6TH - TAMIL - 2ND TERM -UNIT 2 - MOZHI THIRAN

    


இளந்தமிழ்

ஆறாம் வகுப்பு

தமிழ் – வினா – விடைத் தொகுப்பு

பருவம் : 2                                                                 இயல் : 2

நன்றி அறிதல்                                                            மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு   

அ) பத்தியைப் படித்து வினாக்கள் அமைக்க.

 முகிலன் பொங்கல் விழாக் கொண்டாடத் தாத்தா வீட்டிற்குச் சென்றான். அங்குச் செவலை என்ற காளை இருந்தது. அக்காளையை முகிலனுக்கு மிகவும் பிடிக்கும். அதற்குத் தீவனம் வைப்பது அவனது வழக்கம். வீட்டிற்குப் பின்புறம் உள்ள தோட்டத்தில் இருந்து காய்கறிகள் பறித்துக் கொடுத்துத் தாத்தாவுக்கு உதவுவான். அவன், தாத்தா பாட்டியோடு மகிழ்ச்சியுடன் பொங்கல் விழாவைக் கொண்டாடுவான். (எ. கா.) முகிலன் யார் வீட்டிற்குச் சென்றான்?

 1. முகிலன் தாத்தா வீட்டில் என்ன விலங்கு இருந்தது?

2. தாத்தா வீட்டில் இருந்த காளை எது?

3. செவலை காளைக்கு முகிலன் எதனைக் கொடுப்பது வழக்கமாக இருந்தது?

 4. முகிலன் தாத்தாவுக்கு எவ்வாறு உதவுவான்?

 5.முகிலன் எதற்காக தாத்தா வீட்டிற்குச் சென்றான்?


ஆ) சரியான தொடர் எது? கண்டறிந்து எழுதுக.

 1. கதிரவன் மறையும் காலையில் உதித்து மாலையில்

2.. மாலையில் காலையில் உதித்து மறையும் கதிரவன்

3. கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்

4. மறையும் காலையில் கதிரவன் உதித்து மாலையில்

விடை :

கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்


இ ) உரையாடலை நிரப்புக.

செல்வன் : வாங்க மாமா. நலமாக இருக்கின்றீர்களா?

 மாமா : நலம். நீ எப்படி இருக்கிறாய்?

செல்வன் : நன்றாக இருக்கிறேன். உட்காருங்கள் மாமா. மாமா : அப்பா, அம்மா எங்கே சென்றுள்ளார்கள்?

செல்வன் : இருவரும் கடைவீதிக்குச் சென்று உள்ளனர்?

மாமா : அப்படியா? நீ எவ்வாறு படிக்கிறாய்?

செல்வன் : நன்றாகப் படிக்கிறேன் மாமா.

மாமா : நாளை விடுதலை நாள் விழா. உங்கள் பள்ளியில் போட்டிகள் நடத்துகிறார்களா?

செல்வம் : ஆம் மாமா. நான் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்கிறேன்.

மாமா : வெற்றி பெற வாழ்த்துகள்.

 செல்வம் : நன்றி மாமா


உ) நட்பு என்னும் தலைப்பில் கவிதை எழுதுக.

இன்பம் கொடுப்பது நட்பு

ஈகை அளிப்பது நட்பு

உண்மை உரைப்பது நட்பு

ஊக்கத்தை ஊன்றுகோலாய் தருவது நட்பு


ஊ) கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

பொங்கல் திருநாள்

முன்னுரை :

            தமிழர் கொண்டாடும் பல விழாக்கள் இயற்கையைப் போற்றும் வகையிலேயே அமைந்து

 இருக்கின்றன. அவற்றுள் சிறப்பானது பொங்கல் விழா ஆகும். இது தமிழர் திருநாள் என்றும்

 போற்றப்படுகிறது.

போகித் திருநாள் :

            வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் (போக்கி)

 போகித் திருநாள். இது மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஆகும்.

 

பொங்கல் திருநாள் :

            தை மாதத்தின் முதல்நாள் பொங்கல் திருநாள் ஆகும். மாவிலைத் தோரணம் கட்டுவர்.

 புதுப்பானையில் புத்தரிசியோடு வெல்லம், முந்திரி, நெய் சேர்த்துப் பொங்கலிடுவர். பொங்கல்

 என்பதற்குப் பொங்கிப்பெருகி வருவது என்று பொருள். விளைச்சலுக்குக் காரணமான

 கதிரவனை நன்றியோடு வணங்கி மகிழ்வர்.

மாட்டுப் பொங்கல் :

            பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல். மாடுகள் உழவர்களின் செல்வமாக

 மதிக்கப்படுகின்றன. மாடு என்ற சொல்லுக்குச் செல்வம் என்னும் பொருளும் உண்டு.

காணும் பொங்கல் :

            மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் காணும் பொங்கல் ஆகும். இந்நாளில் உற்றார்

 உறவினர் மற்றும் நண்பர் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர்.

முடிவுரை :

            இயற்கை, உழைப்பு, நன்றியுணர்வு, பண்பாடு ஆகியவற்றைப் போற்றும் விழாவே பொங்கல்

 விழா ஆகும். உலகு எங்கும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருவிழாவை மகிழ்ச்சியுடன்

 கொண்டாடுகின்றனர்

 

மொழியோடு விளையாடு

அ) கீழே உள்ள சொற்களைச் சேர்த்துப் புதிய சொற்களை உருவாக்குக.

(எ.கா.) கல்+ல்+உண்டு = கல்லுண்டு, கல்+ல்+இல்லை = கல்லில்லை.

பல் = பல் +ல் + உண்டு = பல்லுண்டு, பல் + ல் + இல்லை = பல்லில்லை

மின் = மின் + ன் + உண்டு = மின்னுண்டு, மின் + ன் + இல்லை = மின்னில்லை

மண்= மண் + ண் + உண்டு = மண்ணுண்டு, மண் + ண் + இல்லை = மண்ணில்லை

 

 

ஆ) கட்டங்களில் மறைந்துள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டுபிடித்து எழுதுக.


ஞ்

சா

வூ

ர்

மா

ன்

மி

டு

கா

ற்

னி

ல்

ணை

ல்

ல்

யா

மை

ளி

ரு

சு

ம்

கு

ற்

றா

ம்

பு

து

ரை

ரு

ரி

சி

ஞ்

செ

கை

ம்

1. தஞ்சாவூர்                                6. ஏற்காடு

2. கன்னியாக்குமரி                 7. கல்லணை

3. குற்றாலம்                               8. உதகை

4. செஞ்சி                                   9. மாமல்லபுரம்

5. மதுரை          

ஈ) கலைச் சொல் அறிவோம்

1. Welcome - நல்வரவு                 4. Readymade Dress - ஆயத்த ஆடை

 2. Sculptures - சிற்பங்கள்           5. Makeup - ஒப்பனை

3. Chips - சில்லுகள்                    6. Tiffin - சிற்றுண்டி

CLICK HERE TO GET PDF THIS FILE 

WAIT FOR 10 SECONDS

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

 

திருக்குறள் - வினா - விடைகளைக் காண

CLICK HERE

ஆக்கம் :

தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள்

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post