இளந்தமிழ்
ஆறாம் வகுப்பு
தமிழ் – வினா – விடைத் தொகுப்பு
பருவம் : 2 இயல் : 2
நன்றி அறிதல் மயங்கொலிகள்
அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:-
1) சிரம் என்பது தலை (தலை / தளை)
2) இலைக்கு வேறு பெயர் தழை (தளை / தழை)
3) வண்டி இழுப்பது காளை (காலை / காளை)
4) கடலுக்கு வேறு பெயர் பரவை (பரவை / பறவை)
5) பறவை வானில் பறந்தது (பறந்தது / பரந்தது)
6) கதவை மெல்லத் திறந்தான் (திறந்தான் / திரந்தான்)
7) பூ மணம் வீசும். (மனம் /மணம்)
8) புலியின் கண் சிவந்து காணப்படும். (கன் /கண்)
9) குழந்தைகள் பந்து விளையாடினர். (பந்து /பன்து)
10)வீட்டு வாசலில் கோலம் போட்டனர். (கோலம் / கோளம்)
ஆ) தொடர்களில் உள்ள மயங்கொலிப் பிழைகளைத் திருத்தி எழுதுக.
1) எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின.
என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின.
2) தேர்த் திருவிலாவிற்குச் செண்றனர்
தேர்த் திருவிழாவிற்குச் சென்றனர்.
3) வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்ளது.
வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது
இ) குறுவினா
1. மயங்கொலி எழுத்துகள் யாவை?
ண, ன, ந ல, ழ, ள ர, ற ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துகள் ஆகும்
2. ண,ன,ந ஆகிய எழுத்துகள் பிறக்கும் முறையைக் கூறுக
ண - நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால் ணகரம் பிறக்கிறது.
ன - நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் னகரம் பிறக்கிறது.
ந - நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப் பகுதியைத் தொடுவதால் நகரம் பிறக்கிறது
மொழியை ஆள்வோம்
மொழியோடு விளையாடு
பயிற்சி விடைகளை காண