6TH - TAMIL - 2ND TERM -UNIT 2 - THAMIZHAR PERU VIZHA

 


இளந்தமிழ்

ஆறாம் வகுப்பு

தமிழ் – வினா – விடைத் தொகுப்பு

பருவம் : 2                                                                 இயல் : 2

நன்றி அறிதல்                                                                         தமிழர் பெருவிழா                       

 

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.     

1. கதிர் முற்றியதும் ___________ செய்வர்.

அ) அறுவடை ஆ) உரமிடுதல்        இ) நடவு            ஈ) களையெடுத்தல்

 

2. விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் _________ கட்டுவர்.

அ) செடி      ஆ) கொடி           இ) தோரணம்         ஈ) அலங்கார வளைவு

 

3. பொங்கல்+அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________

அ) பொங்கலன்று ஆ) பொங்கல்அன்று இ) பொங்கலென்று ஈ) பொங்கஅன்று

 

4. போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________

அ) போகி+பண்டிகை ஆ) போ+பண்டிகை இ) போகு+பண்டிகை 

ஈ) போகிப்+பண்டிகை

 

5. பழையன கழிதலும்____________ புகுதலும்.

அ) புதியன     ஆ) புதுமை     இ) புதிய     ஈ) புதுமையான

 

 6. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும். பட்டுப் போன மரத்தைக் காண _____________ தரும்.

அ) அயர்வு ஆ) கனவு இ) துன்பம் ஈ) சோர்வு

 

ஆ) சொற்றொடரில் அமைத்து எழுதுக.

அ) பொங்கல்  - தை மாதம் முதல் தேதியில் பொங்கல் கொண்டாடப்படும்

ஆ) செல்வம்  - செவிச் செல்வமே சிறந்த செல்வம்

இ) பண்பாடு  - அனைவரையும் வணங்குதல் தமிழர் பண்பாடு

 

இ) குறுவினா

 

1. போகிப்பண்டிகை எதற்காகக் கொண்டாடப்படுகிறது?

            வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள்

             ( போக்கி) போகித் திருநாள்

 

 2. உழவர்கள் ஏன் மாடுகளுக்கு நன்றி செலுத்துகின்றனர்?

            மாடு என்ற சொல்லுக்குச் செல்வம் என்னும் பொருளும் உண்டு. உழவுக்கும் 

உழவருக்கும் உற்ற துணையாக மாடுகள் விளங்குகின்றன. அவற்றிற்கு நன்றி செலுத்தும் 

வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.

 

ஈ) சிறுவினா

 

1. காணும் பொங்கலை மக்கள் எவ்வாறு கொண்டாடுகின்றனர்?

Ø  மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் காணும் பொங்கல் ஆகும்.

Ø  இந்நாளில் உற்றார் உறவினர் மற்றும் நண்பர் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர்.

Ø  குடும்பத்தினருடன் விரும்பிய இடங்களுக்குச் சென்று மகிழ்வுடன் பொழுதைக் கழிப்பர்.

 

உ)  சிந்தனை வினா

 

1. பொங்கல் விழாவின் போது உங்கள் ஊரில் என்னென்ன சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வீர்கள்?

Ø  பட்டிமன்றம்

Ø  குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள்

Ø  திருக்குறள் ஒப்புவித்தல்

Ø  கருத்தரங்கம்

 

2. காணும் பொங்கல் எவ்வாறு மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கிறது?

Ø  இயற்கை, உழைப்பு, நன்றியுணர்வு, பண்பாடு ஆகியவற்றைப் போற்றும் விழாவே பொங்கல் 

விழா ஆகும்.

Ø  அனைவரும் ஒன்று சேர்ந்து இயற்கையை வழிபடுவதும், இயற்கையை காக்க வேண்டிய 

உணர்வும் ஏற்பட்டு ஒற்றுமை வளர்கிறது.

மயங்கொலிகள்

வினா - விடைகளைக் காண

CLICK HERE 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post