6TH - TAMIL - 2ND TERM -UNIT 3 - MOZHITHIRAN

 

இளந்தமிழ்

ஆறாம் வகுப்பு

தமிழ் – வினா – விடைத் தொகுப்பு

பருவம் : 2                                                                                     இயல் : 3

     கூடி தொழில் செய்                                                மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு 

 

அ) சொற்றொடர்ப் பயிற்சி.

அ) அந்த, இந்த என்னும் சுட்டுச்சொற்களை அமைத்துத் தொடர்கள் எழுதுக.

1. அந்த சட்டை என்னுடையது.

2. இந்த வழியே என் வீட்டிற்குச் செல்லலாம்

 

ஆ) எங்கே, ஏன், யார் ஆகிய வினாச்சொற்களை அமைத்துத் தொடர்கள் எழுதுக.

1. எங்கே  எனது புத்தகம்?

2. ஏன் இப்படிச் செய்தாய்?

3. இதை செய்தது யார்?

 

ஆ) சொற்களைச் சேர்த்துச் சொற்றொடரை நீட்டி எழுதுக.

 

அ) நான் பள்ளியில் படிக்கிறேன். (ஆறாம் வகுப்பு , அரசு)

நான் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறேன்

நான் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறேன்

 

ஆ) பொன்னன் முன்னேறினான். ( வணிகம் செய்து, பொருளீட்டி, துணி)

 

பொன்னன் வணிகம் செய்து முன்னேறினான்.

பொன்னன் வணிகம் செய்து பொருளீட்டி முன்னேறினான்

பொன்னன்  துணி வணிகம் செய்து பொருளீட்டி முன்னேறினான்

 

இ) பின்வரும் கட்டங்களில் உள்ள சொற்களைக் கொண்டு சொற்றொடர்கள் அமைக்க

நீ

நான்

அவன்

அவள்

அவர்

ஊருக்குச்

சென்றாய்

 சென்றார்

சென்றேன்

சென்றான்

சென்றாள்

 

நீ ஊருக்குச் சென்றாய்

நான் ஊருக்குச் சென்றேன்

அவன் ஊருக்குச் சென்றான்

அவள் ஊருக்குச் சென்றாள்

அவர் ஊருக்குச் சென்றார்

 

ஈ) அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தக்க இடத்தில் சேர்த்து எழுதுங்கள்.

அ) நீங்கள் வரும்போது எனக்குப் புத்தகம் வாங்கி வாருங்கள். (ஒரு)

நீங்கள் வரும்போது எனக்கு ஒருப் புத்தகம் வாங்கி வாருங்கள்

 

ஆ) நாம் உரங்கள் தயாரித்து உழவர்களுக்கு வழங்க வேண்டும். (இயற்கை)

நாம் இயற்கை உரங்கள் தயாரித்து உழவர்களுக்கு வழங்க வேண்டும்.

 

 இ) நான் சொன்ன வேலையை அக்கறையுடன் செய்திருக்கிறார்கள். (மிகுந்த)

நான் சொன்ன வேலையை மிகுந்த அக்கறையுடன் செய்திருக்கிறார்கள்.

 

உ) கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக

மனிதர்களுக்குத் தேவையான பொருள்களைக் கிடைக்கச் செய்வதே வணிகத்தின் 

நோக்கங்களுள் ஒன்று. ஓர் இடத்தில் உற்பத்தியாகும் பொருள்களைப் பல இடங்களுக்கு 

அனுப்புவதும் பல இடங்களில் கிடைக்கும் பொருள்களை ஓர் இடத்தில் கிடைக்கச் 

செய்வதும் வணிகம் ஆகும். கிடைக்கும் பொருள்களின் மதிப்பைக் கூட்டிப் புதிய 

பொருளாக மாற்றுவது சிறந்த வணிகமாகும். சான்றாகக் கல் என்பது விற்பனைப் 

பொருளன்று. ஆனால் அதனைச் செதுக்கிச் சிலையாக மாற்றலாம். உதிரும் கல்தூளைக் 

கோலமாவாக மாற்றலாம். இதனை மதிப்புக் கூட்டுதல் என்பர்.

1. கிடைக்கும் பொருள்களின் _______________ க் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகம்.

(அ) அளவை  (ஆ) மதிப்பை  (இ) எண்ணிக்கையை  (ஈ) எடையை

 2. சிலை செதுக்கப்படும்போது உதிரும் கல்தூளை  கோலமாவாக மாற்றலாம்.

3. வணிகத்தின் நோக்கம் என்ன?

