நாள் : 21- 11-2022 முதல் 25 -11-2022
மாதம் : நவம்பர்
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : 1. அணிகள்
அறிமுகம் :
Ø ஒருவர் தம்மை அழகுப்படுத்திக் கொள்ள எவற்றை எல்லாம் மேற்கொள்வார்?
போன்ற வினாக்கள் கேட்டு பாடப்பொருளை ஆர்வமூட்டல்.
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி,
நோக்கம் :
Ø அணியிலக்கணக் கூறுகளைச் செய்யுளுடன் தொடர்புப்படுத்தி அதன் சுவையுணர்ந்து நயத்தல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு)
Ø அணி – என்பதன் விளக்கம் கூறல்
Ø அணியின் தன்மையினை விளக்குதல்
Ø பாடப்பகுதியில் உள்ள அணியின் வகைகளை விளக்குதல்.
Ø உரிய உதாரணங்களுடன் அணி பொருத்தத்தை விளக்குதல்
Ø மாணவர்களுக்கு புரியும் வண்ணம் உதாரணங்களை கூறி விளக்குதல்
கருத்து வரைபடம் :
அணிகள்
Pவிளக்கம் :
( தொகுத்தல் )
அணிகள்
· செய்யுளினை அழகு செய்வது அணி
· தற்குறிப்பேற்ற அணி :
- இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது
o தீவக அணி :
§ தீவகம் – விளக்கு
§ செய்யுளின் ஓர் இடத்தில் நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவது.
o நிரல் நிறை அணி :
§ நிரல் – வரிசை நிறை – நிறுத்துதல்
§ சொல்லையும்,பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப் படியே இணைத்துப் பொருள் கொள்வது.
o தன்மை அணி :
§ இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத் தன்மையினைக் கேட்பவர்களின் மனம் மகிழுமாறு கூறுவது.
§ பொருள் தன்மையணி
§ குணத் தன்மையணி
§ சாதித் தன்மையணி
§ தொழிற்தன்மையணி
காணொலிகள் :
· விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்
· கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
அணிகள்
· வலையொளி காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø அணியைப் பற்றி அறிதல்
Ø அணியின் தன்மையினை அறிதல்
Ø தற்குறிப்பேற்ற அணியினை அறிதல்
Ø தீவக அணியை அறிதல்
Ø நிரல் நிறை அணியை அறிதல்
Ø தன்மையணியை அறிதல்
மதிப்பீடு :
LOT :
Ø அணி என்பதன் பொருள் யாது?
Ø ஒரு செய்யுளை அழகுற சொல்வதற்கு பயன்படுவது எது?
MOT
Ø இயல்பாக நிகழும் நிகழ்வின் மீது கவிஞர் தம் கற்பனையினை மிகைப்படுத்திக் கூறும் அணி எது?
Ø தன்மை அணிக்கு நடைமுறை உதாரணத்தைக் கூறுக
HOT
Ø தீவக அணியை நடைமுறை வாழ்வியலோடு எவ்வாறு ஒப்பிடலாம்?
Ø ஏதேனும் ஒரு அணியின் தன்மையினைக் கொண்டு ஒரு கவிதைக் கூறுக
கற்றல் விளைவுகள் :
Ø அணியிலக்கணக் கூறுகளைச் செய்யுளுடன் தொடர்புப்படுத்தி அதன் சுவையுணர்ந்து நயத்தல்
தொடர் பணி :
Ø புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை