பத்தாம் வகுப்பு - தமிழ்
மாதிரி - மூன்றாம் இடைப் பருவத் தேர்வு
வகுப்பு
: 10 மூன்றாம்
இடைப் பருவத் தேர்வு அலகு
: இயல் 7,8,9
பாடம் : தமிழ் மொத்த மதிப்பெண் : 50
I.
அ) சரியான விடையைத் தேர்ந்தெடு:- 5×1=5
1.
‘ மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’ -மாலவன் குன்றமும்
வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே________
அ) திருப்பதியும் திருத்தணியும் ஆ) திருத்தணியும் திருப்பதியும்
இ)
திருப்பதியும் திருச்செந்தூரும் ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்
2.
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்___
அ) அகவற்பா ஆ) வெண்பா இ) வஞ்சிப்பா ஈ)
கலிப்பா
3.
பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று ________,_______ வேண்டினார்.
அ) கருணையன் எலிசபெத்துக்காக ஆ) எலிசபெத்
தமக்காக
இ)
கருணையன் பூக்களுக்காக ஈ) எலிசபெத் பூமிக்காக
4.
மரபுத்தொடருக்கான பொருளை காண்க :- ஆறப்போடுதல்
அ)
ஆற்றில் போடுதல் ஆ) தள்ளிப்போடுதல் இ)
காய வைத்தல் ஈ) ஆற்றில் போதல்
5.
பின் வருவனவற்றுள் கூரான ஆயுதம்
எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்?
அ)
பெரிய கத்தி ஆ) இரும்பு ஈட்டி இ)
உழைத்ததால் கிடைத்த ஊதியம் ஈ) வில்லும்
அம்பும்
II)
பாடலைப் படித்து வினாக்களுக்கும் விடையளி:- 3×1=3
பகர்வனர் திரிதிரு நகரவீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும்
ஆரமும் அகிலும்
6) இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?
அ)
தேம்பாவணி ஆ. சிலப்பதிகாரம் இ. காலக்கணிதம் ஈ. கம்பராமாயணம்
7) பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.
அ)
பகர்வனர் – நகரவீதி ஆ. பட்டி – கட்டு இ.
நுண்வினை – இருக்கை ஈ. பட்டினும் – பருத்தினும்
8) காருகர் – பொருள் தருக
அ)
வெற்றிலை விற்போர் ஆ. ஓவியர் இ. நெய்பவர் ஈ. சிற்பி.
III)
எவையேனும் மூன்று வினாக்களுக்கும் விடையளி:- 3×2=6
9.
விடைக்கேற்ற வினா அமைக்க:-
அ.
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என்கிறார் ஒளவையார்
ஆ.
இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்குக் கேடில்லாத வகையில் தமிழினத்தை ஒன்றுபடுத்த பயன்படக்
கூடிய இலக்கியம் சிலப்பதிகாரம்
10.
தேம்பாவணி நூற் குறிப்பு தருக.
11.
மெய்க்கீர்த்தி பாடுவதன் நோக்கம் யாது?
12.
வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக..
IV)
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி:- 3×2=6
13.
சொற்களைப் பிரித்துப் பார்த்துப் பொருள் தருக.
அ.
வருந்தாமரை ஆ. பலகையொலி
14.
கலைச்சொல் தருக:- அ. REVIVALISM ஆ. CABINET
15.
குறள் வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.
16.
அறியேன் – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
V)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி:- 2×3=6
(
வினா எண் – 19 கட்டயமாக விடையளிக்க வேண்டும் )
பிரிவு -1
17.
‘ சுற்றுச் சூழலைப் பேணுவதே இன்றைய அறம் ‘ என்ற தலைப்பில்,பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை
உருவாக்குக. ( குறிப்பு – சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும்,
ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் )
18.
ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத்
தவறுவதில்லை என்று அசோக மித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத்
“ தர்க்கத்திற்கு அப்பால் “ கதை மாந்தர் வாயிலாக விளக்குக.
19.
“ தூசும் துகிரும் “ எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடல்
(
அல்லது )
“ மாற்றம் எனது “ எனத் தொடங்கும் காலக்கணிதப் பாடல்.
