10TH - TAMIL - NOTES OF LESSON - NOVEMBER - 1ST WEEK

  

நாள்               :           31-10-2022 முதல் 04-11-2022       

மாதம்                          நவம்பர்

வாரம்               :               முதல் வாரம்                     

வகுப்பு              :           பத்தாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. காலக்கணிதல்

                                        2. இராமானுசர் நாடகம்

                                         3. பா - வகை அலகிடல்

அறிமுகம்                 :

Ø  கண்ணதாசன் பழைய பாடல்களைப் பாடி அல்லது நினைவூட்டி அறிமுகம் செய்தல்

Ø  அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி கொடுத்த நிகழ்வுக் குறித்து கேட்டறிந்து அறிமுகம் செய்தல்

Ø  எழுத்துகளின் வகைத் தொகைகளைக் கேட்டறிந்து அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, சில வகைப் படங்கள்.

நோக்கம்                                   :

Ø  தத்துவக் கருத்துகளைச் சொல்வதற்கு ஏற்ற மொழி தமிழ் என்பதனை பாடல்கள் வழி உணர்ந்து சுவைத்தல்

Ø  கட்டுரை, நாடகம் போன்றவற்றின் வரிவங்களைப் படித்துணர்ந்து, சொல்லப்புகும் கருத்தினை வெளிப்படுத்த ஏற்ற வடிவத்தினைத் தேர்ந்தெடுத்து வலுவாகப் பயன்படுத்துதல்.

Ø  தமிழின் நான்கு பாவகைகள் குறித்த அறிமுகம் பெற்று மேலும் கற்க ஆர்வம் கொள்ளுதல்

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு)

Ø  கண்னதாசன் பற்றி கூறல்

Ø  கவிதையினை நயம்பட வாசித்து பொருள் உணர்த்துதல்

Ø  இராமானுசர் பற்றி கூறல்

Ø  நாடகப் போக்கில் அமைந்த பகுதியின் மையக் கருத்து குறித்து விளக்குதல்

Ø  அலகிடும் முறையை விளக்குதல்

கருத்து  வரைபடம்                   :

காலக்கணிதம்


இராமானுசர் நாடகம்


பா – வகை அலகிடல்



 

விளக்கம்  :

( தொகுத்தல் )

காலக்கணிதம்

o    சிறுகூடல் பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தவர்

o    திரையிசைப் பாடல்கள், நூல்கள் பலவற்றையும் எழுதி உள்ளவர்.

o    கவிஞன் என்பவன் காலத்தை கணிப்பவன்

o    கவிஞனுக்கு கடவுளைப் போன்று ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற சக்தி உள்ளது

இராமானுசர் நாடகம்

o    இராமனுசர் மக்களுக்குத் தொண்டு செய்யக் கூடியவர்

o    தனக்கு கிடைத்த அரிய வரத்தையும் மக்களுக்கு கூறியவர்.

o    உலகம் உய்ய உற்ற வழிகளைக் கூறியவர்

o    தன்னலம் கருதாது பொதுநலமாக செயல்படக்கூடியவர் இராமனுசர்

பா – வகை அலகிடுதல்

o    எழுத்து,அசை,சீர்,தளை, அடி, தொடை என்பது யாப்பின் உறுப்புகள்

o    எழுத்து : குறில், நெடில், ஒற்று

o    அசை : நேர் அசை, நிரை அசை

o    சீர் : ஓரசைச்சீர், ஈரசைச் சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர்

o    பா – நான்கு வகைப்படும்

o    வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா

 

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

காலக்கணிதம்


இராமானுசர் நாடகம்

பகுதி - 1 


பகுதி - 2 


பா - வகை அலகிடுதல்




மாணவர் செயல்பாடு                     :

Ø  கண்ணதாசன் பற்றி அறிதல்

Ø  கவிதையின் மையக் கருத்தை உணர்தல்

Ø  கவிதையில் உள்ள நயங்களை அறிதல்

Ø  மனப்பாடப்பகுதியினை மனனம் செய்தல்

Ø  இராமானுசர் நாடகத்தை காணொலி வாயிலாக காணுதல்

Ø  நாடகத்தின் மையக் கருத்தினை உணர்தல்

Ø  தாமும் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய முனைதல்

Ø  தமிழ் எழுத்துகளின் வகை தொகைகளை அறிந்து யாப்பின் உறுப்புகளை உணர்தல்

Ø  குறில், நெடில் மாத்திரை அளவுகளை உணர்தல்

Ø  அசை பிரித்தல் வாய்பாடினைஅறிந்து அசை பிரித்தல்

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  கண்ணதாசன் பிறந்த ஊர் யாது?

Ø  இராமானுசருடன் இருந்தவர்கள் யார்?

Ø  யாப்பின் உறுப்புகள் யாவை?

MOT

Ø  கவிஞன் தன் தொழில்களாக கூறுவன யாவை?

Ø  இராமானுசர் அறிந்த மந்திரத்தின் பயன் யாது?

Ø  ஓரசைச் சீர் வாய்பாடுகளைக் கூறுக

HOT

Ø  கண்ணதாசன் கவிதையின் மையக் கருத்தினை இன்றைய நிலையோடு ஒப்பிடுக.

Ø  இராமானுசர் போன்று உங்களுக்கும் மந்திரம் கிடைக்கப் பெறின் நீங்கள் என்ன செய்வீர்கள்?

Ø  திருக்குறளை சீர் பிரித்து அலகிடுக

கற்றல் விளைவுகள்                  :

Ø  தொடைநயம் அமையப் பெற்ற புதுக்கவிதையினைப் படித்தல், தத்துவமொழியாம் தமிழின் நுட்பமறிந்து சுவைத்தல், அது போல் எழுத முனைதல்

Ø  கட்டுரை, நாடகம் போன்றவற்றின் வரிவங்களைப் படித்துணர்ந்து, சொல்லப்புகும் கருத்தினை வெளிப்படுத்த ஏற்ற வடிவத்தினைத் தேர்ந்தெடுத்து வலுவாகப் பயன்படுத்துதல்.

Ø  செய்யுளின் யாப்பு அமைப்புகளை அறிந்து படித்தல், அவற்றுள் அமைந்துள்ள யாப்புக் கூறுகளைப் புரிந்து கொண்டு செய்யுள்கூறுகளைப் பிரித்தல், யாப்புக் கட்டமைப்பின் நுட்பமறிந்து சுவைத்தல்

தொடர் பணி                            :

Ø   புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post