8TH - TAMIL - NOTES OF LESSON - OCTOBER - 3RD WEEK

 

நாள்               :           17-10-2022 முதல் 21-10-2022       

மாதம்                          அக்டோபர்

வாரம்               :              மூன்றாம்  வாரம்                     

வகுப்பு              :           எட்டாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. தமிழர் இசைக் கருவிகள்

                                        2. தொகை நிலை,தொகா நிலைத் தொடர்கள்

அறிமுகம்                 :

Ø  கோயில் திருவிழாக்களில் இசைக் கருவிகள் மூலம் இசைக்கப்படும் காணொலி காட்சிகளை காண்பித்து ஆர்வ மூட்டல்.

Ø  தொடர் எவ்வாறு உருவாகிறது? தொடர் என்பது யாது?  என்பது குறித்த வினாக்களைக் கேட்டு ஆர்வமூட்டல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி

நோக்கம்                                   :

Ø  பழந்தமிழர் பயன்படுத்திய இசைக்கருவிகளின் நுட்பங்களைப் புரிந்து கொள்ளுதல்

Ø  தொடர்களின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்.

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  ஆசிரியர் படித்தல், பின் தொடர்ந்து மாணவர்களும் படித்தல்.

Ø  முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்

Ø  புதிய வார்த்தைக்கான பொருள் அறிதல்

Ø  நிறுத்தற்குறி அறிந்து படித்தல்

Ø  இலக்கணப் பகுதிகளை நடைமுறை வாழ்வியலுடன் ஒப்பிட்டு விளக்குதல்

Ø  தொகைகளின் வகைகளை விளக்குதல்

கருத்து  வரைபடம்                   :

தமிழர் இசைக் கருவிகள்


தொகைநிலைத் தொடர்கள்

தொகா நிலைத் தொடர்கள்

  

விளக்கம்  :

( தொகுத்தல் )

தமிழர் இசைக் கருவிகள்

Ø  இசை : குரல் வழி இசை, கருவி வழி இசை

Ø  இசைக்கருவிகளை இசைத்து பாடல் பாடுவோர் பாணர் எனப்பட்டனர்.

Ø  இசைக்கருவிகளின் வகைகள் : 4

o   தோல் கருவிகள் – விலங்குகளின் தோல்கள்

§  உடுக்கை, குடமுழா,திமிலை,பறை,மத்தளம்,முரசு,முழவு

o   நரம்புக் கருவிகள் – நரம்பு அல்லது தந்தி

§  யாழ்,வீணை

o   காற்றுக் கருவிகள் – காற்றைப் பயன்படுத்துதல்.

§  குழல், கொம்பு, சங்கு

o   கஞ்சக் கருவிகள் – ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுவது.

§  சாலரா,சேகண்டி

தொகை நிலைத் தொடர்கள்

Ø   இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகளோ,வினை,பண்பு முதலிய உருபுகள் மறைந்து வருவது.

Ø  ஆறு வகைப்படும்.

o   வேற்றுமைத் தொகை

§  வேற்றுமை உருபுகள் மறைந்து வருவது

o   உருபும் பயனும் உடன்தொக்க தொகை

o   ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் சொல்லும் மறைந்து வருவது.

o   வினைத் தொகை

§  காலம் காட்டும் இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து வருவது.

o   பண்புத்தொகை

§  ஆன,ஆகிய பண்பு உருபுகள் மறைந்து வருவது.

o   இரு பெயரொட்டுப் பண்புத் தொகை

o   சிறப்பு பெயர் முன்னும்,பொதுப் பெயர் பின்னும் நிற்க இடையில் ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து வருவது.

o   உவமைத் தொகை

§  உவம உருபுகளில் ஒன்று வருவது.

o   உம்மைத் தொகை

§  சொற்களின் இடையிலும்,இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து வருவது.

o   அன்மொழித் தொகை

§  வேற்றுமை,வினை,பண்பு,உவமை,உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களுள்,அவை அல்லாத வேறு பிற சொற்களும் மறைந்து வருவது.

தொகா நிலைத் தொடர்கள்

o   எழுவாய்த் தொடர்

o   எழுவாயைத் தொடர்ந்து வரும் பயனிலைக்கும் இடையில் எவ்வித சொல்லும் மறையாமல் வருவது.

Ø  விளித்தொடர்

o   விளிப்பெயருக்கும் பயனிலைக்கும் இடையில் உருபு மறையாமல் வருவது

Ø  வினைமுற்றுத் தொடர்

o   வினைமுற்று பெயரைக் கொண்டு முடிந்து இடையில் எச்சொல்லும் மறையாமல் வருவது

Ø  பெயரெச்சத் தொடர்

o   எச்சவினை பெயரைக் கொண்டு முடிந்து இடையில் எச்சொல்லும் மறையாமல் வருவது.

Ø  வினையெச்சத் தொடர்

o   எச்சவினை வினையைக் கொண்டு முடிந்து இடையில் எச்சொல்லும் மறையாமல் வருவது.

Ø  வேற்றுமைத் தொகா நிலைத் தொடர்

o   வேற்றுமை உருபு வெளிப்படையாக வருவது.

Ø  இடைச்சொல் தொடர்

o   இடைச்சொல் வெளிப்படையாக வருவது

Ø  உரிச்சொல் தொடர்

o   உரிச்சொல் வெளிப்படையாக வருவது

Ø  அடுக்குத் தொடர்

ஒரே சொல் பலமுறை அடுக்கி வருவது

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

தமிழர் இசைக்கருவிகள்


தொகைநிலை,தொகா நிலைத் தொடர்கள்

காணொலி - 1


காணொலி - 2




·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                     :

Ø  தமிழர் இசைக்கருவிகள் பற்றி அறிதல்

Ø  தமிழர் இசைக்கருவிகளின் வகைகள் பற்றி அறிதல்

Ø  இசைக்கருவிகளை அன்றாட வாழ்வியலில் பயன்படும் இசைக்கருவிகளுடன் தொடர்புபடுத்துதல்

Ø  தொடர்கள் பற்றிஅறிதல்

Ø  தொடர்களின் வகைகளை அறிதல்

Ø  தொகைகளின் வகைகளை அன்றாட வாழ்வியலுடன் தொடர்புப்படுத்துதல்

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  இசையின் இரண்டு வகைகள் யாவை?

Ø  தொடர் என்பது யாது?

MOT

Ø  காற்று கருவிகள் பற்றி கூறுக.

Ø  தொகைநிலைத் தொடர்கள் என்பது யாது? அதன் வகைகள் யாவை?

HOT

Ø  தோல்கருவிகள் இன்று எங்கெங்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன?

Ø  தொகாநிலைத் தொடர்களின் பயன்பாடு குறித்து கூறுக.

கற்றல் விளைவுகள்                  :

Ø  807 – கதைகள், பாடல்கள், கட்டுரைகள் போன்ற பல்வேறு வகைப்பட்டவற்றைபோது அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதலும், ஊகித்தறிதலும்.

Ø  மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றை தம் மொழியில் எழுதும் போது பயன்படுத்துதல்

தொடர் பணி                            :

Ø   இசைக்கருவிகள் படங்களைச் சேகரித்து படத்தொகுப்பு உருவாக்குக.

Ø   பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள தொகைநிலைத் தொடர், தொகாநிலைத் தொடர்களைக் கண்டறிந்து எழுதுக.

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post