6TH - TAMIL - 2ND TERM -UNIT 2 - KANMANIEY KANNURANGU

   


இளந்தமிழ்

ஆறாம் வகுப்பு

தமிழ் – வினா – விடைத் தொகுப்பு

பருவம் : 2                                                                 இயல் : 2

நன்றி அறிதல்                                                                         கண்மணியே கண்ணுறங்கு                        

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                            

1. 'பாட்டிசைத்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..

அ) பாட்டி+சைத்து ஆ) பாட்டி+இசைத்து இ) பாட்டு+இசைத்து ஈ) பாட்டு+சைத்து

 

2. 'கண்ணுறங்கு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………

அ) கண்+உறங்கு ஆ) கண்ணு+உறங்கு இ) கண்+றங்கு ஈ) கண்ணு+றங்கு

 

 3. வாழை+இலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………

அ) வாழையிலை ஆ)வாழைஇலை இ) வாழைலை ஈ)வாழிலை

 

4. கை+அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………..

அ) கைமர்த்தி ஆ) கைஅமர்த்தி இ) கையமர்த்தி ஈ) கையைமர்த்தி

 

5. உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல் …………………

அ) மறைந்த ஆ) நிறைந்த இ) குறைந்த ஈ) தோன்றிய

 

ஆ) குறுவினா

 

 1. இப்பாடலில் குறிப்பிடப்படும் மூன்று நாடுகள் யாவை?

            சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு

 

2. நமது வீட்டிற்கு வந்தவரை உபசரிக்கும் முறையாக நாட்டுப்புறப் பாடல் கூறுவது யாது?

            வந்தாரை கையமர்த்தி விருந்து உபசரிக்கும் முறையை நாட்டுப்புறப் பாடல் கூறுகிறது.

 

3. கண்மணியே கண்ணுறங்கு பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

            ந்தவனம் – ற்றமிழ்

            ண்ணோடு - பார்

 

இ) சிறுவினா

 

தாய் தன் குழந்தையை எவ்வாறெல்லாம் பாராட்டுகிறாள்?

·         பண்ணோடு பாட்டிசைத்து பார் போற்ற வந்தாயோ

·         சேர நாட்டு முத்தேனோ

·         பாண்டி நாட்டு முத்தமிழோ

·         சோழநாட்டு முக்கனியோ

 

ஈ) சிந்தனை வினா

 

1. வாய்மொழி இலக்கிய வகைகளின் பெயர்களைத் தொகுக்க.

·         நடவுப் பாட்டு

·         தாலாட்டுப் பாட்டு

·         வள்ளைப்பாட்டு

·         கும்மிப்பாட்டு

 

2. குழந்தைகளைக் கொஞ்சுவதற்குப் பயன்படுத்தப்படும் சொற்களைத் தொகுக்க..

·         கண்ணே

·         மணியே

·         கொழுந்தே

·         தங்கக் கட்டி

தமிழர் பெருவிழா

வினா - விடைகளை காண

CLICK HERE 


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post