6TH - TAMIL - NOTES OF LESSON - OCTOBER - 3RD WEEK

  

நாள்               :           17-10-2022 முதல் 21-10-2022       

மாதம்                          அக்டோபர்

வாரம்               :              மூன்றாம்  வாரம்                     

வகுப்பு              :           ஆறாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. கல்வி கண்திறந்தவர்

                                        2. நூலகம் நோக்கி

அறிமுகம்                                 :

Ø  காமராஜர் வாழ்வில் நடந்த சிறு வயது நிகழ்வினைக் கூறல்

Ø  காமராஜர் வாழ்க்கை வரலாற்றினை நூல்கள் மூலம் அறிந்துக் கொண்டதைக் கூறல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                                   :

Ø  கல்வி பணி ஆற்றிய பெருமக்களைப் பற்றி அறிதல்

Ø  நூலகம் பற்றி அறிந்து கொள்ளுதல்

Ø  நூலகம் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல்

ஆசிரியர் குறிப்பு                     :

 

Ø  பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø  காமராஜர் பற்றி கூறல்

Ø  காமராஜர் ஆற்றிய பணிகளைக் கூறல்

Ø  நூலகம் பற்றி அறிதல்

Ø  அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் சிறப்புகளை கூறல்

Ø  நூலகத்தின் பயனை எடுத்துரைத்தல்

Ø  பள்ளி நூலகத்தில் உள்ள நூல்களை படிக்க ஆர்வம் கொள்ளுதல்

கருத்துரு வரைபடம்                 :

கல்விக் கண் திறந்தவர்



நூலகம் நோக்கி

 

 

விளக்கம்  :

கல்விக்  கண் திறந்தவர்

Ø  நிகழ்வு 1 : ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்களிடம் பள்ளி செல்லா காரணம் கேட்டல்

Ø  நிகழ்வு 2 : ஒரு மைல் தூரத்தில் ஆரம்பப்பள்ளி, மூன்று மைல் தூரத்தில் நடுநிலைப்பள்ளி, ஐந்து மைல் தூரத்தில் உயர்நிலைப்பள்ளி இருக்கணும்னு திட்டம்

Ø  நிகழ்வு 3 : படிக்க வரும் மாணவர்களுக்கு ஒரு வேளை உணவாவது வழங்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

Ø  நிகழ்வு 4 : கல்வித்துறை விதிகளை மாணவர்களின் நலனுக்காக மாற்றி, அவர்கள் வாழும் இடங்களிலேயே பள்ளிக்கூடங்களைத் திறக்கச் செய்த சிந்தனையாளர்

Ø  கல்விக் கண் திறந்தவர் என்று தந்தை பெரியாரால் மனதாரப் பாராட்டப்பட்டவர்.

Ø  அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார்.

Ø  மாணவர்கள் பசியின்றிப் படிக்க மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

Ø  பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.

                                              நூலகம் நோக்கி

Ø  ஆசியக்கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம் இதுதான்.

Ø  தரைத்தளத்தோடு எட்டு அடுக்குகளைக் கொண்டது. இதன் பரப்பளவு மட்டும் எட்டு ஏக்கர்

Ø  இரா. அரங்கநாதன். நூலக விதிகளை உருவாக்கியவர். இவர் இந்திய நூலகவியலின் தந்தை (Father of Indian library science) என்று அழைக்கப்படுகிறார்.

Ø  பிரெய்லி நூல்கள் உள்ளன.

Ø  தரைத்தளம் - சொந்த நூல் படிப்பகம், பிரெய்லி நூல்கள்

Ø  முதல் தளம் - குழந்தைகள் பிரிவு, பருவ இதழ்கள்

Ø  இரண்டாம் தளம் - தமிழ் நூல்கள்

Ø  மூன்றாம் தளம் - கணினி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள்

Ø  நான்காம் தளம் - பொருளியல், சட்டம், வணிகவியல், கல்வி

Ø  ஐந்தாம் தளம் - கணிதம், அறிவியல், மருத்துவம்

Ø   ஆறாம் தளம் - பொறியியல், வேளாண்மை, திரைப்படக்கலை

Ø  ஏழாம் தளம் - வரலாறு, சுற்றுலா, அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்

Ø  எட்டாம் தளம் - கல்வித் தொலைக்காட்சி, நூலகத்தின் அலுவலகப் பிரிவு

காணொளிகள்                         :

Ø  விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

         கல்வி கண் திறந்தவர்  :



         நூலகம் நோக்கி  : 



செயல்பாடு :

Ø   பாடப்பகுதியினை வாசித்தல்

Ø   சிறு சிறுத் தொடர்களை  வாசித்தல்

Ø   காமராஜர் பற்றி அறிதல்

Ø   காமராஜர் கல்விக்கு ஆற்றிய பணிகள் பற்றி அறிதல்

Ø   நூலகம் பற்றி அறிதல்

Ø   அண்ணா நூற்றாண்டு நூலகத்தினை அறிதல்

Ø   அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இணைய காணொளிகள் மூலம் காணுதல்.

Ø   அண்ணா நூலகத்தில் உள்ள தளங்களில் காணும் புத்தகப் பிரிவுகள் பற்றி அறிதல்

Ø   நூலகத்தின் பயனை அறிதல்

மதிப்பீடு                                   :

                                                LOT :

Ø  கல்விக் கண் திறந்தவர் _______

Ø  இந்திய நூலகவியலின் தந்தை ________

MOT :

Ø  காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் யாவை?

Ø  அண்ணா நூற்றாண்டு நூலகம் எங்கு உள்ளது?

HOT

Ø  கல்விக்காக நீங்கள் என்னென்ன செயல்கள் செய்வீர்கள்?

Ø  நீங்கள் உங்கள் இல்லத்தில் சிறிய நூலகம் அமைத்தால் என்னென்ன புத்தகங்களை அதில் வைப்பீர்கள்?

கற்றல் விளைவுகள்                  :

Ø   பல்வேறு சூழல்களில் / நிகழ்வின் போது மற்றவர்கள் கூறியவற்றை தமது மொழியில் எழுதுதல்

Ø   பல இதழ்களுக்காகவும், நோக்கங்களுக்காகவும் எழுதும் போது சரியான்  சொற்கள், சொற்றொடர்கள்,தொடர்கள், மரபுத் தொடர்கள் ஆகியவற்றை பயன்படுத்துதல்

தொடர் பணி                            :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

Ø  தற்போது மாணவர்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களைப் பட்டியலிடுக.

Ø  உங்களுக்கு பிடித்த நூல்களின் பெயர்களை பட்டியலிடுக.

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post