ஆறாம் வகுப்பு - தமிழ்
இரண்டாம் பருவம்
வினா - விடைகள்
துன்பம் வெல்லும் கல்வி
இளந்தமிழ்
ஆறாம் வகுப்பு
தமிழ் – வினா – விடைத்
தொகுப்பு
பருவம் : 2 இயல் : 1
துன்பம் வெல்லும் கல்வி
அ)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மாணவர்
பிறர்__________
நடக்கக் கூடாது.
அ) போற்றும்படி
ஆ) தூற்றும்படி
இ) பார்க்கும்படி
ஈ) வியக்கும்படி
2. நாம்__________சொல்படி நடக்க வேண்டும்.
அ) இளையோர்
ஆ) ஊரார்
இ) மூத்தோர்
ஈ) வழிப்போக்கர்
3. கைப்பொருள்
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது__________
அ) கையில் + பொருள்
ஆ) கைப் + பொருள்
இ) கை + பொருள்
ஈ) கைப்பு + பொருள்
4. மானம் + இல்லா என்பதனைச்
சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்__________
அ) மானம்இல்லா
ஆ) மானமில்லா
இ) மானமல்லா
ஈ) மானம்மில்லா
ஆ)
சொற்றொடரில் அமைத்து எழுதுக
1. மனமாற்றம்
: பிறருக்கு செய்த நல்ல உதவியால் மனமாற்றம் அடைந்தது.
2. ஏட்டுக்கல்வி
: வெறும் ஏட்டுக்கல்வி போதாது
3.
நல்லவர்கள்: நல்லவர்கள்
தூற்றும்படி வாழக்கூடாது.
4.சோம்பல்
: அதிகாலையில் எழுவது சோம்பலை
முறித்து விடும்
குறுவினா
1. நாம் யாருடன் சேரக் கூடாது?
தன் மானமில்லா கோழையுடன் சேரக்கூடாது
2. எதை
நம்பி வாழக் கூடாது?
மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக் கூடாது.
3. நாம்
எவ்வாறு வாழவேண்டும் எனப் பட்டுக்கோட்டையார் கூறுகிறார்?
பெற்ற தாயின் புகழும், பிறந்த மண்ணின்
புகழும் வற்றாமல் வாழ்ந்திட வேண்டும்.
4. நாம்
எவ்வாறு வாழ்ந்தால் பெருமை பெறலாம்?
அறிஞர்கள் கூறிய அறிவுரைகளை பின்பற்றி
வாழ்ந்தால் பெருமை பெறலாம்.
சிந்தனை
வினா
1. நீங்கள் படித்து என்னவாக விரும்புகிறீர்கள்?
ஏன்?
·
மருத்துவராக விரும்பிகிறேன்.
உலகின் புது புது நோய்கள் வருகின்றன. அவற்றிலிருந்து மக்களை காக்க மருத்துவராக விரும்புகிறேன்.