10TH - TAMIL - NOTES OF LESSON - NOVEMBER - 3RD WEEK

   

நாள்               :           14 -11-2022 முதல் 18 -11-2022       

மாதம்                          நவம்பர்

வாரம்               :               மூன்றாம் வாரம்                     

வகுப்பு              :           பத்தாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. தேம்பாவணி

                                        2. ஒருவன் இருக்கிறான்

அறிமுகம்                 :

Ø  உனக்குத் தெரிந்த சமயங்களின் பெயர்களையும், அவற்றின் புனித நூல்களின் பெயர்களையும் கேட்டறிந்து அதன் மூலமாகப் பாடப்பொருளை ஆர்வமூட்டல்.

Ø  ஆதரவற்றோர் இல்லங்கள் பெருகிவரக் காரணம் என்ன? எனக் கேட்டுப் பாடப்பகுதியினை அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி,

நோக்கம்                                   :

Ø  ஓர் ஆளுமையை மையமிட்ட கருத்துகளைத் தொகுத்து முறைப்படுத்திச் சீர்மையுடன் இதழ் வடிவில் வெளிப்படுத்தும் திறன் பெறுதல்

Ø  நேர்த்தியும் செப்பமும் கொண்ட கதைகளை ஆர்வத்துடன் படிக்கவும் எழுதவும் பழகுதல்

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு)

Ø     வீரமாமுனிவர் பற்றி அறிமுகம் செய்தல்

Ø     தேம்பாவணி பற்றி கூறல்

Ø     பாடல்களை சீர்ப்பிரித்து வாசித்துக் காட்டி, மாணவர்களையும் வாசிக்க வைத்தல்.

Ø   மனப்பாடப்பாடலை மனனம் செய்யும் திறன் வளர்த்தல்.

Ø   கு.அழகிரிசாமியின் சிறுகதையிலிருந்து இடம் பெற்றுள்ள கதையின் மையக்கருத்து கூறல்

Ø     மாணவர்கள் கதையினை உணர்ந்து படிக்க வைத்தல்

Ø  அனைவருக்கும் ஒருவன் இருக்கிறான் என்பதனை உணர்தல்

Ø  சராசரி மனிதர்களின் மன இயல்புகளை எடுத்துரைத்தல்

கருத்து  வரைபடம்                   :

தேம்பாவணி


 

ஒருவன் இருக்கிறான்

 

 


விளக்கம்                :

( தொகுத்தல் )

தேம்பாவணி

·                      சாதாரண உயிரினங்களின் துயரத்தைப் பகிர்ந்துக் கொள்ளும் மனிதம்

·                      தேமாவணி – நூற் குறிப்பு

·                      தேம்பா + அணி = தேம்பாவணி – வாடாத மாலை

·                      தேன் + பா + அணி – தேம்பாவணி – தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு

·                      ஆசிரியர் : வீரமாமுனிவர்

·                      இயற் பெயர் : கான்சுடான்சு சோசப் பெசுகி

·                      எழுதிய நூல்கள் : சதுரகராதி, தொன்னூல் விளக்கம், சிற்றிலக்கியங்கள், உரைநடை நூல்கள், பரமார்த்தக் குரு கதைகள்,மொழிபெயர்ப்பு நூல்கள்

·                      இஸ்மத் சன்னியாசி – தூய துறவி

·                      கருணையன் தாயார் எலிசபெத் அவர்களுடன் கானகத்தில் வாழ்ந்து வந்தார்.

·                      அச்சூழலில் அவரின் தாயார் இறந்து விட கருணையன் அடையும் துன்பத்தில் இயற்கையும் பங்கு கொள்கிறது.

 

ஒருவன் இருக்கிறான்

o    ஆசிரியர் : கு. அழகிரி சாமி

o    வாழ்க்கையில் துணை என்பது எவ்வளவு முக்கியம் என்பதனை இக்கதை உணர்த்துகிறது

o    வயிற்றுவலிக்காரன் தங்கவேலு வீட்டிற்கு வருகிறான்

o    பக்கத்து வீட்டுக்காரர் அவனை ஏளனம் செய்கிறார்

o    வைத்தியத்திற்காக காஞ்சிபுரத்திலிருந்து சென்னை வந்திருக்கிறான்

o    அவருக்கும் ஒரு நண்பர் இருக்கிறார் என்பதனை அறிந்து மற்றவர்களுக்கு மனம் குற்ற உணர்ச்சியினை உண்டாக்குகிறது

 

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

தேம்பாவணி


ஒருவன் இருக்கிறான்




·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                                :

Ø     வீரமாமுனிவர் பற்றி அறிதல்

Ø     தேம்பாவணி பற்றி அறிதல்

Ø     பாடலினை சீர் பிரித்து வாசித்தல்

Ø     புதிய சொற்களுக்கான பொருள் அறிதல்

Ø     பாடலின் தொடை நயங்களை உணர்தல்

Ø     பாடலின் மையக்கருத்தினை அறிந்து வாழ்வியல் சூழலோடு ஒப்பிடல்

Ø     துணையின்றி வாழும் நிலை இரங்கத்தக்கது என்பதனை விரிவான கதையில் மூலம் உணர்தல்

Ø     அனைவருக்கும் துணை உள்ளது என்பதனை உணர்தல்.

Ø     மனித மன இயல்புகளை கதையின் மூலம் பெறுதல்

Ø     பிழையின்றி வாசித்தல்

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  தேம்பாவணியை எழுதியவர் யார்?

Ø  ஒருவன் இருக்கிறான் கதையின் ஆசிரியர் யார்?

MOT

Ø  தேம்பாவணி – குறிப்பு தருக

Ø  வீரப்பன் கடித்ததின் முக்கியத்துவம் யாது?

HOT

Ø  கருணையன் துன்பத்தை இயற்கை எவ்வாறு காணுகிறது என்பதனை தேம்பாவணி கூறுகிறது?

Ø  உங்கள் பகுதியில் துணையின்றி வாழும் நபர்கள் உள்ளனரா? அவர்களுக்கு நீங்கள் எவ்வாறு உதவுவீர்கள்?.

கற்றல் விளைவுகள்                  :

Ø  மனித மாண்புகளையும் விழுமியங்களையும் உட்பொருளாகக் கொண்ட பிற்காலக் காப்பிய இலக்கியத்தைப் படித்தல்

Ø  நேர்த்தியும் செப்பமும் கொண்ட கதைகளை ஆர்வத்துடன் படிக்கவும் எழுதவும் பழகுதல்

 

தொடர் பணி                            :

Ø   புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post