8TH - TAMIL - NOTES OF LESSON - SEPTEMBER - 2ND WEEK

 

நாள்                :           12- 09-2022 முதல்  16- 09-2022       

மாதம்                :           செப்டம்பர்

வாரம்               :             இரண்டாம் வாரம்                                        

வகுப்பு              :           எட்டாம் வகுப்பு  

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :                                       1. ஆன்ற குடிப்பிறத்தல்

                                                                            2. வேற்றுமை

அறிமுகம்                 :

Ø  நன்னெறி கதையினைக் கூறி அறிமுகம் செய்தல்

Ø  சொற்களின் வகைகளைக் கேட்டு அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி

நோக்கம்                                   :

Ø  வாழ்க்கை நிகழ்வுகள் மூலம் வாழ்வியல் விழுமியங்களை அறிதல்

Ø  பொருள் வேறுபாடுகளை உணர்த்துவதில்  வேற்றுமை உருபுகளின் பங்கினை அறிந்து பயன்படுத்துதல்

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  நீதி நெறி கதைகளைக் கூறல்

Ø  வாழ்வின் விழுமியங்களை கூறல்

Ø  பெயர்ச்சொல்லை வேறுபடுத்துவது வேற்றுமை எனக் கூறல்

Ø  பெயர்ச்சொல்லோடு வரும் அசைகள் வேற்றுமை உருபுகள்

Ø  வேற்றுமையின் வகைகளைக் கூறல்

Ø  வேற்றுமை உருபுகளை எடுத்துக்காட்டுடன் விளக்குதல்

கருத்து  வரைபடம்                   :

ஆன்ற குடிப்பிறத்தல்




வேற்றுமை

 

விளக்கம்  :

( தொகுத்தல் )

ஆன்ற குடிப்பிறத்தல்

Ø  ஆசிரியர் குறிப்பு :

o    பெயர் : பி.ச.குப்புசாமி

o    தொடக்கப் பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றியவர்.

o    வாழ்வில் விழுமியங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும்

o    அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் என்னும் திருக்குறளின் உண்மை வாழ்க்கை நிகழ்வினை கூறல்

o    திருக்குறள் மனித வாழ்வியளோடு தொடர்புடையது என்பதனை உணர்த்துதல்

        

         வேற்றுமை

Ø  பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது வேற்றுமை

Ø  பெயர்ச்சொல்லுடன் இணைக்கப்படும் அசைகள் வேற்றுமை

Ø  வேற்றுமை எட்டு வகைப்படும்

Ø  முதல் வேற்றுமை – எழுவாய் வேற்றுமை

Ø  இரண்டாம் வேற்றுமை – ஐ

Ø  மூன்றாம் வேற்றுமை – ஆல்

Ø  நான்காம் வேற்றுமை -கு

Ø  ஐந்தாம் வேற்றுமை – இன்

Ø  ஆறாம் வேற்றுமை – அது

Ø  ஏழாம் வேற்றுமை – கண்

Ø  எட்டாம் வேற்றுமை – விளி வேற்றுமை

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

ஆன்ற குடிப்பிறத்தல்


வேற்றுமை



·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                     :

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  சிறு சிறு வாக்கியங்களை வாசித்தல்

Ø  வாழ்வின் விழுமியங்களை  அறிதல்

Ø  வேற்றுமையை உணர்தல்

Ø  வேற்றுமையின் வகைகளை அறிதல்

Ø  நடைமுறை உதாரணங்களுடன் வேற்றுமை உருபுகளை விளக்குதல்

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  ஆன்ற குடிப்பிறத்தல் என்ற கதையின் ஆசிரியர் _________

Ø  வேற்றுமை என்பது _________

MOT

Ø  ஆன்ற குடிப்பிறத்தல் என்ற கதையின் மையக் கருத்து யாது?

Ø  வேற்றுமை உருபுகள் என்ப்படுவது யாது?

HOT

Ø  நீங்கள் தவறு செய்யும் மாணவனை எவ்வாறு நல்வழிப்படுத்துவீர்கள்?

Ø  வேற்றுமை உருபுகளுக்கு எடுத்துக்காட்டுகள் தந்து விளக்குக

கற்றல் விளைவுகள்                  :

Ø  807 – கதைகள், பாடல்கள், கட்டுரைகள் போன்ற பல்வேறு வகைப்பட்டவற்றை படிக்கும் போது அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதலும், ஊகித்தறிதலும்.

Ø  மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றை தம் மொழியில் எழுதும் போது பயன்படுத்துதல்

தொடர் பணி                            :

Ø   பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருக

Ø   திருக்குறளின் சிறப்புகளை அறிந்து அவற்றை எழுதி வருக

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post