மனிதர்களுக்குத் தேவையான பொருள்களைக் கிடைக்கச் செய்வதே வணிகத்தின் நோக்கங்களுள் ஒன்று

 4. மதிப்புக் கூட்டுதல் என்றால் என்ன?

          . கிடைக்கும் பொருள்களின் மதிப்பைக் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகமாகும்.

5. இப்பத்திக்கு ஏற்ற தலைப்பை எழுதுக

                   வணிகம்

ஊ) கடிதம் எழுதுக.

பிறந்த நாள் பரிசு அனுப்பிய மாமாவுக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதுக.

                                                                                                                                                    சேலம் – 6

                                                                                                                                                    06-11-2022

அன்புள்ள மாமவுக்கு,

            வணக்கம். நீங்கள் நலமா? இங்கு யாவரும் நலம். சென்ற வாரம் என் பிறந்த 

நாளுக்கு  நீங்கள் அனுப்பிய  எழுதுகோல் மற்றும் புதுமையான பயிற்சி ஏடு மிகவும் 

பயனுள்ளதாக உள்ளது. இந்த பரிசு எனக்கு மிகவும் மிகழ்ச்சியாக உள்ளது. இதன் மூலம் 

படிப்பில் மிகுந்த கவனம் செலுத்துவேன்.

                                                நன்றி.

                                                                                                                                    இப்படிக்கு,

                                                                                                                          தங்கள் அன்புள்ள,

                                                                                                                                    முகிலன்.

உறைமேல் முகவரி:-

பெறுநர்

            க. அன்புச்செழியன்,

            50, பாரதி தெரு,

            காமராஜர் நகர்,

            ஈரோடு - 636007

                       

மொழியோடு விளையாடு

அ) விடுகதைக்கு விடை காணுங்கள்

 (கப்பல், ஏற்றுமதி இறக்குமதி, தராசு, நெல்மணி, குதிரை )

 1) தனி ஆளாய் இருந்தால் நடுநிலையாய் இருந்திடுவான்; யாரும் வந்து அமர்ந்தால் ஏற்றம் 

இறக்கம் காட்டிடுவான். அவன் யார்?

தராசு

2) தண்ணீரில் கிடப்பான்; தள்ளாடித் தள்ளாடி நடப்பான்; காலில்லாத அவன் யார்?

கப்பல்

3) பேசமுடியாத ஓட்டப்பந்தய வீரனுக்கு வாய்க்கு மட்டும் பூட்டு. அவன் யார்?

குதிரை

 4) இயந்திரத்தால் செய்ய முடியாத மணி; ஊசி நூலில் கோக்க முடியாத மணி; பூமியில் 

விளையும் மணி; பூவுலகத்தார் விரும்பும் மணி. எந்த மணி?

நெல்மணி

5) ஒருமதி வெளியே போகும்; ஒருமதி உள்ளே வரும்; இருமதியும் சேர்ந்துவிட்டால் 

பலநிதியும் சேர்ந்து வரும். அவை என்ன?

ஏற்றுமதி இறக்குமதி

ஆ) பின்வரும் நவமணிகளை அகரவரிசைப்படுத்தி எழுதுக.

 நீலம், கோமேதகம், மாணிக்கம், வைரம், பவளம், வைடூரியம், முத்து, புஷ்பராகம், மரகதம்

கோமேதகம், நீலம், பவளம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம்

 

இ) குறுக்கெழுத்துப் புதிர்

இடமிருந்து வலம்

1. நானிலம் படைத்தவன் பாடலை எழுதியவர். முடியரசன்

 2. சுட்டிக்காட்டப் பயன்படுவது சுட்டு எழுத்து.

 வலமிருந்து இடம்

 4. அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது - குதிரை

 5. ஒரு பொருளைக் கொடுத்து வேறு பொருளைப் பெறும் முறை பண்டமாற்ற முறை

 மேலிருந்து கீழ்

1. காடும் காடு சார்ந்த இடமும் - முல்லை

 3. தோட்டத்தைச் சுற்றி வேலி அமைக்க வேண்டும் .

கீழிலிருந்து மேல்

 4. மீனவருக்கு மேகம் குடை போன்றது.

5. உடலுக்குப் போர்வையாக அமைவது. – மேகமூட்டம்

ஈ) கலைச்சொல் அறிவோம்

பண்டம் - Commodity

கடற்பயணம் - Voyage

பயணப்படகுகள் - Ferries

தொழில் முனைவோர் - Entrepreneur

பாரம்பரியம் - Heritage

கலப்படம் – Adulteration

 நுகர்வோர் - Consumer

வணிகர் - Merchant

ஆக்கம் :

தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள்

CLICK HERE TO GET PDF THIS FILE 

WAIT FOR 10 SECONDS

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post