நாள் : 25-10-2022 முதல் 28-10-2022
மாதம் : அக்டோபர்
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : 1. புறப்பொருள் இலக்கணம்
2. சங்க இலக்கியத்தில் அறம்
3. ஞானம்
அறிமுகம் :
Ø அகப்பொருள்
பற்றிய பாடப்பகுதியிலிருந்து சில வினாக்களைக் கேட்டு பாடப்பொருளை ஆயத்தப்படுத்துதல்
Ø நீ
யார்க்கேனும் உதவி செய்தது உண்டா? உனக்கு பிறர் ஏதேனும் உதவி செய்துள்ளார்களா?
Ø உனது
வீட்டில் வீட்டு வேலைகள் செய்வோர் யார்? நீ எந்த மாதிரி உதவியினை உனது அம்மா அப்பாவிற்கு
செய்வாய்?
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, சில வகைப் படங்கள்.
நோக்கம் :
Ø பொருளிலக்கணத்தில்
புறப்பொருள் பொருள் பெறும் இடமறிந்து, அதனைச் செய்யுளில் கண்டறியும் திறன் பெறுதல்
Ø அறக்கருத்துகளை
வேராகக் கொண்ட சங்க இலக்கியங்களின் மையப் பொருளறிதல்
Ø தத்துவக்
கருத்துகளைச் சொல்வதற்கு ஏற்ற மொழி தமிழ் என்பதனைப் பாடல்கள் வழி உணர்ந்து சுவைத்தல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு)
Ø பொருள்
இலக்கணம் பற்றி விளக்குதல்.
Ø அகப்பொருள்
இலக்கணத்தை நினைவூட்டல்.
Ø ஒவ்வொரு
திணையின் செயல்பாடுகலையும், காணொலி வழியே காட்டுதல்.
Ø ஒவ்வொரு
திணையின் செயல்பாடுகளை விளக்குதல்
Ø எதிர்
எதிர் திணைகளை விளக்குதல்
Ø திணைக்குரிய
பூக்களை காட்டி விளக்குதல்.
Ø அறம்
பற்றி கூறல்
Ø அறத்தில்
வணிக நோக்கம் இல்லாமையை விளக்குதல்
Ø அரசியம்
அறம், போர் அறம், கொடை, உதவி,வாய்மை பற்றி கூறல்
கருத்து வரைபடம் :
புறப்பொருள் இலக்கணம்
சங்க இலக்கியத்தில் அறம்
ஞானம்
விளக்கம் :
( தொகுத்தல் )
புறப்பொருள் இலக்கணம்
o வெட்சி
– ஆநிரை கவர்தல்
o கரந்தை
– ஆநிரை மீட்டல்
o வஞ்சி
– மண்ணாசை காரணமாக போரிடல்
o காஞ்சி
– எதிர்த்து போரிடல்
o நொச்சி
– மதில் காத்தல்
o உழிஞை
– மதிலை கைப்பற்றுதல்
o தும்பை - வலிமை நிலைநாட்ட போரிடல்
o வாகை - வெற்றிப் பெற்ற மன்னனைப் பாடுதல்
o பாடாண்
– பாடு + ஆண் + திணை = பாடுவதற்கு தகுதி உடைய ஆண்மகனின் ஒழுகலாறுகளைப் பாடுவது
o பொதுவியல்
– வெட்சி முதல் பாடாண் வரை உள்ளவற்றில் சொல்லப்படாதவை மற்றும் பொதுவான தகவல்கள்
o கைக்கிளை - ஒரு
தலைக்காமம்
o பெருந்திணை - பொருந்தா
காமம்
சங்க இலக்கியத்தில் அறம்
o
கவிதை
வாழ்க்கையின் திறனாய்வு – ஆர்னால்டு
o
அறம்
செய்வதில் வணிக நோக்கம் இருக்கக் கூடாது என்பது சங்க கால மக்களின் கருத்து
o
அரசியல்
அறம் : அரசனின் நிர்வாகம், கடமை, வெண் கொற்றக்குடை
o
அறங்கூறவையம்
: அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைப்புரிந்தன.
o
போர்
அறம் : தம்மைவிட வலிமை குறைந்தவரோடு போர் புரியக் கூடாது.
o
கொடை
: வீரத்தைப் போலவே கொடையும் தமிழர்களால் விரும்பப்பட்டது.
o
உதவி
: பிறருக்கு உதவுதல் என்பதைச் சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.
o
வாய்மை
: வாய்மைச் சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன.
ஞானம்
o தி.சொ.வேணுகோபாலன்
o ஊர் : திருவையாறு
o பணி : மணிப்பால் பொறியியல் கல்லூரி பேராசிரியர்
o வீட்டில் அறப்பணி
o வீட்டைத் துடைத்தல்
o சாயம் அடித்தல்
காணொலிகள் :
·
விரைவுத்
துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
புறப்பொருள் இலக்கணம்
சங்க இலக்கியத்தில் அறம்
ஞானம்
·
வலையொளி
காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø
திணைகளின்
விளக்கம் தெளிதல்
Ø
எதிரெதிர்
திணைகளை அட்டவணைப்படுத்தி அறிதல்
Ø
திணைக்களுக்கு உரிய பூக்களையும் அதன் செயல்பாடுகளையும்
அறிதல்
Ø
அறங்களின்
தன்மைப் பற்றி அறிதல்
Ø
சங்க
கால மக்கள் அறத்தோடு வாழ்ந்த நிகழ்வை அறிதல்
Ø
அறத்தை
இன்றைய வாழ்வியல் சூழலோடு ஒப்பிடல்
Ø
வீட்டில்
அறப்பணி செய்யும் செயலை அறிதல்
Ø
வீட்டினைச்
சுத்தம் செய்யும் பணி எனபது இடையறாது நடக்கும் நிகழ்வு என்பதனை அறிதல்
மதிப்பீடு :
LOT :
Ø புறப்பொருள் என்பது யாது?
Ø அறம் எனபது யாது?
Ø ஞானம் கவிதையை எழுதியவர்
யார்?
MOT
Ø பாடாண் திணைப் பற்றிக்
கூறுக
Ø போர் அறம் குறித்து கூறுக.
Ø உங்கள் வீட்டில் நீ செய்யும் பணிகள்
யாவை?
HOT
Ø புறத்திணைகளில் நடைபெற்ற போரும் , இன்றைய
நிலையில் நடைபெற்ற போரும் குறித்து கூறுக
Ø அறங்கள் இன்று எந்த நிலையில்
உள்ளது என்பதனைப் பற்றிக் கூறுக.
Ø ஞானம் கவிதையினை அறத்துப்பாலுடன்
ஒப்பிடுக.
கற்றல் விளைவுகள் :
Ø புறப்பொருள் இலக்கணத்தைப் படித்தலின் வாயிலாகச் செய்யுளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள
பண்டைய போர்முறைகளைத் தெரிந்து கொள்ளுதல்
Ø அறக்கருத்துகளை வேராகக் கொண்ட சங்க இலக்கியப் பாடல்களின் மையப் பொருளறிதல்,உரை
நிகழ்த்துதல், அக்கருத்துகள் இன்றும் சமூகத்தில் பொருந்தி நிற்பது குறித்துக் கலந்துரையாடுதல்
Ø குறிப்புப் பொருள் உணர்த்தும் புதுக்கவிதை இயல்பறிந்து படித்தல், மையக்கருத்துணர்தல்
தொடர் பணி :
Ø
புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை