6TH - TAMIL - NOTES OF LESSON - NOVEMBER - 1ST WEEK

  

நாள்               :           31-10-2022 முதல் 04-11-2022       

மாதம்                          நவம்பர்

வாரம்               :              முதல்  வாரம்                     

வகுப்பு              :           ஆறாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. கண்மணியே கண்ணுறங்கு

                                         2. தமிழர் பெருவிழா

அறிமுகம்                                 :

Ø  உனது வீட்டின் அருகில் அல்லது உனது வீட்டில் குழந்தைகள் உள்ளனவா? அக்குழந்தையை நீங்கள் எவ்வாறு கொஞ்சுவீர்கள்?

Ø  நீங்கள் என்னென்ன விழாக்களைக் கொண்டாடுவீர்கள்?

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                                   :

Ø  நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் வெளிப்படும் நாகரிகம், பண்பாட்டினை அறிதல்

Ø  தமிழர் திருநாளின் சிறப்பை உணர்தல்

ஆசிரியர் குறிப்பு                     :

 

Ø  பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø  வாய்மொழி இலக்கியங்கள் பற்றிக் கூறல்

Ø  தால் – நாக்கு, நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு

Ø  தமிழர் திருநாள் பற்றி கூறல்

Ø  போகி பண்டிகை பற்றிக் கூறல்

Ø  பொங்கல் விழா பற்றிக் கூறல்

Ø  மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் பற்றிக் கூறல்

கருத்துரு வரைபடம்                 :

கண்மணியே கண்ணுறங்கு



தமிழர் பெருவிழா

 

 

விளக்கம்  :

கண்மணியே கண்ணுறங்கு

Ø  வாய்மொழி இலக்கியங்களில் ஒன்று தாலாட்டு

Ø  தால் – நாக்கு. நாக்கினை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு என்று பெயர்ப் பெற்றது.

Ø  சேர நாட்டின் முத்தேனோ

Ø  சோழ நாட்டின் முக்கனியோ

Ø  பாண்டி நாட்டின் முத்தமிழோ

Ø  கண்மணியே கண்ணுறங்கு

                                              தமிழே பெருவிழா

Ø  இயற்கையைப் போற்றும் விழாக்களில் சிறப்பானது பொங்கல் விழா

Ø   கதிரவனுக்கு நன்றிக் கூறிச் சிறப்பு செய்யும் விழா பொங்கல் விழா

Ø  பொங்கல் விழா அறுவடைத் திருவிழா,உழவர் திருநாள் என்றும் வழங்கப்படுகிறது.

Ø   வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் போகி பண்டிகை

Ø  தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருநாள்

Ø  மாடுகள் உழவர்களின் செல்வமாக இருப்பதால் பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல்

Ø  மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் காணும் பொங்கல்

காணொளிகள்                         :

Ø  விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்

கண்மணியே கண்ணுறங்கு



Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

தமிழர் பெருவிழா



செயல்பாடு :

Ø   பாடப்பகுதியினை வாசித்தல்

Ø   சிறு சிறுத் தொடர்களை  வாசித்தல்

Ø   தாலாட்டுப் போன்று பிற வாய்மொழி  இலக்கியங்களை அறிதல்

Ø   தாலாட்டில் உள்ள சொற்களுக்கு பொருள் அறிதல்

Ø   தமிழர் திருநாள் பற்றி அறிதல்

Ø   சிறு சிறு பத்தியாக வாசித்தல்

Ø   பொங்கல் விழா பற்றி மேலும் அறிந்து கொள்ளுதல்

மதிப்பீடு                                   :

                                                LOT :

Ø  தால் என்பது யாது?

Ø  தமிழர் திருநாள் எப்போது கொண்டாடப்படுகிறது?

MOT :

Ø  வாய்மொழி இலக்கியங்கள் என்பது யாது?

Ø  போகி திருநாள் பற்றிக் கூறுக

HOT

Ø  குழந்தைகளை கொஞ்சுவதற்கு பயன்படுத்தும் சொற்களைக் கூறுக

Ø  உங்கள் நண்பரிடம் உங்களுக்கு பிடித்த பண்புகளை கூறுக,

கற்றல் விளைவுகள்                  :

Ø   604 - பல்வேறு சூழல்களில் பிறரால் சொல்லப்பட்ட சொற்களை திரும்பக் கூறல்

Ø   610 பல்வேறு பாடப்பொருள்கள் பற்றித் தமிழில் உள்ள பனுவல்களை படித்துப் புரிந்து கொண்டு அவற்றின் மீதான கருத்துரைகளைப் பகிர்தல் தங்களின் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துதல்.

தொடர் பணி                            :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

Ø  நீ அறிந்த தாலாட்டு பாடல் ஒன்றை எழுதி வருக

Ø  உங்கள் பள்ளியில் கொண்டாடப்படும் தேசிய விழாக்களின் பட்டியல் உருவாக்குக

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

                                        2. ஆசாரக் கோவை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post