6TH - TAMIL - 2ND TERM -UNIT 3 - SUTTU EZHUTHUGAL VINA EZHUTHUGAL

 

இளந்தமிழ்

ஆறாம் வகுப்பு

தமிழ் – வினா – விடைத் தொகுப்பு

பருவம் : 2                                                                                     இயல் : 3

     கூடி தொழில் செய்                                                            சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள்  

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:-

1. என் வீடு அங்கே உள்ளது. (அது / அங்கே)

 

2. தம்பி இங்கே வா. (இவர் / இங்கே)

 

3. நீர் எங்கே தேங்கி இருக்கிறது? (அது / எங்கே)

 

4. யார் அவர் தெரியுமா? (அவர் / யாது)

 

 5. உன் வீடு எங்கே அமைந்துள்ளது? (எங்கே / என்ன)

 

 குறுவினா

1. சுட்டு எழுத்துகள் என்றால் என்ன? அவை யாவை?

ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர்

 

2. அகவினா, புறவினா – வேறுபாடு யாது?

அகவினா :

          வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருளைத் தருவது 

அகவினா எனப்படும்.

புறவினா:-

            வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தருவது புறவினா 

எனப்படும்

 

சிந்தனை வினா

அகச்சுட்டு, அகவினா, புறச்சுட்டு, புறவினா என்று பெயரிட்ட காரணத்தை எழுதுக.

(i) அகச்சுட்டு, அகவினா இவற்றில் முறையே சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் சொல்லின்

             உள்ளேயே நின்று சுட்டுப்பொருளையும் வினாப் பொருளையும் உணர்த்துவதால் இப்பெயர் 

               பெற்றது.

(ii) புறச்சுட்டு, புறவினா இவற்றில் முறையே சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் சொல்லின்

             வெளியே நின்று சுட்டுப்பொருளையும் வினாப் பொருளையும் உணர்த்துவதால் இப்பெயர்                 பெற்றது

மொழியை ஆள்வோம் - மொழியோடு விளையாடு
வினா - விடைகளைக் காண
CLICK HERE

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post