நாள் : 19- 09-2022 முதல் 23 - 09-2022
மாதம் : செப்டம்பர்
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. திருப்புதல் இயல் 1 முதல் 4 வரை
பொது நோக்கம் :
Ø இயல் – 1 முதல் 4 இல்
உள்ள பாடப்பகுதிகளில் உள்ள கற்றல் விளைவுகளை மாணவர்கள் அறிதல்
Ø மாணவர்களை முதல் பருவத்
தேர்வுக்கு தயார் செய்யும் விதமாக அனைத்துப் பகுதிகளிலும் திருப்புதல் மேற்கொள்ளல்
Ø மனப்பாடப் பாடல், ஒரு
மதிப்பெண் வினாக்கள், குறு வினாக்கள், சிறுவினாக்கள் என வினாக்களுக்கு விடை எழுதுவதில்
பயிற்சி அளித்தல்
Ø மொழித் திறன் பயிற்சிகளில்
மாணவர்களை பயிற்சி பெற வைத்தல்
சிறப்பு நோக்கம் :
Ø காலாண்டு
தேர்வுக்குரிய பாடப்பகுதிகளில் திருப்புதல் மேற்கொள்ளல்.
Ø அனைத்து
இயல்களில் உள்ள செய்யுள் பகுதிகளில் எதுகை, மோனை, இயைபு நயங்களை காணுதல்
Ø தமிழ்மொழி
வாழ்த்து, ஓடை, னோயும் மருந்தும், கல்வி அழகே அழகு, திருக்குறள் போன்ற மனப்பாடப்பகுதிகளில்
போதிய பயிற்சி வழங்கி மனனம் செய்தல்.
Ø சில
முக்கிய வினாக்களில் பயிற்சி வழங்குதல்
o தமிழ்
எங்கு புகழ் கொண்டு வாழ்கிறது?
o பாரதியார்
தமிழை வண்மொழி என அழைக்கக் காரணம் என்ன?
o செய்யுளில்
மரபுகளை ஏன் மாற்றக் கூடாது?
o தமிழில்
ஏற்பட்ட உருவ மாற்றகளை எழுதுக.
o தற்கால
தமிழ் வளர்ச்சிக்கு நீங்கள் செய்ய வேண்டிய பணிகளாக கருதுவன யாவை?
o எழுத்துகளின்
பிறப்பு என்றால் என்ன?
o ஓடையின்
பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை?
o புயல்
காற்றினால் தொண்டைமான் நாட்டில் ஏற்பட்ட அழிவு யாது?
o நீர்
நிலைகள் குறித்து சியாட்டல் கூறியுள்ளவற்றைத் தொகுத்து எழுதுக.
o ஏவல்
வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
o விளையாட்டுப்
போட்டியில் வெற்றி பெற்ற உன் நண்பனைப் பாராட்டி கடிதம் எழுதுக.
o சான்றோருக்கு
அழகாவது எது?
o நோயின்
மூன்று வகைகள் யாவை?
o நோய்
வராமல் தடுக்கும் வழிமுறைகளாக நீங்கள் கருதுவன யாவை?
o பள்ளி
குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை?
o வினையெச்சத்தின்
வகைகளை விளக்குக.
o நீதிநெறி
விளக்கம் கூறும் பாடல் கருத்தினை விளக்கி எழுதுக.
o பகைவர்களிடம்
நாம் நடந்து கொள்ள வேண்டிய முறை யாது?
o காப்பியக்
கல்விக் குறித்து திரு.வி.க. கூறும் செய்திகளை தொகுத்து எழுதுக.
o உடனிகழ்ச்சி
பொருள் என்றால் என்ன?
o நூலகம்
என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.
Ø இவை
போன்ற சில தேர்வுக்குரிய முக்கிய வினாக்களில் பயிற்சி வழங்குதல்