ஆறாம் வகுப்பு - தமிழ்
இரண்டாம் பருவம்
வினா - விடைகள்
கல்வி கண் திறந்தவர்
கல்விக்கண் திறந்தவர்
அ)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.
பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் _____
அ) ஆடு மேய்க்க ஆள் இல்லை
ஆ)
ஊரில் பள்ளிக்கூடம் இல்லை
இ) வழி தெரியவில்லை
ஈ) பேருந்து
வசதியில்லை
2. பசியின்றி என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது _____________
அ) பசி + இன்றி
ஆ) பசி + யின்றி
இ) பசு + இன்றி
ஈ) பசு + யின்றி
3. படிப்பறிவு
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________.
அ) படி + அறிவு
ஆ) படிப்பு + அறிவு
இ) படி + வறிவு
ஈ) படிப்பு +
வறிவு
4. காடு
+ ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ____________
அ) காட்டாறு
ஆ) காடாறு
இ) காட்டுஆறு
ஈ) காடுஆறு
ஆ)
சொற்றொடரில் அமைத்து எழுதுக.
அ) வகுப்பு
- நான் ஆறாம் வகுப்பு படிக்கிறேன்
ஆ) உயர்கல்வி
- உயர்கல்வியே ஒருவருக்கு உயர்வுத்
தரும்
இ) சீருடை
- பள்ளிகளில் பாகுபாடு இல்லாமல் இருக்க மாணவர்களுக்கு
சீருடை வழங்கப்பட்டுள்ளது
இ)
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. குழந்தைகள்
பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்க சீருடைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
2. காமராசரைக்
‘கல்விக் கண் திறந்தவர்’ என மனதாரப் பாராட்டியவர் தந்தை பெரியார்
ஈ)
குறு வினா
1. காமராசர்
காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் யாவை?
மாணவர்கள் உயர்கல்வி பெறப் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள்,கால்நடைமருத்துவக் கல்லூரிகள், ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றைப் புதிதாகத் தொடங்கினார்.
2. காமராசர்
முதல்வராகப் பொறுப்பேற்றதும் கல்விக்காகச் செய்த முதல் பணி யாது?
காமராசர் முதல்
அமைச்சராகப் பதவியேற்ற நேரத்தில் ஏறக்குறைய ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு
இருந்தன. அவற்றை உடனடியாகத் திறக்க ஆணையிட்டார்.
உ) சிறு வினா
1. காமராசரின்
கல்விப்பணிகள் குறித்து எழுதுக.
·
அனைவருக்கும் இலவசக்
கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார்.
·
மாணவர்கள்
பசியின்றிப் படிக்க மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
·
பள்ளிகளில்
ஏற்றத்தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத் திட்டத்தை அறிமுகம்
செய்தார்.
·
பள்ளிகளின் வசதிகளைப்
பெருக்கப் பள்ளிச்சீரமைப்பு மாநாடுகள் நடத்தினார்.
சிந்தனை
வினா
1. நீங்கள்
முதலமைச்சரானால் கல்வி முன்னேற்றத்திற்காக என்னென்ன திட்டங்களை வகுப்பீர்கள்?
· மாணவர்களுக்கென தனி பேருந்து
· அனைத்து மாணவர்களுக்கு இலவச கட்டாயக் கல்வி
· திறனறித் தேர்வுகள் மூலம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவேன்.
· வகுப்பறைகளை திறன் மிகு வகுப்பறையாக்கி மாணவர்களின் திறனை ஊக்குவிப்பேன்