9TH-TAMIL-QRTLY - SALEM DT - ANSWER KEY - PDF

 

சேலம் - காலாண்டு வினாத்தாள்

செப்டம்பர் - 2022-2023

ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                         மதிப்பெண் : 100

பகுதி – 1 / மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

அ. ச. அகத்தியலிங்கம்

1

2.

இ. சிற்றிலக்கியம்

1

3.

இ. மோனை,எதுகை,இயைபு

1

4.

இ. கூவல்

1

5.

இ. பண்புத்தொகை,வினைத்தொகை

1

6.

இ. வளம்

1

7.

ஈ. தொகைச்சொற்கள்

1

8.

அ. ஆராயாமை, ஐயப்படுதல்

1

9.

இ. 2003

1

10.

ஆ. தொடு உணர்வு

1

11.

ஆ. மயில்சாமி அண்ணாதுரை

1

12.

இ. புறநானூறு

1

13.

ஈ. குடபுலவியனார்

1

14.

ஆ. எண்ணும்மை

1

15.

ஈ. தந்தவர்

1

பகுதி – 2 / பிரிவு - 1

16.

அ) திராவிட மொழிகள் சிலவற்றின் தாய்மொழியாக கருதப்படுவது எது?

ஆ) பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக்காப்பியம் எது?

1

1

17.

இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி எனப்படும்.

2

18.

வாளை மீன்கள் துள்ளி எழுந்து பாக்கு மரத்தில் பாய்வதற்கு ஒப்பிடுகிறது.

2

19

செயல் வேறு சொல் வேறு  என்று இருப்பவர் நட்பு கனவிலும் இனிக்காது.

2

20.

ü  தொலைநகல் இயந்திரம் ( FAX )

ü  தானியங்கு பண இயந்திரம் ( ATM )

ü  ஆளறி சோதனைக் கருவி ( BIOMETRIC DEVICE )

ü  வங்கி கணக்கு அட்டை அச்சுப்படி இயந்திரம்

ü  அட்டை தேய்ப்பி இயந்திரம்

2

21

எனைத்தானும் நல்லவைக் கேட்க அனைத்தானும்

ஆன்றப் பெருமைத் தரும்

2

பகுதி – 2 / பிரிவு - 2

22

அ) இனிய       ஆ) நல்ல       இ) பெரிய           ஈ) கொடிய

2

23

உவமைத்தொகையில் வல்லினம் மிகும்.

எ.கா : மலர்ப்பாதம்     ( பொருத்தமான வேறு விடை இருப்பின் மதிப்பெண் வழங்குக )

2

24

அ) நானும் என் நண்பனும் நகமும் சதையுமாக கடைசி வரை ஒற்றுமையுடன் இருப்போம்.

ஆ) இந்த சிறு தவறு இதுவே முதலும் முடிவுமாக இருக்க வேண்டும்.

1

1

25.

அ) நடுகல்

ஆ) ஒலியன்

2

26.

இருவரும் சேர்ந்து செயலை சேர்த்து செய்வோம்.

2

27.

கொள்வார் – கொள் + வ் + ஆர்

கொள் – பகுதி

வ் – எதிர்கால இடைநிலை

ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி

2

28.

அலை – கடலலை

கடலலையில் மீன் துள்ளி விளையாடியது.

அழை – வரவழைத்தல்

ஆசிரியர் அனைவரையும் அழைத்தார்

 

2

பகுதி – 3

பிரிவு - 1

29

                     மூன்று – தமிழ்

o    மூணு – மலையாளம்

o    மூடு – தெலுங்கு

o    மூரு – கன்னடம்

o    மூஜி - துளு

3

30

Ø  மழைக்காலங்களில் ஏரிகள் நிரம்பும் போது நீரினைத் தூர் வார  நீந்துபவர் கழிமுகத்தை அடைந்து, குமிழித்தாம்பினைத் தூக்குவர்

Ø  நீரோடி துளையிலுருந்து நீரும், சேறோடி துளையிருந்து சேற்று நீரும் வெளியேறும்.

நீரைத் தூர் வார வேண்டி பயன்படுத்தப்பட்டது

3

31.

