9TH - TAMIL - NOTES OF LESSON - OCTOBER - 2ND WEEK

  

நாள்               :           10-10-2022 முதல் 14-10-2022       

மாதம்                          அக்டோபர்

வாரம்               :              இரண்டாம்  வாரம்                     

வகுப்பு              :           ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. சிறு பஞ்ச மூலம்

                                        2. வீட்டிற்கோர் புத்தகசாலை

                                        3. இடைச்சொல் - உரிச்சொல்

அறிமுகம்                 :

Ø  நற்பண்புகளைக் கூறும் சிறு கதை கூறல்

Ø  புத்தகங்களை நேசித்தவர்கள் பற்றிய காணொலியினைக் காண்பித்தல்

Ø  தமிழ் இலக்கணத்தின் வகைகளைக் கேட்டு அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி, வில்லு இசைக் கருவி, பானை

நோக்கம்                                   :

Ø  குறிப்பிட்ட தலைப்பின் கீழ் கருத்துகளைத் திரட்டிக் கோவையாக எழுதும் திறன் பெறுதல்

Ø  நூலகத்தின் பயனறிந்து பயன்படுத்த முனைதல்

Ø  இடைச்சொல், உரிச்சொல்,ஆகியவற்றை பற்றி அறிதல்

ஆசிரியர் குறிப்பு                     :

(ஆசிரியர் செயல்பாடு )

Ø  சிறுபஞ்ச மூலம் ஆசிரியர் குறிப்பு, நூற் குறிப்பு பற்றிக் கூறல்

Ø  செய்யுளினை சீர் பிரித்து வாசித்தல்

Ø  செய்யுளின் பொருள் கூறல்

Ø  செய்யுளினை இனிய இராகத்தில் பாடுதல்

Ø  புத்தகம் அவசியம் உணர்தல்

Ø  அறிஞர் அண்ணாவின் பேச்சு அறிதல்

Ø  புத்தகங்கள் நம் வாழ்வினை செம்மையாக்குபவை என்பதனை கூறல்

Ø  இலக்கண வகை சொற்களைப் பற்றி அறிதல்

Ø  இடைச்சொல் உரிச்சொல் பற்றிக் கூறல்

Ø  இடைச்சொல், உரிச்சொல் பயன்பாடு பற்றிக் கூறல்

கருத்து  வரைபடம்                   :

சிறு பஞ்ச மூலம்





வீட்டிற்கோர் புத்தக சாலை

 

இடைச்சொல்- உரிச்சொல்

 

விளக்கம்  :

( தொகுத்தல் )

சிறு பஞ்ச மூலம்

Ø  ஆசிரியர் : காரியாசன்

Ø  சிறு பஞ்ச மூலம் – ஐந்து சிறு வேர்கள்

Ø  கண்டங்கத்திரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி

Ø  பூக்காமல் காய் காய்க்கும் மரங்கள் உள்ளன

Ø  விதை விளைக்காமலே விதைக்கும் தானே வளரும் விதைகள் உள்ளன.

Ø  நன்மை தீமைகளை உணர்ந்த இளையோரும் உளர்.

Ø  மேதையர் பிறர் உணர்த்தாமல் தாமே உணருவர்

வீட்டிற்கோர் புத்தகசாலை

Ø   அண்ணாவின் வானொலி உரைத் தொகுப்பு

Ø  வீட்டிற்கோர் புத்தகசாலை என்ற இலட்சியம்

Ø  பாத்திரங்களுக்கு கொடுக்கும் இடங்களை புத்தகங்களுக்கும் தருக

Ø  வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தகங்களுக்கு தர வேண்டும்.

Ø  மக்கள் மனதில் உலக அறிவு புக வேண்டும்.

Ø  அடிப்படை உண்மைகளாவது அறிவிக்கும் நூல்கள் வீட்டில் இருக்க வேண்டும்.

இடைச்சொல் – உரிச்ச்சொல்

Ø  இடைச்சொற்களின் வகைகள்

o    வேற்றுமை உருபுகள் – ஐ,ஆல்,கு,இன்,அது,கண்

o    பன்மை விகுதிகள் – கள்,மார்

o    கால இடைநிலைகள் – கிறு, கிண்று

o    பெயரெச்ச,வினையெச்ச விகுதிகள் – அ,உ,இ,மல்

o    எதிர்மறை இடைநிலைகள் – ஆ,அல்,இல்

o    தொழிற் பெயர் விகுதிகள் – தல்,அம்,மை

o    வியங்கோள் விகுதிகள் – க.இய

Ø  உரிச்சொற்கள்

o    இசை,குறிப்பு,பண்பு என்னும் பொருள்களுக்கு உரியதாய் வரும்.

o    உரிச்சொற்கள் ஒவ்வொன்றும் தனித்த பொருள் உடையவை.

o    செய்யுளுக்கே உரியன.

o    கடி,உறு,தவ,நனி

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

சிறுபஞ்சமூலம்


வீட்டிற்கோர் புத்தகசாலை


இடைச்சொல் - உரிச்சொல்



·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                     :

Ø  சிறு பஞ்ச மூலம் பற்றி அறிதல்

Ø  சிறு பஞ்ச மூலம் செய்யுள் பகுதியினை சீர் பிரித்து வாசித்தல்

Ø  செய்யுளின் பொருள் அறிதல்

Ø  செய்யுள் கூறும் கருத்துகளை அன்றாட வாழ்வில் பின்பற்றுதல்

Ø  புத்தகத்தின் அவசியம் உணர்தல்

Ø  அண்ணாவின் உரையினை பின்பற்றுதல்

Ø  வீட்டில் புத்தகங்களை வைக்கும் பழக்கம் பின்பற்றுதல்

Ø  இலக்கண வகை சொற்களை அறிதல்

Ø  இடைச்சொற்கள் பற்றி அறிதல்

Ø  இடைச்சொற்களின் வகைகளை அறிந்து தொடர்களில் பயன்படுத்துதல்

Ø  உரிச்சொற்கள் பற்றி அறிதல்

Ø  உரிச்சொற்கள் பயன்பாடு பற்றி அறிதல்

 

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  சிறு பஞ்ச மூலம் – இயற்றியவர் யார்?

Ø  வீட்டிற்கோர் புத்தக சாலையின் யாருடைய வானொலி உரை கொடுக்கப்பட்டுள்ளது?

Ø  தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?

MOT

Ø  சாதனைக்கு வயது தடையில்லை என்பது குறித்து கூறுக.

Ø  அண்ணாவின் சில பொன்மொழிகளைக் கூறுக

Ø  இடைச்சொல்லின் வகைகள் கூறுக

HOT

Ø  விதைக்காமலே முளைக்கும் விதைகள் – இத்தொடரின்வழிச் சிறுபஞ்சமூலம் தெரிவிக்கும் கருத்து யாது?

Ø  நூலகம், நூல் குறித்து அண்ணா கூறுவது யாது?

Ø  தான் என்னும் இடைச்சொல்லை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

 

கற்றல் விளைவுகள்                  :

Ø  அற இலக்கியத்தின் எளிய, செம்மையான மொழிநடையையும், கருத்துச் செறிவையும் படித்து வாழ்வில் பண்பை மேம்படுத்துதல்

Ø  நூலகத்தின் பயனறிந்து பயன்படுத்துதல்,பிறரையும் படிக்க வழிகாட்டுதல்,படித்தவற்றை வாழ்வில் பின்பற்றுதல்

Ø  இலக்கணமறிந்து பேச்சிலும், எழுத்திலும் முறையாகப் பயன்படுத்துதல்

தொடர் பணி                            :

Ø   புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post