6TH - TAMIL - 2ND TERM -UNIT 3 - KADALODU VILAIYADU

 

இளந்தமிழ்

ஆறாம் வகுப்பு

தமிழ் – வினா – விடைத் தொகுப்பு

பருவம் : 2                                                                 இயல் : 3 

கூடி தொழில் செய்                                                                                கடலோடு விளையாடு

மனப்பாடப்பாடல்

பாயும்புயல் நம்ஊஞ்சல் – ஐலசா

பனிமூட்டம் உடல்போர்வை – ஐலசா

காயும்கதிர்ச் சுடர்கூரை – ஐலசா

கட்டுமரம் வாழும்வீடு – ஐலசா

 மின்னல்வரி அரிச்சுவடி – ஐலசா

பிடிக்கும்மீன்கள் நம்பொருள்கள் – ஐலசா

முழுநிலவே கண்ணாடி – ஐலசா

மூச்சடக்கும்நீச்சல் யோகம் – ஐலசா

தொழும்தலைவன் பெருவானம் – ஐலசா

துணிவோடு தொழில்செய்வோம் – ஐலசா

 

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                            

1. கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது___________ 

அ) கதிர்ச்+சுடர் ஆ) கதிரின்+சுடர் இ) கதிரவன்+சுடர் ஈ) கதிர்+சுடர்

 

 2. மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது___________ 

அ) மூச்சு+அடக்கி ஆ) மூச்+அடக்கி இ) மூச்+சடக்கி ஈ) மூச்சை+அடக்கி

 

3. பெருமை + வானம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______ 

அ) பெருமைவனம் ஆ) பெருவானம் இ) பெருமானம் ஈ) பேர்வானம்

 

 4. அடிக்கும் + அலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______ 

அ) அடிக்குமலை ஆ) அடிக்கும் அலை இ) அடிக்கிலை  ஈ) அடியலை

 

பாடல் வரிகளுக்கு ஏற்பப் பொருத்துக

1. விடிவெள்ளி – பஞ்சுமெத்தை

 2. மணல் - ஊஞ்சல்

3. புயல் - போர்வை

4. பனிமூட்டம் - விளக்கு

விடை

1. விடிவெள்ளி –விளக்கு

 2. மணல் - பஞ்சுமெத்தை

3. புயல் - ஊஞ்சல்

4. பனிமூட்டம் - போர்வை

குறுவினா

1. அலையையும் மேகத்தையும் மீனவர்கள் என்னவாகக் கருதுகின்றனர்?

o    கடல் அலையே தோழன்

o    மேகமே குடை

 2. கடல் பாடலில் கண்ணாடியாகவும் தலைவனாகவும் குறிப்பிடப்படுவன யாவை?

o    கண்ணாடி – முழுநிலவு

o    தலைவன் -  வானம்

 3. மீனவர்கள் தமது வீடாகவும் செல்வமாகவும் கருதுவன யாவை?

o    வீடு –  கட்டுமரம்

o    செல்வம் – மீன்கள்

 சிந்தனை வினா

1. நீங்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும் தொழில்களில் ஒன்றைப் பற்றி ஐந்து வரிகள் எழுதுக.

                    o    நாங்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும் தொழில் விவசாயம்

                    o    உலககிற்கே உணவளிக்கும் முக்கிய தொழில்

                    o    நெல், கம்பு, சோளம் முதலிய பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன.

                    o    விவசாயம் மூலம் பல தொழில் வாய்ப்புகள் கிடைக்கின்றன.

                    o    விவசாயத்திற்கு உதவும் மாடுகள் இங்கு மதிக்கப்பட்டு விழா 

                           கொண்டாடப்படுகிறது.

2. நாட்டுப்புற இலக்கியங்களை வாய்மொழி இலக்கியங்கள் என்று கூறக் காரணம் என்ன?

உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் 

பாடலே நாட்டுப்புறப்  பாடலாகும். காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு 

வருவதால் இதனை வாய்மொழி இலக்கியம் என்பர்.

வளரும் வணிகம் - வினா - விடைகளைக் காண

CLICK HERE 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post