6TH - TAMIL - NOTES OF LESSON - DECEMBER - 1ST WEEK

 

நாள்               :           05 -12-2022 முதல் 09 -12-2022       

மாதம்                          டிசம்பர்

வாரம்               :             முதல்  வாரம்                     

வகுப்பு              :           ஆறாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. உழைப்பே மூலதனம்

                                          2. சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள்

அறிமுகம்                           :

Ø  உங்களிடம் தேவைக்கு அதிகமான பணம் கிடைத்தால் என்னவெல்லாம் செய்வீர்கள்?

Ø  முன்னர் கற்ற இலக்கணப் பகுதியிலிருந்து வினாக்கள் கேட்டு அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்     :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                            :

Ø  தொழில் மூலம் அடையும் முன்னேற்றத்தை உணர்தல்

Ø  சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகளை அறிந்துப் பொருத்தமாகப் பயன்படுத்துதல்

ஆசிரியர் குறிப்பு          :

 

Ø  பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø  பாடப்பகுதியின் மையக் கருத்தை உணர்த்துதல்

Ø  கதையின் கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்தல்

Ø  நிறுத்தற் குறிக்கு ஏற்றாற் போல் உரைப் பகுதியினை வாசித்துக் காட்டல்

Ø  மாணவர்களை பின் தொடர்ந்து வாசிக்க வைத்தல்

Ø  சுட்டு எழுத்துகள் பற்றிக் கூறல்

Ø  அகச்சுட்டு, புறச்சுட்டு பற்றிக் கூறல்

Ø  அண்மைச்சுட்டு, சேய்மைச் சுட்டு பற்றிக் கூறல்

Ø  சுட்டுத் திரிபுகளைப் பற்றிக் கூறல்

Ø  வினா எழுத்துகளில் அக வினா, புற வினா பற்றிக் கூறல்

கருத்துரு வரைபடம்               :

உழைப்பே மூலதனம்


சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள்

விளக்கம்        :

உழைப்பே மூலதனம்

Ø  அருளப்பர் என்னும் வணிகர்

Ø  வளவன், அமுதன், எழிலன் என மூன்று பிள்ளைகள்

Ø  அருளப்பர் வெளிநாடு செல்ல திட்ட மிடுகிறார்.

Ø  தமது பிள்ளைகளுக்கு ஐம்பதாயிரம் தருகிறார். தான் திரும்பி வரும் போது அதைத் திருப்பி பத்திரமாக எனக்குத் தர வேண்டுமென்கிறார்.

Ø  வளவன் உழவுத் தொழிலில் ஆர்வம் கொண்டு முதலீடு செய்து தொழில் செய்தான்

Ø  அமுதா ஆடு,மாடுகள் வளர்த்து பால், வெண்ணை, நெய் போன்றவற்றை விற்பனை செய்தாள்

Ø  எழிலன் பணத்தை பத்திரமாக வைத்திருந்தான்

Ø   அருளப்பர் வந்ததும் மூவரும் தன்னிடம் உள்ள பணத்தினை  என்ன செய்தார்கள் எனக் கூறிக் கொடுத்தனர்.

Ø  எழிலன் எதுவும் செய்யாமல் பணத்தை திருப்பிக் கொடுத்தான்

Ø  எழிலனுக்கு அறிவுரைகள் கூறி அருளப்பன் தன்னிடம் தொழிலைக் கற்றுக் கொள்ளக் கூறினார்.

சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள்,

Ø  ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துக்களுக்கு சுட்டு எழுத்துகள் என்று பெயர்.

அகச்சுட்டு :

சொல்லின் உள்ளேயே இருந்து சுட்டுப் பொருளைத் தருவது.

எ.கா : அவன்

                                    புறச்சுட்டு

     சொல்லின் உள்ளேயே இருந்து சுட்டுப் பொருளைத் தருவது.

எ.கா : அம்மலை

அண்மைச் சுட்டு

      அருகில் உள்ளவற்றை சுட்டுவது. - இவன்

சேய்மைச் சுட்டு

    தொலைவில் உள்ளவற்றைச் சுட்டுவது - அவள்

சுட்டுத் திரிபு

  சுட்டு எழுத்துகளில் மாற்றம் பெற்று வருவது – அம்மரம் – அந்த மரம்

வினா எழுத்துகள்

வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர்

யா,ஆ,எ,ஓ,ஏ – ஐந்தும் வினா எழுத்துகள்

மொழிக்கு முதலில் வருபவை – எ,யா

மொழிக்கு இறுதியில் வருபவை – ஆ, ஓ

மொழிக்கு இடையிலும், இறுதியிலும் வருபவை - ஏ

அக வினா :

 அகத்தே இருந்து வினாப் பொருளைத் தருவது – எது? யார்?

புற வினா :

புறத்தே இருந்து வினாப் பொருளை தருவது – அவனா?

 

காணொளிகள்            :

Ø  விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்

உழைப்பே மூலதனம் 



 சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் 


Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்





 

மாணவர் செயல்பாடு :

Ø   பாடப்பகுதியினை வாசித்தல்

Ø   புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்

Ø   புதிய வார்த்தைகளுக்கான பொருளை அகராதிக் கொண்டு அறிதல்

Ø   மையக் கருத்தை அறிதல்

Ø   பணத்தின் தேவையை உணர்தல்

Ø   பணத்தைக் கொண்டு பொருலீட்டும் வழிகளை அறிதல்

Ø   சுட்டு எழுத்துகள் பற்றி அறிதல்

Ø   சுட்டு எழுத்துகளில் அகச்சுட்டு, புறச்சுட்டு, அண்மைச் சுட்டு, சேய்மைச் சுட்டு, சுட்டுத் திரிபு பற்றி அறிதல்

Ø   வினா எழுத்துகளில் அக வினா,  புற வினா பற்றி அறிதல்

மதிப்பீடு                   :

                             LOT :

Ø  அருளப்பர் என்பவர் யார்?

Ø  சுட்டு எழுத்துகள் என்பது யாது?

MOT :

Ø  அருளப்பர் பிள்ளைகள் பணத்தை என்ன செய்தார்கள்?

Ø  அந்த வீடு யாருடையது? உன்னுடன் வந்தவன் அவனா? -இத்தொடர்களில் காணப்படும் சுட்டுச்சொற்கள் மற்றும் வினாச் சொற்கள் யாவை?

HOT

Ø  பணம் சார்ந்த பழமொழிகளைக் கூறுக

Ø  அகச்சுட்டு,அகவினா,புறச்சுட்டு,புறவினா என்று பெயரிட்ட காரணத்தை எழுதுக.

கற்றல் விளைவுகள்                    :                                   உழைப்பே மூலதனம்

Ø   T609 மிக நுட்பமாக ஒரு நூலை ஆய்ந்து குறிப்பிட்ட செய்திகளைத் தேடிக்கண்டு பிடித்தல் ஊகித்தறிதல்மற்றும் முடிவு செய்தல்

 

சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள்

Ø  T T816  மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றை தம் மொழியில் எழுதும் போது பயன்படுத்துதல்

தொடர் பணி                   :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

Ø  நீங்கள் எழிலனாக இருந்திருந்தால் நீங்கள் என்ன செய்து இருப்பீர்கள் என எழுதி வருக

Ø  வினாச் சொற்களைக் கொண்டு தொடர் அமைத்து வருக

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post