·         காங்கேயம் மாடுகள்

·         இலங்கை, பிரேசில், பிலிப்பைன்ஸ், மலேசியா

·         காங்கேயம் காளைகள்

1

1

1

பகுதி – 3

பிரிவு - 2

32

v  தமிழ் மொழி காலத்திற்கேற்றவாறு புதுப்பித்துக் கொள்கிறது

v  சங்க காலங்களில் தமிழ் மொழியை ஓலைச் சுவடிகளில் எழுதினர்

v  அதன் பின் காகிதங்களில் எழுதுகோல் கொண்டு எழுதப்பட்டது.

v  அச்சங்களில் அச்சுகோப்பாக மாறி அச்சாகி வெளிவந்தது

v  இன்று கணினியில் வலம் வந்து உலக நாடுகள் எல்லாம் அறிந்த மொழியாக மாறி வருகிறது.

v  மேலும் பல்வேறு விதமான கலைச் சொல் உருவாக்கப்பட்டும் காலந்தோறும் தம்மைப் புதுப்பித்துக் கொள்கிறது தமிழ்மொழி

3

33.

v  கரிகாலன் புகழைக் கணினியுள்ளே பொறுத்துங்கள்.

v  திசையில் ஏவும் அன்பைப் போல இருந்த இனத்தை மாற்றுங்கள்.

v  ஏவுகணையில் தமிழை எழுதி அனைத்து கோள்களிலும் ஏற்றுங்கள்.

3

34.

காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு

மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை

கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன

நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம்

 

                                        ( அல்லது )

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

இரண்டறி வதுவே அதனொடு நாவே

மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே

நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே

ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே

ஆறறி வதுவே அவற்றொடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே

3

பகுதி – 3

பிரிவு - 3

35

தன்வினை

பிறவினை

எழுவாய் ஒரு வினையை செய்தல்

எழுவாய் ஒரு வினையை செய்ய வைத்தல்

எ.கா : பந்து உருண்டது

எ,கா: பந்தை உருட்ட வைத்தான்

          அவன் திருந்தினான்

        அவனைத் திருந்தச் செய்தான்

3

36.

வல்லினம் மிகும் போது ஒரு பொருளும் மிகாத போது வேறொரு பொருளும் வருவதைக் காணலாம். நாம் பேசும் போதும் எழுதும் போதும் மயக்கம் தராத வகையில் மொழியைப் பயன்படுத்துவதற்கு வல்லினம் மிகும் இடம், மிகா இடங்களை அறிவது இன்றியமையாதது.

எடுத்துக்காட்டு :

1.         மண்வெட்டி கொண்டு வா.

2.       மண்வெட்டிக் கொண்டு வா.

இவற்றில் முதல் தொடர் மண்வெட்டியை எடுத்து வா என்னும் பொருளைத் தருகிறது. இரண்டாம் தொடர் மண்ணை வெட்டி எடுத்து வா என்னும் பொருளைத் தருகிறது. இவ்வா று பொருள் தெளிவை ஏற்படுத்தவும் வல்லினம் இட்டும் நீக்கியும் எழுதுவது இன்றியமையாகிறது.

3

37

காலையில் துயில் எழுந்து, ‘ பல் துலக்கி, சீருடை அணிந்துக் கொண்டு பள்ளிக்குப் போனாள்

3

பகுதி – 4

38

ü   அ) அமிழ்தினும் மேலான முத்திக் கனியே ! முத்தமிழே ! உன்னோடு 

ü  மகிழ்ந்து சொல்லும் விண்ணப்பம் உண்டு கேள்.

ü  புலவர்கள் குறம்,பள்ளு பாடி தமிழிடமிருந்து சிறப்பு பெறுகின்றனர். அதனால் உனக்கும் பா வகைக்கும் உறவு உண்டு.

ü  தமிழே ! சிந்தாமணியாய் இருந்த உன்னைச் சிந்து என்று அழைப்பவர் நா இற்று விழும்.

ü  தேவர்கள் கூட மூன்று குணங்கள் தான் பெற்றுள்ளனர். ஆனால் தமிழே! நீ மட்டும் பத்து குணங்களைப் பெற்றுள்ளாய்.

ü  மனிதர் உண்டாக்கிய வண்ணங்கள்  கூட ஐந்து தான்,. ஆனால் தமிழே ! நீ மட்டும் நூறு வண்ணங்களைப் பெற்றுள்ளாய்.

