10TH - TAMIL - MODEL HALF YEARLY QUESTION - PDF

 

MODEL HALF YEARLY QUESTION PAPER - TAMIL

மாதிரி அரையாண்டு வினாத்தாள் 2022-2023

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                                    மதிப்பெண் : 100

அறிவுரைகள் : 1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக்  கண்காணிப்பாளரிடம்   உடனடியாகத் தெரிவிக்கவும்.

2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்     பயன்படுத்தவும்.

குறிப்பு : I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.

            ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

i)              அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

ii)              கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.                                                                                 15×1=15

1. 1.எறும்புந்தன் கையால் எண்சாண் – இத்தொடரில் உள்ள எண்ணுப்பெயர் _________

அ) எறும்பு          ஆ)  தன்கை      இ) எண்           ஈ) சாண்

2. “ சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி “ என்னும் அடியில் பாக்கம் என்பது ___

அ) புத்தூர்         ஆ) மூதூர்         இ) பேரூர்         ஈ) சிற்றூர்

3.’ மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’- மாலவன் குன்றமும், வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே

அ) திருத்தணியும்,திருப்பதியும்     ஆ) திருப்பரங்குன்றமும் பழனியும்

இ) திருப்பதியும் திருத்தணியும்    ஈ) திருப்பதியும் திருச்செந்தூரும்

4. வாய்மையே மழை நீராகி – இத்தொடரில் வெளிப்படும் அணி

அ) உவமை       ஆ) தற்குறிப்பேற்றம்        இ) தீவகம்         ஈ) உருவகம்

5. கீதாஞ்சலி என்ற நூலை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர் ____________

அ) ராகும் சாங்கிருத்யாயன்         ஆ) கணமுத்தையா                    இ) யூமா வாசுகி ஈ) இரவீந்தநாத் தாகூர்

6. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க….

அ) உழவு,மண்,ஏர்,மாடு                          ஆ) மண்,மாடு,ஏர்,உழவு

இ) ஏர்,உழவு,மாடு,மண்                          ஈ) உழவு,ஏர்,மண்,மாடு

7. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் புகழ்மிக்க பகுதியில் உள்ள தமிழ் தெரு _______

அ) கரிகாலன் தெரு        ஆ) இராஜேந்திர சோழன் தெரு              இ) இராச சோழன் தெரு

ஈ) குலோத்துங்கன் தெரு

8. கலையின் கணவனாகவும்,சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன்- ஜெயகாந்தனின் இக்க்கூற்றிலிருந்து நாம் புரிந்துக் கொள்வது_____________

அ) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்

ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்

இ) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்

ஈ) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்.

9. தலையில் அணியும் அணிகலன்_________

அ) கிண்கிணி               ஆ) சுட்டி            இ) சூழி            ஈ) குண்டலம்

10. வெட்டிய மரங்களுக்கு ஈடாக ____________ நட்டனர்.

அ) கொடிகளை              ஆ) நாற்றுகளை இ) மரங்களை               ஈ) மரக்கன்றுகளை

11. ‘ வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல் ‘ இவ்வடி குறிப்பது_______

அ) காலம் மாறுவதை        ஆ) வீட்டைத் துடைப்பது             இ) இடையறாது அறப்பணி செய்தலை  

 ஈ) வண்ணம் பூசுவதை

பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-

வண்மையில்லை யோர்வறுமை யின்மையால்

திண்மையில்லை நேர்நெறுக ரின்மையால்

உண்மையில்லை பொய்யுரை யிலாமையால்

வெண்மையில்லை பல்கேள்வி மேவலால்

12.இப்பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்தெழுதுக.

அ) வண்மை - வறுமை ஆ) திண்மை – நேர்மை

இ) உண்மை - வெண்மை        ஈ) பொய் – பல்கேள்வி

13 ) பாடலின் மோனைச் சொற்களைக் குறிப்பிடுக

அ) வண்மை – வெண்மை         ஆ) திண்மை - நேர்மை           

இ) உண்மை - வெண்மை        ஈ) பொய் – திண்மை

14 ) புகழுரை - பிரித்து எழுதுக

அ) புகழ் + இரை ஆ) புகழ் + உரை          இ) புகழு + உரை          ஈ) புகழு + இரை

15 ) இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

அ) நீதி வெண்பா           ஆ) கம்பராமாயணம்       இ) சிலப்பதிகாரம்           ஈ) தேம்பாவணி

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                                    4×2=8

21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

16. காலக்கழுதை கட்டெறும்பானதும் – கவிஞர் செய்தது யாது?.