பிரிவு -2
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு விடையளி;- 2×3=6
19.
தன்மைஅணியினை விளக்கி அதன் வகைகளை எழுதுக.
20.கருவியும்
காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்ட தமைச்சு – அலகிட்டு வாய்பாடு
காண்க.
21.
கவிதையை உரையாடலாக மாற்றுக.
மகள்
சொல்கிறாள் அம்மா
என் காதுக்கொரு தோடு – நீ அவசியம் வாங்கி வந்து போடு! சும்மா
இருக்க முடியாது – நான் சொல்லிவிட்டேன் உனக்கு இப்போது தாய்
சொல்லுகிறாள் காதுக்கு கம்மல் அழகன்று – நான் கழறுவதைக் கவனி நின்று நீதர்
மொழியை வெகுபணிவாய் – நிதம் நீ கேட்டு வந்து காதில் அணிவாய் |
பின்னும்
மகள் ஆபர
ணங்கள் இல்லை யானால் – என்னை யார் மதிப்பார் தெருவில் போனால்? கோபமோ
அம்மா இதைச் சொன்னால் – என் குறைதவிர்க்க
முடியும் அதற்குத்
தாய் கற்பது பெண்களுக்கு
ஆபரணம் – கெம்புக் கல்வைத்த, நகைதீராத ரணம்! கற்ற
பெண்களை இந்த நாடு – தன் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் அன்போடு |
VI)
கீழ்க்காணும் வினாவிற்கு விடையளி:- 2×4=8
22.
நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் “ உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் “ என்ற உங்கள்
கட்டுரையை வெளியிட வேண்டி,அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக..
(அல்லது )
ஆ.
பள்ளித் திடலில்
கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி
வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக
23
அ.) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக:-
( அல்லது )
ஆ)
50,கம்பர் தெரு, பாரதிநகர், ஈரோடு மாவட்டத்தினைச்
சேர்ந்த கோவிந்தனின் மகள் கோகுலரசி ஈரோட்டில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்
பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்து அதே பள்ளியில் இயற்பியல் பாடப்பிரிவில் ஆங்கில
வழியில் பயில விரும்புகிறார். அவரின் மதிப்பெண் பட்டியல் கீழ்க்
கொடுக்கப்பட்டுள்ளது தேர்வர் தம்மை கோகுலரசியாக நினைத்து உரிய படிவத்தினை நிறைவு
செய்க.
பெயர்
: கோ.கோகுலரசி தேர்வெண் : 13405060 தமிழ்
– 97 ஆங்கிலம் – 80
கணிதம் – 95 அறிவியல்
– 90 சமூக அறிவியல் - 85
VII)
அனைத்து வினாக்களுக்கு விடையளி 2×5=10
24.அ)
நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு
இக்குறிப்புகளைக்
கொண்டு ஒரு பக்க அளவில் “ மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் “ என்ற தலைப்பில் மேடை
உரை எழுதுக. (அல்லது)
ஆ)
குறிப்புகளை கொண்டு
கட்டுரை எழுதித் தலைப்பிடுக.
முன்னுரை
– சாலைப்பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு – சாலைவிதிகள் – ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்
– விபத்துகளைத் தவிர்ப்போம் – விழிப்புணர்வு தருவோம் – முடிவுரை
25.
அ) அழகர்சாமியின் ‘ ஒருவன் இருக்கிறான் ‘ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை
மாந்தர் குறித்து எழுதுக.
(அல்லது)
ஆ)
குறிப்புகளைக் கொண்டு நாடகம் ஒன்றை எழுதுக.
மாணவன் – கொக்கைப் போல, கோழியைப் போல – உப்பைப் போல – இருக்க வேண்டும். கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் – குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி – கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணர முடியும் – ஆசிரியர் விளக்கம் – மாணவன் மகிழ்ச்சி
இந்த வினாத்தாளினை பதிவிறக்கம் செய்ய 15 விநாடிகள் காத்திருக்கவும்
பத்தாம் வகுப்பு இரண்டாம் இடைப்பருவ தேர்வுக்கான வினாக்கள் இருக்கும் பட்சத்தில் பகிரவும்
ReplyDelete