ü  உணவின் சுவையோ ஆறு தான். ஆனால், தமிழே ! நீயோ ஒன்பது சுவைகளைப் பெற்றுள்ளாய்.

ü  மற்றையோர்க்கு அழகு ஒன்று தான். ஆனால் தமிழே! நீயோ எட்டு வகையான அழகினைப் பெற்றுள்ளாய்.

 

5

38

ஆ.

ü  காவிரி ஆறு புதிய பூக்களை அடித்து வர அதனை வண்டுகள் மொய்த்து ஆராவாரம் செய்கின்றன.

ü  நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின் முதல் இலை சுருள் விரிந்து. இதனைக் கண்ட உழவர் இது தான் களை பறிக்கும் பருவம் என்று அறிந்தனர்.

ü  காடுகளில் எல்லாம் கரும்புகள் உள்ளன.

ü  வயல்களில் சங்குகள் நெருங்கி உள்ளன.

ü  சோலைகள் எல்லாம் செடிகளின் புதிய கிளைகளில் அரும்புகள் உள்ளன.

ü  பக்கங்களில் எல்லாம் குவளை மலர்கள் உள்ளன.

ü  கரை எங்கும் இளைய அன்னங்கள் உலவுகின்றன.

ü  குளங்கள் எல்லாம் கடல் போல் பெரிதாக உள்ளன.

ü  அன்னங்கள் விளையாடும் நீர் நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும். அதனால் அதில் உள்ள வாளை மீன்கள் அருகில் உள்ள பாக்கு  மரங்கள் மீது பாயும் இக்காட்சியை நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில் போன்றுள்ளது.

ü  செந்நெல்லின் சூடுகள், பலவகைப்பட்ட மீன்கள் ,முத்துக்கள், மலர்த் தொகுதிகள் ஆகியவற்றைத் திருநாட்டில் குவித்து வைத்திருந்தனர்.

ü  தென்னை, செருந்தி, அரசமரம், கடம்பமரம்,பச்சிலை மரம், குராமரம், பனை,சந்தனம், நாகம், வஞ்சி,காஞ்சி மலர்கள் நிறைந்த கோங்கு முதலியன எங்கும் திருநாட்டில் செழித்து வளர்ந்துள்ளன.

5

39

12, தமிழ் வீதி,

மதுரை-2

28,செப்டம்பர் 2021

அன்புள்ள நண்பா !                                        

        வணக்கம் . நலம். நலமறிய ஆவல்  என்னுடைய பிறந்தநாள்  பரிசாக நீ அனுப்பிய  எழுத்தாளர் எஸ் . இராமகிருஷ்ணன் எழுதிய  கால் முளைத்த கதைகள் என்ற கதைப்புத்தகம்  கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அதில் உள்ள கதைகள் அனைத்தையும் படித்தேன். படிப்பதற்குப் புதுமையாகவும், மிக்க ஆர்வமாகவும் இருந்தன.

      இந்நூலில் பூனையை நாய் ஏன் துரத்துகிறது? போன்ற தலைப்புகளில் கதைகள் உள்ளன. குழந்தைகள் மிகவும் விரும்பிப் படிப்பதற்கு ஏற்ற வகையில் இனிய எளிய சொற்களால், கதைகள் சிறியனவாக அமைந்துள்ளன. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

அன்பு நண்பன்,                                                                                                                                                அ.எழிலன்.  .

உறைமேல் முகவரி;

            பெறுதல்

                        திரு.இரா.இளங்கோ,

                        100,பாரதி தெரு,

                        சேலம்.

 

5

39

ஆ. கோரணம்பட்டி அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 05-07-22 அன்று வள்ளுவன் இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. பள்ளி மாணவ – மாணவியர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர்.

    பள்ளித் தலைமையாசிரியர்  சிறப்பான வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக வந்த முனைவர் எ.மாணிக்கம் தாய்மொழியின் மூலமாகத்தான் கருத்துக்களைச் சிறந்த முறையில் வெளியிட முடியும், தாய்மொழி வழியே கற்பதன் மூலமே பாடங்களைச் செம்மையாகவும் திருத்தமாகவும் கற்றுக்கொள்ள முடியும்.

