ஆறாம் வகுப்பு - தமிழ்
இரண்டாம் பருவம்
வினா - விடைகள்
இன எழுத்துகள்
அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:-
1. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது?
அ) மஞ்சள்
ஆ) வந்தான்
இ) கண்ணில்
ஈ) தம்பி
2. தவறான சொல்லை வட்டமிடுக.
அ) கண்டான்
ஆ) வென்ரான்
இ) நண்டு
ஈ) வண்டு
ஆ) பின்வரும் சொற்களைத் திருத்தி எழுதுக.
பிழை திருத்தம்
தெண்றல் தென்றல்
கன்டம் கண்டம்
நன்ரி நன்றி
மன்டபம் மண்டபம்
குறுவினா
1. இன எழுத்துகள் என்றால் என்ன?
சில எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு. இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும்.