10TH - TAMIL - NOTES OF LESSON - OCTOBER - 3RD WEEK

   

நாள்               :           17-10-2022 முதல் 21-10-2022       

மாதம்                          அக்டோபர்

வாரம்               :              மூன்றாம்  வாரம்                     

வகுப்பு              :           பத்தாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. சிலப்பதிகாரம்

                                        2. மங்கையராய் பிறப்பதற்கே

அறிமுகம்                 :

Ø  உங்கள் ஊர் பகுதியில் நடைபெறும் தினசரி,வார, சந்தைகளும் அவற்றில் காணப்படும் பொருட்கள் குறித்தும் கேட்டறிந்து அறிமுகம் செய்தல்

Ø  மாணவர்களிடம் அவர்களின் அம்மாக்கள் செய்யும் பணிகளை கேட்டறிந்து ஊக்கப்படுத்தி பாடப்பொருளை ஆயத்தப்படுத்துதல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, சில வகைப் படங்கள்.

நோக்கம்                                   :

Ø  இலக்கியங்கள் காட்டும் செய்திகளை தற்கால வாழ்வியல் நடைமுறைகளுடன் தொடர்புப் படுத்துதல்

Ø  ஆளுமை மிக்க பெண்களின் சாதனைகளின் மூலம் தாமும் அந்நிலையை எட்டுதல் மற்றும் பெண்களை போற்றும் மனப்பாங்கினை வளர்த்தல்.

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு)

Ø  சிலப்பதிகாரம் பற்றி கூறுதல்

Ø  சிலப்பதிகாரம் நூற்குறிப்பு, ஆசிரியர் குறிப்பு பற்றிக் கூறல்

Ø  சிலப்பதிகார வணிக வீதிகள் மற்றும் வணிகர்கள் பற்றிக் கூறல்.

Ø  சிலப்பதிகார வணிக வீதிகளை இன்றைய வணிக வீதிகளோடு ஒப்பிடல்

Ø  மகளிரின் மாண்பினை உணர்த்துதல்

Ø  சாதனைப் பெண்மணிகளின் சாதனைகளை தொகுத்துக் கூறல்.

Ø  மகளிரின் சாதனைகளை வியந்து போற்றுதல்

கருத்து  வரைபடம்                   :

சிலப்பதிகாரம்


மங்கையராய் பிறப்பதற்கே

விளக்கம்  :

( தொகுத்தல் )

சிலப்பதிகாரம்

Ø  சிலப்பதிகாரம்

o    முத்தமிழ் காப்பியம், குடி மக்கள் காப்பியம்

o    இளங்கோவடிகள்

o    சேர மரபு

o    மூன்று காண்டங்கள்

Ø  சுண்ணம்                  -             நறுமணப்பொடி

Ø  காருகர்                    -             நெய்பவர்

Ø  தூசு                         -             பட்டு

Ø  துகிர்                       -             பவளம்

Ø  வெறுக்கை               -             செல்வம்

Ø  பாசவர்                     -             வெற்றிலை விற்போர்

 

மங்கையராய் பிறப்பதற்கே

o    எம். எஸ். சுப்புலட்சுமி – 1954 – தாமரையணி விருது,

·         1963 – இங்கிலாந்து மற்றும் ஐ.நா.அவையில் பாடல் பாடியது,

·         1974 – மகசேசே விருது

·         இந்திய மாமணி விருது

o    பால சரசுவதி           -             தாமரைச் செவ்வணி விருது

·         ஜனகணமன – பாடலுக்கு நடனம்

o    ராஜம் கிருஷ்ணன்    -             சாகெத்திய அகாதெமி விருது வென்றவர்,

·         கற்பனை கதை எழுதாதவர்

·         ஆய்வுக்குச் சென்று அங்கு உள்ள சூழல் குறித்து எழுதுபவர்

o    கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் -மதுரையின் முதல் பட்டதாரி

·         இந்தியாவின் தாமரைத் திரு

·         சுவீடன் – வாழ்விரிமை விருது

·         சுவிட்சர்லாந்து – காந்தி அமைதி விருது

o    சின்னப்பிள்ளை        -             மகளிர் குழு ஆரம்பித்தவர்

·         பெண் ஆற்றல் விருது

·         ஒளவை விருது

·         பொதிகை விருது

·         தாமரைத்திரு விருது

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

சிலப்பதிகாரம் - மனப்பாடப்பாடல்


சிலப்பதிகாரம்


மங்கையராய் பிறப்பதற்கே



·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                     :

Ø  சிலப்பதிகார சிறப்புகள், நூலின் பெருமைகள், பற்றி அறிதல்

Ø  சிலப்பதிகாரம் கூறும் வணிகம், வணிகர்கள் பற்றி அறிதல்

Ø  மனப்பாடப்பகுதியினை இசை இராகத்துடன் பாடுதல்

Ø  சிலப்பதிகார வணிகத்தினை இன்றைய வணிகத்தோடு ஒப்பிடல்.

Ø  பொருள் புரியா சொற்களுக்கு அகராதி துணைக் கொண்டு பொருள் புரிதல்

Ø  பார் போற்றிய பெண்களின் சாதனைகளை அறிதல்

Ø  பெண்களுக்கான பணி கடினம் என உணர்தல்

Ø  தனது தாயின் உழைப்பை போற்றுதல்

Ø  விருதுகளின் உன்னதம் அறிதல்.

Ø  தாங்களும் அதுபோல விருதுகளை வாங்க முற்படுதல்

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?

Ø  எம்.எஸ்.சுப்புலட்சுமி என்பவர் யார்?

MOT

Ø  சிலப்பதிகாரம் காட்டும் வணிகர்கள் யாவர்?

Ø  பூதான இயக்கம் குறித்து கூறுக

HOT

Ø  சிலப்பதிகார வணிக வீதிகளை இன்றைய வணிக வீதிகளோடு ஒப்பிடுக.

Ø  கடின உழைப்பினை மேற்கொள்ளும் இன்றைய சூழல் சாதனை பெண்மணிகள் பற்றிக் குறிப்பிடுக.

கற்றல் விளைவுகள்                  :

Ø  முதல் காப்பியத்தின் மொழிநடை அறிதல், காப்பியம் வழி அக்காலச் சமூக வாழ்வையும் பயன்பாட்டு மொழியையும் படித்துச் சுவைத்தல்

Ø  நாட்டின் பன்முக வளர்ச்சிக்கு வித்திட்ட பெண்களின் பங்களிப்பினைக் கலைநிகழ்ச்சி விவரிப்பாக வெளிப்படுத்தும் ஆற்றல் பெறுதல்

தொடர் பணி                            :

Ø   புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post