       மாணவர்கள் நாட்டுப்பற்றும் ,மொழிப்பற்றும் கொண்டு ஒழுக்கச் சீலர்களாகத் திகழ வேண்டும் என்று மாணவர்களுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி சிறப்புரையாற்றினார்.

     மாணவர் செயலர் நன்றி கூறினார். மாணவிகள் நாட்டுப்பண் பாட விழா இனிதே முடிந்தது.

 

5

40

ஏடெடுத்தேன் கவி ஒன்று எழுத

என்னை எழுது என்று

சொன்னது இந்த காட்சி

இது அர்த்தமுள்ள காட்சி

விழிப்புணர்வுக்கான காட்சி

5

41.

திரண்ட கருத்து : 

           மழையானது மலை, காடு, மரம், செடிகொடிகள், மணற்பாங்கான சமவெளிகள் ஆகிய இடங்களில் தவழ்ந்து ஓடிவந்தது. ஏரி, குளம், குட்டைகள், வாய்க்கால், ஓடைகள் ஆகிய இடங்களில் எல்லாம் மழைநீர் ஓடிவந்தது என, மழையின் சிறப்பைப் பாடி உள்ளார்.

மையக்கருத்து : 

      காடு, மரம், செடி கொடிகள், ஏரி, குளம், ஓடைகள் எல்லாம் கடந்து மழைநீர் வந்தது.

மோனைத்தொடை : சீர், அடிகளில் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனைத்தொடையாகும்.

ல்லும் - டந்து, ல்லை - ங்கும், றாத - ரி, ராத - ற்றிலும்.

எதுகைத்தொடை : அடி, சீர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகைத் தொடையாகும்.

 ல்லும் - எல்லை, றாத - ஊறா

இயைபுத் தொடை : இறுதி எழுத்தோ, சொல்லோ ஓசை ஒன்றிவரத் தொடுப்பது, இயைபுத் தொடையாகும்.

கடந்து வந்தேன், தவழ்ந்து வந்தேன்

அணிநயம் : மழைநீரின் ஓட்டத்தை வெகுவாகச் சிறப்பித்துக் கூறுவதால், உயர்வு நவிற்சி அணி பயின்று வந்துள்ளது.. வந்தேன், வந்தேன் என்னும் வினைச்சொல், பலமுறை வந்து ஒரே பொருளைத் தருவதால், இது சொற்பொருள் பின்வரு நிலையணியுமாகும்.

சொல்நயம் : குதித்து, கடந்து, தவழ்ந்து, மேடுகள் ஏறி, நிரப்பி, உட்புகுந்து என, மழைநீர்ச் சிறப்பை உணர்த்தப் பொருள் பொதிந்த சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன..

5

42

அ.

1. You have to dream before your dreams can come true – A.P.J.Abdul Kalam

உங்கள் கனவு நனவாகும் வரை கனவு காணுங்கள் -A.P.J.அப்துல் கலாம்

2 Every flower is a soul blossoming in nature – Gerard De Nerval

எல்லா பூக்களும் இயற்கையில் உயிருடன் இருக்கிறது

3. Sunset is still my favourite colour, and rainbow is second - Mattie Stepanek

சூரிய அஸ்தமனேம் முதலில் எனக்கு பிடித்த வண்ணம், வானவில்லின் வண்ணம் அடுத்த நிலை தான்.

4. An early morning walk is a blessing for the whole day – Henry David Thoreau

அதிகாலையில் நடைப்பயிற்சி அந்நாளுக்கே ஒரு வரமாகும்.

5. Just living is not enough… One must have sunshine, freedom, and a little flower – Hans Christian Anderson

வெறுமையான வாழ்வு மட்டும் போதாது, ஒவ்வொருவருக்குள்ளும் ஒளி, ஆற்றல், விடுதலை மலர் என இருத்தல் வேண்டும்.    

 

5

42

ஆ. என் பெற்றோர் மகிழுமாறு நீ செய்ய வேண்டிய செயல்கள்

·         என் வீட்டின் நிலையறிந்து, தேவையறிந்து பொருள்கள் வாங்குவது

·         அலைபேசிப் பயன்பாட்டினைப் பத்து நிமிடங்களுக்கு மேல் நீட்டிக்காமல் இருப்பது

·         தொலைக்காட்சி பார்ப்பதைக் குறிப்பிட்ட நேரமாகக் குறைத்துக் கொள்வது.

