7TH - TAMIL - NOTES OF LESSON - OCTOBER - 4TH WEEK

 

நாள்               :           25-10-2022 முதல் 28-10-2022       

மாதம்                          அக்டோபர்

வாரம்               :            நான்காம்  வாரம்                     

வகுப்பு              :           ஏழாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             இலக்கிய வகைச் சொற்கள்

அறிமுகம்                                 :

Ø   தமிழ் எழுத்துகளின் வகைத் தொகைகளை கூறுக.

Ø  எழுத்துகள் பல சேர்ந்து பொருள் தருவது?

கற்பித்தல் துணைக் கருவிகள்                  :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்

நோக்கம்                                 :

Ø  மொழியில் பயன்படுத்தப்படும் இலக்கியவகைச் சொற்களைக் கண்டறிதல்

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  பாடப்பகுதியினை அறிமுகம் செய்தல்

Ø  சொற்களின் வகைகளை கூறல்

Ø  தற்கால வழக்கில் அமையும் சொற்களின் வகைகளைக் கூறல்

Ø  இலக்கிய முறையின் படி அமைந்த நால்வகை சொற்கள் பற்றிக் கூறல்

Ø  நடைமுறை உதாரணங்களை விளக்குதல்

நினைவு வரைபடம்                   :

                                                                                             இலக்கிய வகைச் சொற்கள்

 


விளக்கம்  :

( தொகுத்தல் )

இலக்கியவகைச் சொற்கள்

Ø  இயற்சொல்

o    எளிதில் பொருள் விளங்கும் சொற்கள்.

Ø  திரிச்சொல்

o    கற்றோருக்கு மட்டும் விளங்கும் சொற்கள்

o    இது நான்கு வகையாக உள்ளது

Ø  திசைச்சொல்

o    பிறமொழிகளிலிருந்து இடம் பெறும் சொற்கள்

Ø  வடச்சொல்

o    சமஸ்கிருத மொழி சொற்கள்

o    இவை தற்சமம், தற்பவம் என இருவகையாகப் பிரிப்பர்.

காணொளிகள்                         :

Ø  விரைவுத் துலங்கள் குறியீடு காணொளி காட்சிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொளிகள்



மாணவர் செயல்பாடு :

o  புதிய சொல்லிற்கான பொருள் காணுதல்

o  இலக்கிய வகைச் சொற்கள் பற்றி அறிதல்

o  இலக்கிய வகைச் சொற்களின் வகைகளைப் பற்றி அறிதல்

o  நடைமுறை உதாரணங்களுடன் நால்வகைச் சொற்களைப் புரிந்து பயன்படுத்துதல்

மதிப்பீடு                                   :

                                                LOT :

Ø  சொல் என்பது யாது?

Ø  இலக்கியவகைச் சொற்கள் எத்தனை வகைப்படும்?

MOT

Ø  எளிதில் பொருள் விளங்கக் கூடியச் சொற்கள் சிலவற்றைக் கூறுக

Ø  குங்குமம், கமலம் என்பன எவ்வகை வடசொற்கள்?

HOT:

Ø  திரிச்சொல்லின் வகைகளை விளக்குக.

Ø  பண்டிகை,கேணி என்பன எவ்வகைச் சொற்கள் விளக்குக.

கற்றல் விளைவுகள்  :

Ø  716 – மொழி மரபின் நுட்பமான பயன்பாட்டுக் கூறுகளையும்.சொற்கள், சொற்றொடர்கள் போன்றவற்றின் பொருண்மை உணர்ந்து அவற்றையும் தமது உரையாடலில் பயன்படுத்துதல்

தொடர் பணி                            :

Ø  பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்

Ø  நாளிதழ் செய்தி ஒன்றை எடுத்துக் கொண்டு அதிலுள்ள நால்வகைச் சொற்களையும் வகைப்படுத்திப் பட்டியல் உருவாக்குக.

 

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post