17. விடைக்கேற்ற வினா அமைக்க.

            அ. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

            ஆ. தர்மார்த்தங்களை உபதேசிக்கவே வியாஸர் பாரத்தத்தை எழுதினார்.

18. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

19. எதற்காக எழுதுகிறேன்? என்று ஜெயகாந்தன் கூறிய காரணம் ஒன்றினைக் குறிப்பிடுக.

20. மன்னும் சிலம்பே!மணிமே கலைவடிவே!

   முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! – இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்ப்பியங்களின் பெயர்களை எழுதுக.

21.  குற்றம் இல்லாமல் தன் குடிப்பெருமையை உயரச் செய்து வாழ்பவரை உலகத்தார் உறவாகக் கொண்டு போற்றக் கூடியக் குறளை எழுதுக..

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                                                   5×2=10

22. மாடிலிருந்து இறங்கினார் முகமது. அவர் பாடகர். பாடல்களைப் பாடுவதும் கேட்பதும் அவருக்குப் பொழுதுபோக்கு. இப்பத்தியில் தடித்த எழுத்துகளில் உள்ள தொடர்களின் வகைகளை எடுத்தெழுதுக.

23. ஒலித்து– பகுபத உறுப்பிலக்கணம் தருக.

24. குறள் வெண்பாவின் இலக்கணத்தை எழுதுக.

25. குறிப்பு விடைகளின் வகைகளை எழுதுக

26. தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.

            அ. மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

            ஆ. குழந்தைகள் தனித்தனியே எழுதித்தர வேண்டும்

27. கலைச்சொல் தருக:-            அ. Revivalism     ஆ)  Biotechnology

28. பாரதியார் கவிஞர்,நூலகம் சென்றார்,அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )

பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                                        2×3=6

29. முன்னுரையில் முகம் காட்டும் ஜெயகாந்தன் குறித்து எழுதுக.

30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக;

அம்மானை பாடல்கள்,சித்தர் பாடல்கள்,சொற்பொழிவுகள் போன்றவற்றின் மூலமாக நான் இலக்கிய அறிவுபெற்றேன். அப்போது அவர்கள் வெளியிடும் சிறந்த கதைகளை ஏடுகளில் குறித்து வைத்துக் கொள்வேன்.யான் முறையாக ஏட்டு ஏட்டுக் கல்வி பெற இயலாமல் போனதால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யக் கேள்வி ஞானத்தைப் பெருக்கிய பெருமை திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகளுக்கே அதிகம் உண்டு என்றெல்லாம் தமது செவிச்செல்வம் பற்றி ம.பொ.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.

அ. ம.பொ.சி அவர்கள் கேள்வி ஞானத்தை அதிகமாக யாரிடம் பெற்றதாகக் குறிப்பிடுகிறார்?

ஆ. ம.பொ.சி. அவர்கள் இலக்கிய அறிவினை எவ்வாறு பெற்றார்?

இ. ஏட்டுக்கல்வி பெற இயலாத ம.பொ.சி. அதனை எவ்வாறு ஈடு செய்தார்?

31. உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார்.அவரிடம் கல்வி கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?

 

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                          2×3=6

34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.

32. வள்ளுவம் சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.

33. “ மாளாத காதல் நோயாளன் போல் “ என்னும் தொடரிலுள்ள  உள்ள உவமை சுட்டும் செய்திகளை விளக்குக.

34. “ செம்பொன் அடிச்சிறு“ எனத் தொடங்கும் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் பாடலை எழுதுக

(அல்லது )

      “ நவமணி வடக்கையில் “ எனத் தொடங்கும் தேம்பாவணி பாடலை எழுதுக.

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                                   2×3=6

35. . ‘ கண்ணே கண்ணுறங்கு!

    காலையில் நீயெழும்பு!

    மாமழை பெய்கையிலே

    மாம்பூவே கண்ணுறங்கு!

    பாடினேன் தாலாட்டு!