5

 

பகுதி – 5

 

43

ü  அ. ஸ்பெயின் காளைச் சண்டையைத் தேசிய விளையாட்டாக கொண்டுள்ளது.

ü  காளை கொன்று அடக்குபவனே வீரன்

ü  வென்றாலும் தோற்றாலும் போட்டியின் முடிவில் காளையை சில நாடுகளில் கொல்வதும் உண்டு.

ü  இவை வன்மத்தையும் போர்வெறியையும் வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

ஆனால், தமிழகத்தில் ஏறு தழுவுதலில் ஆயுதத்தைப் பயன்படுத்தக் கூடாது.

ü  நிகழ்வின் தொடக்கத்திலும் முடிவிலும் காளைக்கு வழிபாடு செய்வர்.

ü  எவரும் அடக்க முடியாத காளைகள் கூட, வெற்றி பெற்றதாக அறிவிப்பர்.

ü  அன்பையும் வீரத்தையும் ஒன்றாக வளர்த்தெடுக்கும் இவ்விளையாட்டில், காளையை அரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர்

8

 

ஆ.

·         வங்கி அட்டையைக் கொண்டு இன்று தேவைப்படும் போது தானியங்கு பண இயந்திரம் மூலம் பணம் பெறமுடிகிறது.

·         இதன் காரணமாக கால விரயம் தவிர்க்கப்படுகிறது.

·         மேலும் இந்த அட்டை மூலம் பல்வேறு விதமான இணைய வழிச் சேவைகளைப் பெறமுடிகிறது.

·         சமையல் எரிவாயு முன்பதிவு, இரயிலில் முன்பதிவு, திரையரங்கு காட்சி முன்பதிவு, அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வுக்கான கட்டணம் என எல்லாவற்றிற்கும் இந்த அட்டையைக் கொண்டு எளிதில் பணம் செலுத்திவிட முடிகிறது.

·         வங்கி அனுப்பும் ஒரு முறை பயன்படுத்தும் குறியீட்டைப் பயன்படுத்தி இந்த இணைய வழி சேவைகளைப் பெறலாம்..

8

44.

அ.

முன்னுரை :

           கந்தர்வன் எழுதிய தண்ணீர் என்ற இக்கதையில் நீரின் அவசியமும், நீருக்காக கிராம மக்கள் படும் பாட்டையும் அழகாக எழுதியுள்ளார். அதை இக்கட்டுரையில் காணலாம்.

கிராமத்தின் நிலை :

          கதையின் கிராமத்தில் குடிப்பதற்கு நீர் பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டும்.

அந்த கிராமம் குடிநீருக்காக பிலாப்பட்டிக்கு செல்ல வேண்டும். நிலத்தடி நீர் வற்றி ஆண்டுகள் பல ஆயிற்று.

இரயில் நீர் :

            அந்த ஊருக்கு வரும் இரயிலின் ஊதல் ஒலிக் கேட்டு அந்த கிராம மக்கள் தண்ணீருக்காக பெண்கள் ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்துக் கொண்டு ஓடுவர்.

ஸ்டேசன் மாஸ்டர் மிரட்டியும் பயன் இல்லை. இரயிலை விட்டால் பிலாப்பட்டிக்கு போக வேண்டும்.

இந்திரா :

          இளம் பெண் இந்திரா தன்னை திருமணம் செய்து கொடுத்தால் நீர் இருக்கும் ஊருக்கு தான் கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டே இரயில் பெட்டியில் நுழைந்தாள்.

மக்கள் தேடல் :

          வீட்டில் நீர் இல்லை என்பதை நினைத்துக் கொண்டே நீர் பிடித்திருந்த இந்திரா இரயில் நகர்ந்ததை கவனிக்கவில்லை.

            இந்திராவின் தாய் புலம்புகிறாள். இந்திராவைத் தேடி இராமநாதபுரம் பேருந்து நிலையம் சென்று தேடிப் பார்த்தனர். எங்கும் காணவில்லை.

