6TH - TAMIL - 2ND TERM -UNIT 2 - THIRUKKURAL

 

இளந்தமிழ்

ஆறாம் வகுப்பு

தமிழ் – வினா – விடைத் தொகுப்பு

பருவம் : 2                                                                                                                                         இயல் : 2

வாழ்வியல்                                                                                                                                திருக்குறள்

மனப்பாடக்குறள்

1. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து

 

2. வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்து அனையது உயர்வு

 

3. சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க

சொல்லில் பயன்இலாச் சொல்

 

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. விருந்தினரின் முகம் எப்போது வாடும்?

 அ) நம் முகம் மாறினால்             ஆ) நம் வீடு மாறினால்

இ) நாம் நன்கு வரவேற்றால்         ஈ) நம் முகவரி மாறினால்

 2. நிலையான செல்வம் .........................

 அ) தங்கம்         ஆ) பணம்          இ) ஊக்கம்       ஈ) ஏக்கம்

3. ஆராயும் அறிவு உடையவர்கள் ....................... சொற்களைப் பேசமாட்டார்கள்.

அ) உயர்வான    ஆ) விலையற்ற             இ) பயன்தராத   ஈ) பயன்உடைய

4. பொருளுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) பொருளு+டைமை                  ஆ) பொரு+ளுடைமை

இ)பொருள்+உடைமை                ஈ) பொருள்+ளுடைமை

5. உள்ளுவது+எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

 அ) உள்ளுவதுஎல்லாம்               ஆ) உள்ளுவதெல்லாம்

இ) உள்ளுவத்தெல்லாம்               ஈ) உள்ளுவதுதெல்லாம்

 6. பயன்+இலா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) பயனிலா      ஆ) பயன்னில்லா            இ) பயன்இலா    ஈ) பயன்இல்லா

நயம் அறிக

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வேம் எனல்

இக்குறளில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக

மோனை :

          ள்ளத்தால் ள்ளலும்

            ள்ளத்தால் ள்வேம்

எதுகை :

          ள்ளத்தால் ள்ளலும்

            ள்ளத்தால் ள்வேம்

ஆ) இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக.

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் ஊக்கம்

அசைவுஇலா உடையான் உழை.

உள்ளுவது உயர்வுள்ளல் எல்லாம் மற்றது

தள்ளாமை தள்ளினும் நீர்த்து.

விடை :

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா

ஊக்கம் உடையான் உழை.

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து

இ) ”ஊக்கமது கைவிடேல்” என்பது ஔவையாரின் ஆத்திசூடி. இவ்வரியோடு தொடர்புடைய திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.

விருந்து புறத்ததாத் தாணுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற் அன்று.

 உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை

நில்லாது நீங்கி விடும்.

சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க

சொல்லில் பயன்இலாச் சொல்

விடை :

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை

நில்லாது நீங்கி விடும்.

ஈ) பின்வரும் கதைக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.

வீட்டிற்குள் வந்த வேலனைத் தந்தை அழைத்தார். ”உங்கள் பள்ளியில் பேச்சுப்போட்டி 

நடப்பதாகக் கூறினாயே, பெயர் கொடுத்து விட்டாயா?” என்று கேட்டார். ”இல்லையப்பா, 

அமுதன் என்னைவிட நன்றாகப் பேசுவான். அவனுக்குத்தான் பரிசு கிடைக்கும். எனவே 

நான் பெயர் கொடுக்கவில்லை” என்றான் வேலன். ”போட்டியில் வெற்றியும் தோல்வியும் 

இயல்புதான். அதற்காகப் போட்டியிடாமல் இருக்கக் கூடாது. நாம் எந்த அளவு

ஊக்கத்துடன் செயல்படுகிறோமோ அந்த அளவிற்கு வெற்றி கிடைக்கும். எனவே நீ 

போட்டியில் கலந்துகொள்” என்றார் அப்பா. உற்சாகம் அடைந்தான் வேலன். ”நாளை பெயர் 

கொடுத்துவிடுகிறேன் அப்பா” என்றான்.

 மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.

வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்து அனையது உயர்வு.

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

பெரும்பயன் இல்லாத சொல்

விடை :

வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்து அனையது உயர்வு.

உ)  குறுவினா

 1. எப்படி உண்பது விரும்பத்தக்கது அன்று?

அமிழ்தமே ஆனாலும் விருந்தினர் இருக்கும்போது தான்மட்டும் உண்பது விரும்பத்தக்கது அன்று

2. எது தீமையானது என்று வள்ளுவர் கூறுகின்றார்?

அடுத்தவர் பொருளைக் களவாடலாம் என உள்ளத்தால் நினைப்பது கூடத் தீமையானது.

3. ஆக்கம் யாரிடம் வழிகேட்டுச் செல்லும்?

தளராத ஊக்கம் உடையவனிடம் ஆக்கமானது தானே வழிகேட்டுக்கொண்டு செல்லும்.

4. நாம் எத்தகைய சொற்களைப் பேசவேண்டும் என்று வள்ளுவர் கூறுகின்றார்?.

பயனுடைய சொற்களை மட்டுமே பேசுக. பயன் இல்லாத சொற்களைப் பேசாமல் விட்டு விடுக

ஆக்கம் :

தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள்


www.tamilvithai.com


www.kalvivithaigal.com

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post