    ஆடி ஆடி ஓய்ந்துறங்கு! – இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.

36. பொறிஇன்மை யார்க்கும் பழிஅன் றறிவறிந்

      தாள்வினை இன்மை பழி – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு காண்க.

37. கொண்டு கூட்டுப் பொருள்கோளினை விளக்கி, எடுத்துக்காட்டு ஒன்று தருக.

பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                                          5×5=25

38. அ) இரண்டாம் இராசராச சோழனது மெய்க்கீர்த்திப் பாடலின் அழகிய நயத்தைச் சுவைபட விளக்குக

( அல்லது )

ஆ) ஆற்றுப்படுத்துதல் என்பது அன்றைக்குப் புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது.அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.

39. அ) நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் “ உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் “ என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி,அந்நாளிதழ் ஆசிரியருக்கு கடிதம் எழுதுக.

( அல்லது )

 ஆ. “ பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல் “ என்ற செயல்திட்டம் ஒன்றை உருவாக்கி அது உங்கள் பள்ளியில் தலைமையாசிரியர் ஒப்புதலுடன் செயல்படுத்திட அனுமதி வேண்டி தலைமையாசிரியருக்கு கடிதம் எழுதுக.

40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.



41. நாமக்கல் மாவட்டம்,கம்பர்.நகர், பாரதித் தெரு,கதவிலக்க எண் 38 இல் வசிக்கும்  தமிழன்பன் மகன் இளவேலன் 2021 -2022 ஆம் ஆண்டில்   அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்து அதே பள்ளியில் மேல்நிலை முதல் வகுப்பில் வேதியியல் பாடப்பிரிவில் தமிழ் வழியில் சேர விரும்புகிறார். அவரின் மதிப்பெண் விபரங்கள்;- பதிவெண் : 1380269  தமிழ் – 98, ஆங்கிலம் – 95, கணிதம் – 91, அறிவியல் – 93, சமூக அறிவியல் – 93 . தேர்வர் தம்மை இளவேலனாக  நினைத்துக் கொண்டு உரியப் படிவத்தை நிரப்புக.

42. அ) மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிடுக

( அல்லது )

ஆ) நயம் பாராட்டுக:-

            நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்

நேர்ப்பட வைத்தாங்கே

    குலாவும் அமுதக் குழம்பைக் குடிதொரு

கோல வெறிபடைத்தோம்;

    உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்

ஓட்டி மகிழ்ந்திடுவோம்;

   பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு

பாடுவதும் வியப்போ?                 - பாரதியார்

பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.                                                              3×8=24

43. அ) ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறைகொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்று விடுமா? இக்கருத்துகளை ஒட்டிச் ‘ செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள் ‘ பற்றி ஒரு கட்டுரை எழுதுக.

( அல்லது )

ஆ) நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு . குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் “ மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும் “ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.

44. அ) “ புயலிலே ஒரு தோணி “  கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?

( அல்லது )

ஆ) ‘ என் மக்கள் அனைவருக்கும்  நலம் கிட்டும். எல்லாரும் நலமுடன் வாழ்வார்கள் ‘ என்ற இராமானுசரின் கூற்றுக்கு ஏற்ப தன்னலமற்ற பண்புகளைக் கொண்டவர்களாக நாம் வாழ வேண்டும் என்பதனை நீங்கள் அறிந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

 

45. அ) நீங்கள் சென்று வந்த அரசு பொருட்காட்சியில் அறிவிப்பு – அமைப்பு – சிறு அங்காடிகள் – நிகழ்த்தப்பட்ட கலைகள் – பேச்சரங்கம் – அரசின் நலத்திட்டங்கள் குறித்த விளக்க அரங்குகள் போன்றவற்றைக் குறிப்புகளாகக் கொண்டு கட்டுரை எழுதுக.

( அல்லது )

ஆ) உழவே தமிழர் பண்பாட்டின் மகுடம் – உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் – சுழன்றும் ஏர் பின்னது உலகம் - இக்குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று எழுதி பொருத்தமான தலைப்பிடுக.

 

ந்த வினாத்தாளினை பதிவிறக்கம் செய்ய 15 விநாடிகள் காத்திருக்கவும்

நீங்கள் 15 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post