திரும்பிய இந்திரா:

          தண்டாவளத்தில் சிறுது தூரத்தில் பெண் ஒருத்தி தென்பட்டாள். அவள் இந்திரா. ஒரு குடம் நீர் பிடிக்க இரயிலிலேயே உள்ள நீர் பிடித்து அதனை சிந்தாமல் கொண்டு வந்து சேர்த்தாள்.

முடிவுரை :

தண்ணீர் வாழ்வில் மிக முக்கியம். அதனை அறிந்து நீரினை சேமிப்போம். சிக்கனமாகப் பயன்படுத்துவோம். நீர் மேலாண்மையைக் கட்டமைப்போம்.

 

8

44

ஆ) இந்திய விண்வெளித்துறை

முன்னுரை:-

இந்திய விண்வெளித் துறையில் அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாத்துரை, வளர்மதி, சிவன் ஆகியோரன் பங்கு அளப்பரியதாகும். இந்தியர்கள் வானியியல் வல்லமையை வலுப்படுத்தும் பல்வேறு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளித்துறை படைத்துள்ளது.

இஸ்ரோ:-

·         இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) பெங்களூரில் உள்ளது. திரு.கே.சிவன் என்பவர் 14.1.2018 முதல் இதன் தலைவராக உள்ளார்,

·         குறைந்த செலவில் தரமான் சேவையை கொடுப்பதனை நோக்கமாக இஸ்ரோ கொண்டுள்ளது.

·         இதுவரை 45 செயற்கைக்கோள் வின்னில் செலுத்தப்பட்டுள்ளன.

·         இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உலகின் மிகப் பெரிய் விண்வெளி ஆய்வு மையத்தில் ஆறாவது இடத்தை பெற்றுள்ளது.

சாதனைகள்:-

·         1975-ல் இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் ஆரியப்பட்டா சோவியத் ரஷ்யா உதவியால் விண்ணில் செலுத்தப்பட்டது. விக்ரம் சாராபாய் இதற்கு மூல காரணம் ஆவார்

·         1980-ல் முதல் செயற்கைக் கோள் ரோகிணி விண்ணில் ஏவப்பட்டது.

·         சந்திராயன்-1 நிலவை நோக்கி 2008-ல் விண்ணில் ஏவப்பட்டது.

·         நேவிக் என்ற செயலியைக் கடல் பயணத்திற்கு உருவாயிக்கியிருக்கிறது.

முடிவுரை:-

நம் நாட்டிற்கு தேவையான செயற்கைக் கோளை விண்ணில் அனுப்பி நம் தேவைகளை நிறைவு செய்வதே இஸ்ரோவின் செயல்பாடு

 

8

45

அ.

ஏழைகளின் ஊட்டி - ஏற்காடு

         கடந்த 2018 சனவரி மாதம் இயற்கை எழில் கொஞ்சும் ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடுக்கு நான் சுற்றுலா சென்றிருந்தேன்.அந்த அழகான பயண அனுபவங்களை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து  பேருந்தில் சென்றோம். மலைகளின் இருபுறமும் எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகளைக் காண இரு கண்கள் போதாது. அங்கு சென்ற பின்

   ஏற்காடு படகு இல்லம்,

   சீமாட்டி இருக்கை,

   பகோடா உச்சி,

   பூங்கா,

    காவேரி சிகரம்,

   சேர்வராயன் மலை உச்சி என அனைத்து இடங்களும் மனதை கொள்ளைக் கொள்கிறது. எத்தனை அழகு. என்றும் நினைவை விட்டு அகலாது ஏற்காடு..

ஏற்புடைய பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக

8

45

ஆ. குறிப்புச் சட்டம்

முன்னுரை

மரம் வளர்ப்போம்

மழை பெறுவோம்

மழைநீர் சேகரிக்கும் தளங்கள்

மழை நீர் சேகரிக்கும் முறை

முடிவுரை

.

மேற்கண்ட தலைப்புகளில் ஏற்புடைய பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக.

8

 CLICK HERE TO DOWNLOAD BUTTON TO GET THIS ANSWER KEY PDF

நீங்கள் 15 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

விடைக்குறிப்பு தயாரிப்பு

இளந்தமிழ் – வழிகாட்டி

தமிழ் விதை மற்றும் கல்வி விதைகள் வலைதளம்

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post