாட்டின்
மைய நூலகம்
Ø வள்ளுவர் கோட்டம் – சென்னை
o
திருவள்ளுவரின்
புகழை உலகறியச் செய்யும் வகையில் சென்னைக் கோடம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் என்னும்
கலைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
o
இதன்
கட்டுமானப் பணிகள் கி.பி.(பொ.ஆ.) 1973 இல் தொடங்கி 1976 இல் முடிக்கப்பட்டன.
Ø திருவள்ளுவர் சிலை –
கன்னியாகுமரி
o
திருவள்ளுவர்
சிலை அமைப்பதற்கு மூன்று டன் முதல் எட்டு டன் வரை எடை உள்ள 3,681 கருங்கற்கள்
பயன்படுத்தப்பட்டுள்ளன.
o
திருவள்ளுவர்
சிலை மொத்தம் ஏழாயிரம் டன்
எடை கொண்டது
Ø உலகத் தமிழ்ச் சங்கம்
– மதுரை
o
கி.பி.
(பொ.ஆ.) 1981-ஆம் ஆண்டு மதுரையில்
நடைபெ ற்ற உலகத்த மிழ் மாநாட்டில் மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவப்படும்
என்று அறிவிக்கப்பட்டது.
Ø சிற்பக் கலைக்கூடம் –
பூம்புகார்
o
கி.பி.(பொ.ஆ.)
1973 ஆம் ஆண்டு
பூம்புகார் கடற்கரையில் சிற்பக் கலைக்கூடம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
தொழிற்பெயர்
Ø ஒரு செயலின் அல்லது
வினையின் பெயராக அமைவது தொழிற்பெயர் எனப்படும்.
Ø தொழிற்பெயர் எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக்
காட்டாது.
Ø படர்க்கை இடத்தில்
மட்டும் வரும்.
Ø விகுதி பெற்ற தொழிற்பெயர்
: தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, வு, தி, சி, வி, மை போன்றவை தொழிற்பெயர் விகுதிகளாக
வரும்.
Ø முதனிலைத் தொழிற்பெயர்
: முதனிலை
எவ்வகை மாற்றமும் பெறாமல் தொழிற்பெயராக அமைவது
முதனிலைத் தொழிற்பெயர் எனப்படும
Ø முதனிலை திரிந்த தொழிற்பெயர்
- முதனிலை
திரிவதால் உருவாகும் தொழிற்பெயர் முதனிலை
திரிந்த தொழிற்பெயர் எனப்படும்
காணொளிகள் :
Ø விரைவுத் துலங்கள் குறியீடு
காணொளி காட்சிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொளிகள்
தமிழ் ஒளிர்
இடங்கள்:
தொழிற்பெயர்
மாணவர் செயல்பாடு :
o நிறுத்தற் குறி அறிந்து
வாசித்தல்
o சுற்றுலாத்தலங்களை அறிதல்
o சுற்றுலாத் தலங்களின்
பயன்பாடு அறிதல்
o சுற்றுலாத்தலங்களின்
அவசியம் மற்றும் தொன்மையை அறிதல்
o தொழிற் பெயர் பற்றி அறிதல்
o தொழிற்பெயரின் வகைகளை
அறிதல்
o விகுதி பெற்ற தொழிற்பெயர்களைப்
பற்றி அறிதல்
o முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
பற்றிக் கூறுதல்
o தொழிற்பெயர்களை வாழ்வியலோடு
தொடர்புப்படுத்துதல்
மதிப்பீடு :
LOT
:
Ø நீ அறிந்த சுற்றுலாத்
தலங்கள் யாவை?
Ø இவற்றில் எது தொழிற்
பெயர்? வந்தான்,வருதல், வந்தவன்,
MOT
Ø தஞ்சை தமிழ்ப் பல்கலை
கழகத்தின் சிறப்புப் பற்றிக் கூறுக
Ø தொழிற்பெயருக்கும், வினைமுற்றுக்கும்
உள்ள வேறுபாடுகள் யாவை?
HOT:
Ø
சுற்றுலாத்
தலங்கள் மூலம் நீங்கள் எவற்றையெல்லாம் தெரிந்து கொள்வீர்கள்?
Ø
நாம்
அன்றாடம் செய்யும் செயல்பாடுகளில் காணும் தொழிற்பெயர்களைக் கூறுக
கற்றல் விளைவுகள் :
Ø 702 – ஒன்றைப் படிக்கும்
போது அந்தப் படைப்பாளி வேறு சூழல்களில் வெளியிட்ட சிந்தனைகளைப் புரிந்துகொள்ள முயற்சி
செய்தலும் அக்கருத்துகளைத் தமது சொந்த கருத்துகளுடனும் அனுபவங்களுடனும் ஒப்பிட்டு,
தமது குறிப்பிட்ட கருத்துடன் படைப்பாளி ஒன்றுபடுதலையும், மாறுபடுதலையும் அறிதல்
Ø 816 – மொழிப் பற்றிய
நுட்பங்களை அறிந்து அவற்றை தமது மொழியில் பயன்படுத்துதல்
தொடர் பணி :
Ø பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்
Ø நீங்கள்
சென்று வந்த சுற்றுலாத் தலம் ஒன்றினைப் பற்றி எழுதி வருக.
Ø நீங்கள்
அன்றாடம் மேற்கொள்ளும் செயல்பாடுகளில் உள்ள தொழிற்பெயர்களை இனம் கண்டு எழுதி வருக
_____________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை