ஆறாம் வகுப்பு - தமிழ்
இரண்டாம் பருவம்
வினா - விடைகள்
மூதுரை
இளந்தமிழ்
ஆறாம் வகுப்பு
தமிழ் – வினா – விடைத் தொகுப்பு
பருவம் : 2 இயல் : 1
கண்ணெனத் தகும் மூதுரை
மனப்பாடப்பாடல்
அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மாணவர்கள் நூல்களை -------- கற்க வேண்டும்.
அ) மேலோட்டமாக
ஆ) மாசுற
இ) மாசற
ஈ) மயக்கமுற
2. இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது --------
அ) இடம் + மெல்லாம்
ஆ) இடம் + எல்லாம்
இ) இட + எல்லாம்
ஈ) இட + மெல்லாம்
3. மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது --------
அ) மாச + அற
ஆ) மாசு + அற
இ) மாச + உற
ஈ) மாசு + உற
4. குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் --------
அ) குற்றமில்லாதவர்
ஆ) குற்றம்இல்லாதவர்
இ) குற்றமல்லாதவர்
ஈ) குற்றம்அல்லாதவர்
5. சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் --------
அ) சிறப்புஉடையார்
ஆ) சிறப்புடையார்
இ) சிறப்படையார்
ஈ) சிறப்பிடையார்
ஆ ) குறுவினா .
1. கற்றவரின் பெருமைகளாக மூதுரை கூறுவன யாவை?
மன்னனைக் காட்டிலும் கல்வி கற்றவர் சிறப்புடையவர். கல்வி கற்றவர்க்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு .
இ ) சிந்தனை வினா
1. கல்லாதவருக்கு ஏற்படும் இழப்புகளைப் பட்டியலிடுக.
· மற்றவர்களை நம்பி வாழ வேண்டும்.
· சமூகத்தில் மதிப்பு இருக்காது.
· கல்லாதவரை ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்கள்
2. கல்வியின் சிறப்பாக நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்?
· கல்வி மனிதனை உயர்த்துகிறது.
· சமூகத்தில் மதிப்பு உயர்கிறது.
· கல்வியின் மூலம் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
· அறியாமை அகல்கிறது.