இளந்தமிழ்
ஆறாம் வகுப்பு
தமிழ் – வினா – விடைத் தொகுப்பு
பருவம் : 2 இயல் : 2
நன்றி அறிதல் ஆசாரக்கோவை
அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பிறரிடம் நான் --------- பேசுவேன்.
அ) கடுஞ்சொல் ஆ) இன்சொல் இ) வன்சொல் ஈ) கொடுஞ்சொல்
2. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக்கொள்வது --------- ஆகும்.
அ) வம்பு ஆ) அமைதி இ) அடக்கம் ஈ) பொறை
3. அறிவு+உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------
அ) அறிவுடைமை ஆ) அறிவுஉடைமை இ) அறியுடைமை ஈ) அறிஉடைமை
4. இவை+எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் ---------
அ) இவைஎட்டும் ஆ) இவையெட்டும் இ) இவ்வெட்டும் ஈ) இவ்எட்டும்
5. நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ---------
அ) நன்றி+யறிதல் ஆ) நன்றி+அறிதல் இ) நன்று+அறிதல் ஈ) நன்று+யறிதல்
6. பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ---------
அ) பொறுமை+உடைமை ஆ) பொறை+யுடைமை இ) பொறு+யுடைமை
ஈ) பொறை+உடைமை
ஆ) குறுவினா
1. எந்த உயிருக்கும் செய்யக்கூடாதது எது?
எவ்வுயிருக்கும் தீங்கு செய்யக் கூடாது.
2. நாம் யாருடன் நட்புக் கொள்ள வேண்டும்?
நற்பண்புகள் உடையவரோடு நட்பு கொள்ள வேண்டும்.
சிறுவினா
1. ஆசாரக்கோவை கூறும் எட்டு வித்துகள் யாவை?
· பிறர் செய்த உதவியை மறவாதிருத்தல்
· பிறர் செய்யும் தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதல்
· இனிய சொற்களைப் பேசுதல்
· எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல்
· கல்வி அறிவு பெறுதல்
· எல்லோரையும் சமமாகப் பேணுதல்;
· அறிவுடையவராய் இருத்தல்
· நற்பண்புகள் உடையவரோடு நட்புக் கொள்ளுதல்
சிந்தனை வினா
1. உங்கள் நண்பரிடம் உங்களுக்குப் பிடித்த பண்புகளைப் பட்டியலிடுக.
· பணிவு
· துணிவு
· இரக்கம்
· எளிமை
· நேர்மை
2. நல்ல ஒழுக்கங்களை வித்து எனக் கூறுவதின் காரணத்தைச் சிந்தித்து எழுதுக.
வித்து என்பது விதை. விதையிலிருந்து செடி வளர்ந்து மரமாகி நிற்பது போல இளம்
வயதிலேயே நல்ல ஒழுக்கங்களை விதையாக பின்பற்றினால் சமூகத்தில் நாம் மேன்மையடையலாம்
கண்மணியே கண்ணுறங்கு
வினா - விடைத் தொகுப்பு காண