இளந்தமிழ்
ஆறாம் வகுப்பு
தமிழ் – வினா – விடைத் தொகுப்பு
பருவம் : 2 இயல் : 3
நன்றி அறிதல் வளரும் வணிகம்
அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர் ______________
அ) நுகர்வோர் ஆ) தொழிலாளி இ) முதலீட்டாளர் ஈ) நெசவாளி
2. வணிகம் + சாத்து என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____
அ) வணிகசாத்து ஆ) வணிகம்சாத்து இ) வணிகச்சாத்து ஈ) வணிகத்துசாத்து
3. பண்டம் + மாற்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______
அ) பண்டமாற்று ஆ) பண்டம்மாற்று இ) பண்மாற்று ஈ) பண்டுமாற்று
4. மின்னணு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______
அ) மின் + னணு ஆ) மின்ன + அணு இ) மின்னல் + அணு ஈ) மின் + அணு
5. விரிவடைந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________
அ) விரி+வடைந்த ஆ) விரி+அடைந்த இ) விரிவு+அடைந்த ஈ) விரிவ்+அடைந்த
பின்வரும் சொற்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக
அ) வணிகம் - பொருள் வாங்குவது விற்பது வணிகம் ஆகும்
ஆ) ஏற்றுமதி – மிகுதியாக உள்ள பொருட்களை அயல்நாடுகளில் விற்பனை செய்ய
ஏற்றுமதி செய்வர்.
இ) சில்லறை – சிறு சிறு கடைகளில் சில்லறை வணிகம் மேற்கொள்ளப்படுகிறது.
ஈ) கப்பல் –மனிதர்கள் கப்பலில் உலகை வலம் வருகின்றனர்.
குறுவினா
1. வணிகம் என்றால் என்ன?
ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து வாங்குவதும் பிறருக்கு விற்பதும் வணிகம் ஆகும்.
2. பண்டமாற்று முறைக்கு எடுத்துக்காட்டுத் தருக.
நம்மிடம் கூடுதலாக இருக்கும் பொருள்களைக் கொடுத்து நமக்குத் தேவையான
பொருள்களைப் பெற்றுக் கொள்வது பண்டமாற்று வணிகம் ஆகும்.
3. சிறுவணிகப் பொருட்கள் யாவை?
பால், கீரை, காய்கறிகள்
சிறுவினா
1. சிறுவணிகம், பெருவணிகம் - வேறுபடுத்துக.
சிறு வணிகம்
பெரு வணிகம்
நம் அன்றாட தேவைகளை நிறைவு செய்யும் வணிகம்
பெரு முதலீட்டில் அதிக அளவு பொருட்களை சேகரித்து சில்லறை வணிகர்களுக்கு விற்பனை செய்வது
முதலீடு குறைவு
முதலீடு அதிகம்
நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்வது
சில்லறை வணிகருக்கு விற்பனை செய்வது
2. பழந்தமிழர் ஏற்றுமதி, இறக்குமதி செய்த பொருள்கள் எவை?
ஏற்றுமதி பொருட்கள் :
தேக்கு , மயில் தோகை, அரிசி, சந்தனம், இஞ்சி, மிளகு போன்றவை பிற
நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
இறக்குமதி பொருட்கள் :
கண்ணாடி, கற்பூரம், பட்டு, அரேபிய குதிரைகள்
சிந்தனை வினா
1. வணிகப் பொருள்கள் தற்காலத்தில் எவ்வாறெல்லாம் மக்களை வந்தடைகின்றன?
o உற்பத்தியாளரிடமிருந்து மொத்த வியாபாரிக்கு செல்கிறது
o மொத்த வியாபாரியிடமிருந்து சில்லறை வணிகரிடம் செல்கிறது.
o சில்லறை வணிகரிடமிருந்து நுகர்வோருக்கு செல்கிறது.
o மக்கள் கடைகளுக்கு சென்று வாங்குகின்றனர்,
o இன்று இணையவழி வணிகம் மூலம் பொருட்கள் வாங்கப்படுகிறது.
2. உங்கள் பகுதியில் நடைபெறும் தொழில்களைப் பட்டியலிடுக.
(i) பால் வியாபாரம்
(ii) காய்கறி அங்காடி
(iii) செய்தித்தாள் விற்பனையாளர்
(iv) தேநீர் அங்காடி
(v) பல்பொருள் விற்பனையாளர்
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எடுத்து எழுதுக.
(மின்னணு வணிகம், காசோலை, இணையத்தள வணிகம், வரைவோலை, வங்கி,
மின்னணு மயம், பற்று அட்டை, பணத்தாள், கடன் அட்டை)
ஆங்கிலச் சொல்
தமிழ்ச்சொல்
கரன்சி நோட்
பணத்தாள்
பேங்க்
வங்கி
செக்
காசோலை
டிமாண்ட் டிராஃப்ட்
வரைவோலை
டிஜிட்டல்
மின்னணு மயம்
டெபிட் கார்டு
பற்று அட்டை
கிரெடிட் கார்டு
கடன் அட்டை
ஆன்லைன் ஷாப்பிங்
இணையத்தள வணிகம்
ஈ-காமர்ஸ
மின்னணு வணிகம்
சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் - வினா விடைகளைக் காண