6TH - TAMIL - 2ND TERM -UNIT 3 - NANELAM PATAITHAVAN

 

இளந்தமிழ்

ஆறாம் வகுப்பு

தமிழ் – வினா – விடைத் தொகுப்பு

பருவம் : 2                                                                                                                                         இயல் : 3

கூடி தொழில் செய்                                                                                              நானிலம் படைத்தவன்

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                         

1. போர்க்களத்தில் வெளிப்படும் குணம்----------

அ) மகிழ்ச்சி        ஆ) துன்பம்        இ) வீரம்           ஈ) அழுகை

 

 2. கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது----------

அ) கல் + அடுத்து ஆ) கல் + எடுத்து இ) கல் + லடுத்து ஈ) கல் + லெடுத்து

 

3. நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது----------

 அ) நா + னிலம் ஆ) நான்கு + நிலம் இ) நா + நிலம் ஈ) நான் + நிலம்

 

 4. நாடு + என்ற என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்----------

 அ) நாடென்ற   ஆ) நாடன்ற       இ) நாடுஎன்ற    ஈ) நாடுஅன்ற

 

5. கலம் + ஏறி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்----------

அ) கலம்ஏறி       ஆ) கலமறி        இ) கலன்ஏறி     ஈ) கலமேறி

 

சொற்றொடரில் அமைத்து எழுதுக.

அ) மாநிலம் – பல மாநிலங்களைக் கொண்டது நம் இந்தியா

 

ஆ) கடல்   - இந்த பூமி மூன்று பக்கங்கள் கடல் நீரால் சூழப்பட்டுள்ளது

 

இ) பண்டங்கள் – சங்க காலத்தில் பண்டங்கள் கொடுத்து பண்டங்கள் பெறும் 

பண்டமாற்ற முறை இருந்தது. 

 

நயம் அறிக.

 1. நானிலம் படைத்தவன் பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.

எதுகை :

          ல்லெடுத்து ல்லெடுத்த

            ராக்கி - பேராக்கி

 2. நானிலம் படைத்தவன் பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக

மோனை

ல்லெடுத்து – காட்டு

ல்லெடுத்த - றத்தால்.

 

குறுவினா

1. நான்கு நிலங்கள் என்பன யாவை?

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்

 

2. தமிழன் எதற்கு அஞ்சினான்?

          சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சினான்

 

3. தமிழன் எதற்காகக் கண்டங்களைச் சுற்றி வந்தான்?

          ஏலம், மிளகு ஆகியவற்றைப் பெருமகிழ்ச்சியோடு கப்பல்களில் ஏற்றிக் 

கண்டங்கள்தோறும் அனுப்பி வணிகம் செய்தான்.

 

சிறுவினா

1. தமிழன் தான் வாழ்ந்த நாட்டினை எவ்வாறு உருவாக்கினான்?

Ø  பெரிய நிலப்பரப்பைத் திருத்திப் பண்படுத்தினான்.

Ø  தனது உடல் வலிமையால் வளத்தைப் பெருக்கினான்.

Ø  ஊர், நகரம், நாடு ஆகியவற்றை உருவாக்கி வாழும் பெருமையைப் பெற்றான். 

 

 2. தமிழனின் செயல்களாக முடியரசன் கூறுவன யாவை?

            Ø  கடல்களைக் கடந்து பயணம் செய்தான்.

            Ø  போர்களிலும் எளிதாக வெற்றி கண்டான்

            Ø  இமயமலையில் தன் வெற்றிக் கொடியை நாட்டினான்

            Ø  ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்தான்

            Ø  கப்பலில் உலகை வலம் வந்தான்

 

சிந்தனை வினா

காடுகளில் வாழ்ந்த மனிதன் எவ்வாறு படிப்படியாக நாகரிகம் அடைந்திருப்பான் 

எனச் சிந்தித்து எழுதுக.

Ø  காட்டு விலங்குகளைச் சுட்டுத் தின்பதற்காக நெருப்பைக் கண்டறிந்தான்

Ø  பலவகையான கருவிகளைக் கண்டறிந்து அவற்றை விவசாயத்திற்கு பயன்படுத்தினான்.

Ø  உணவிற்காக இடம் பெயர்ந்தான்

Ø  இடம் பெயர்ந்த இடத்தில் வீடு கட்டி வாழ்ந்தான்

Ø  இப்படியாக நாகரிகம் அடைந்திருப்பான்

கடலோடு விளையாடு - வினா - விடைகளைக் காண

CLICK HERE 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post